காயங்குளம் கொச்சுண்ணி (2018 திரைப்படம்)

காயங்குளம் கொச்சுண்ணி (மலையாளம்: കായംകുളം കൊച്ചുണ്ണി, Kayamkulam Kochunni) 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தில் நிவின் பாலி மோகன்லால் மற்றும் பிரியா ஆனந்து ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநர் ரோஷன் ஆன்ரே என்பவர் ஆவார். இப்படம் 2018 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படம் ஆகும்.[1]

காயங்குளம் கொச்சுண்ணி
இயக்கம்ரோசன் ஆன்ட்ரே
தயாரிப்புகோகுலம் கோபாலன்
இசைகோபி சுந்தர்
நடிப்புநிவின் பாலி
மோகன்லால்
பிரியா ஆனந்து
வெளியீடு11 அக்டோபர் 2018 (2018-10-11)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு45 கோடிகள்
மொத்த வருவாய்100கோடிகள்

கதைக் கரு

தொகு

இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி என்பவர் எழுதிய ஐதீகமாலா என்ற நாட்டுப்புறவியல் கதையாடல் புத்தகத்தொகுப்புகளில் ஒன்றான காயங்குளம் கொச்சுண்ணி என்பதிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இக்கதையானது பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக் காலத்தில் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

சந்தையின் நடுவில் இருக்கும் கிணற்றினுள் சிறுவன் தவறி விழுந்துவிடுகிறான். அவனைக் காப்பாற்ற கொச்சுண்ணி (நிவின் பாலி) கிணற்றின் உள்ளே குதித்து பையனைக் காப்பாற்றுகிறான். அக்கிணற்றினுள் பெரிய மலைப்பாம்பு இருக்கிறது. பையனை பாம்பிடமிருந்து காப்பாற்றும் வேளையில் பாம்பையும் யாரும் கொல்லாமல் காப்பாற்றுகிறான். ஆனால் அவ்வூரைச் சார்ந்த உயர் இன மக்கள் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த பையன் தண்ணீரில் விழுந்ததால் அக்கிணறை மூட உத்தரவிட்டு, மூடியும் விடுகிறார்கள்.

கொச்சுண்ணி பையனைக் காப்பற்றியது கண்டு ஆங்கிலேய அதிகாரி வெகுமதி அளிக்கிறார். ஆனால் கொச்சுண்ணி சாலையில் செல்லும் பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுக்கிறான். அதனால் அவனுக்கு ஆங்கிலேய அரசு தூக்குத் தண்டனை வழங்குகிறார்கள். அத்தண்டனையிலிருந்து அவன் தப்பித்தானா இல்லையா? என்பதே கதை.

தொடர்புடைய திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு