ஐதீகமாலா

மலையாள நாட்டுப்புறவியல் கதைத் தொகுப்பு

ஐதீகமாலா (Aithihyamala) என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையாடல் புத்தகங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் மலையாளம் மற்றும் சமசுகிருதம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டவையாகும். பொதுவாக இவற்றில் உயிர்கள், புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களை காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக் கலை, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேதம் பற்றிய தெளிவுகள், அரண்மணையாளர்கள், யானைகள் மற்றும் யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 126 புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.[1]


இப்புத்தகங்கள் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பாஷாபோசினி (Bhashaposhini) என்ற இலக்கிய இதழ் போன்றவற்றில் பிரசுரமானதை தொகுத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமாக காயங்குளம் கொச்சுண்ணி (Kayamkulam Kochunni), கடமாத்து காதனார் (Kadamattathu Kathanar), மற்றும் பன்னிரண்டு குழந்தைகள் பற்றிய பறையிபெற்ற பந்திருகுலம் போன்றவை முக்கியமானவையானகும். [2] காயங்குளம் கொச்சுண்ணி என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "Retelling culture". articles தி இந்து. 2006-10-01. Archived from the original on 2006-10-10. https://web.archive.org/web/20061010112620/http://www.hindu.com/lr/2006/10/01/stories/2006100100220300.htm. பார்த்த நாள்: 2012-02-23. 
  2. "Kottarathil Sankunni [കൊട്ടാരത്തില്‍ ശങ്കുണ്ണി / கொட்டாரத்தில் ஶங்குண்ணி / कोट्टारत्तिल् शंकुण्णि]". Cs.nyu.edu. 1937-07-22. 2012-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதீகமாலா&oldid=3620736" இருந்து மீள்விக்கப்பட்டது