பறையிபெற்ற பந்திருகுலம்
'பறையிபெற்ற பந்திருகுலம்' (Parayi Petta Panthirukulam), கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 'கொட்டாரத்தில்' என்ற ஊரில், 1855–1937 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கதகளி நடன கலைஞரும், ஓட்டன் துள்ளல் அல்லது ஓட்டம் துள்ளல் என்ற நாட்டுப்புற நாடகவியலாளரும், எழுத்தாளருமான 'கொட்டாரத்தில் சங்குண்ணி' (Kottarathil Sankunni) என்பவரால் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையாடல் புத்தகமாகும். 'மலையாள மனோரமா' எனும் தகவல் புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர் இவர். இவரால் எழுதப்பட்ட 'ஐதீகமாலா' எனற தொகுப்பில் உள்ள புத்தகங்கங்கள் எட்டுத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 126 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கதையின் சாரம்
தொகுசெவி வழிக் கதையாடல் படி பொது ஊழிக் காலத்தில் இந்திய நாட்டின் உஜ்ஜைனி என்ற பகுதியை ஆண்ட விக்ரமாதித்தியனுடைய அரசவையில் நவரத்தினங்களாக (Navaratnas) இருந்த அமைச்சரவைப் புலவர்கள் ஒன்பது பேர். இவர்களில் ஒருவரான 'வரருசி' (Vararuchi) என்பவர் தென் திசை நோக்கிவந்தபோது, ஒரு வனத்தில், மரத்தின் கீழ் விளக்கைக் கையிலேந்திய ஒரு பேரழகுப் பெண் நிற்பதைக்கண்டு அவள் மேல் மோகம் கொள்கிறார். வேதங்களை ஓதும் 'நம்பூதிரி' இனத்தைச் சார்ந்த 'வரருசி', தான் கண்ட 'பறயி' குலப் பெண்ணான தேவதையைப் போன்ற அந்தப் பெண்ணை மண முடித்துக் கொள்கிறார். அவர்கள் இருவரும் கோவில் யாத்திரை செல்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. வரருசி, அக்குழந்தைகள் ஒவ்வொருவரையும் வேறுவேறு இனத்தவர்களிடம் வளர்வதற்காக ஒப்படைத்துக் கட்டளையிடுகிறார். பதினொரு குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளும் அம்மக்கள் கடைசியாகப் பிறந்த குழந்தையை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில் அக்குழந்தை, பிறக்கும்போதே வாய் இல்லாமல் ஊனத்துடன் பிறந்திருக்கிறது.
வரருசியும் அவரது மனைவியும் மேற்கொண்ட பாதயாத்திரை அதிகமாக பாரதப்புழா (Bharathappuzha) என்ற ஆற்றங்கரையில் நடப்பதாகக் கதையாடல் கூறுகிறது.
குழந்தைகள்
தொகு- 1. அக்கினிகோத்திரி (Mezhathol Agnihothri) இந்து சமய வேதம் ஓதுபவர். இனம் - நம்பூதிரி
- 2. பக்கனார் (Pakkanar) இனம் - கூடை முடைபவர்.
- 3. பெருந்தச்சன் கல்லில் சிற்பி. இனம் - விசுவகர்மன்
- 4. ராஜாகா [1] (Rajakan) இனம் - சலவைத் தொழிலாளி
- 5. வள்ளான் (Vallon) [2]
- 6. வடுதல நாயர் (Vaduthala Nair) இனம் - மருமக்கதாயம் முறையைக் கடைப்பிடிக்கும். நாயர்
- 7. உப்புக்கொட்டான் (Uppukoottan) இனம் - உப்பு நாக்கர்
- 8. அகவூர் சாத்தன் (Akavoor Chathan) [3]
- 9. காரைக்கால் அம்மா (Karaykkal Amma)
- 10. பானனார் (Pananaar) [4]
- 11. நாரந்த பரந்தன் (Naranath Bhranthan)
- 12. வாயில்லா குண்ணியப்பன் (Vayillakunnilappan)
பாடல் பெற்ற கோவில்கள்
தொகு- [4]
- புவனேசுவரி (Bhuvaneshvari)
- வாழப்பள்ளி கோவில் (Vazhappally Maha Siva Temple)
- (Mezhathur)
- [5]
- (Thriprayar Temple)
- [https://www.pilgrimaide.com/sree-vayillakunnilappan-temple.html}[தொடர்பிழந்த இணைப்பு]