முதன்மை பட்டியைத் திறக்கவும்

இராமப்பூர் மாவட்டம்

இராமப்பூர் மாவட்டம் அல்லது ராம்பூர் மாவட்டம்(இந்தி: रामपुर ज़िला, உருது: رام پور ‏ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ராம்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் மோராதாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 2,367 கிமீ².

Uttar Pradesh district location map Rampur.svg
இராமப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மொராதாபாத்
தலைமையகம்ராம்பூர், உத்தரப்பிரதேசம்
பரப்பு2,367 km2 (914 sq mi)
மக்கட்தொகை2,335,398 (2011)
படிப்பறிவு55.08%
மக்களவைத்தொகுதிகள்ராம்பூர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இராமப்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,335,398.[1] இது தோராயமாக லாத்வியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 194வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 987 inhabitants per square kilometre (2,560/sq mi).[1] மேலும் இராமப்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 21.4%.[1]இராமப்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் இராமப்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 55.08%.[1]

அரசியல்தொகு

இந்த மாவட்டத்தை சுவார், சம்ரவுவா, பிலாஸ்பூர், ராம்பூர், மிலக் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.[3] இந்த மாவட்டம் ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமப்பூர்_மாவட்டம்&oldid=1838939" இருந்து மீள்விக்கப்பட்டது