வண்ணார்
வண்ணார் (Vannar) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். இச்சமூகத்தினர் இந்தியாவின், வட மாநிலங்களில் தோபி என்ற பெயரில், இலங்கையில் ராஜாகா என்ற பெயரிலும் வசிக்கின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
20,72,625 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, இலங்கை | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தோபி, ராஜாகா |
இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1]
சொற்பிறப்பு
வண்ணார் என்ற சொல் வண்ணம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இதற்கு "அழகு" என்று பொருள்படும்.[2] இச்சமூகத்தினர் கட்டாடி என்னும் பெயரை முதன்மையாக பயன்படுத்துகின்றனர்,[3] இதற்கு பேயோட்டுபவர்கள் என்று பொருளாகும்.[4]
வண்ணார்கள் பாரம்பரியமாக தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றான, மருத நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[5] வண்ணார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டனர்.[6] வண்ணார்கள் வீட்டு ஊழியர்களாகவும் பணியாற்றினர்.
வரலாறு
வண்ணார் மக்கள் தமிழ்நாட்டில் 5 விழுக்காடு உள்ளனர். அவர்கள் தங்களை தமிழக அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தியும், அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. இதன்முலம் அரசியல், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு முன்னுரிமையும் கிடைப்பதில்லை.[7]
தொழில்
இவர்கள் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவர்களை வண்ணார் அல்லது தோபி என்கிற பெயர்களிலும் அழைப்பர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர்.[8][9]
பெயர்கள்
வண்ணார் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது அவை ஈரங்குலி வண்ணார், பாண்டிய வண்ணார், தீண்டு வண்ணார், தீண்டா வண்ணார், தொண்டைமான் வண்ணார்.[10]
மக்கள்தொகை
தமிழகத்தில் வண்ணார்கள் 20,72,625 பேர் வசிக்கின்றனர்.[11]
குறிப்பிடத்தக்க நபர்கள்
மேற்கோள்கள்
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ Fuchs, Stephen (1981) (in en). At the bottom of Indian society: the Harijan and other low castes. Munshiram Manoharlal. பக். 226. https://books.google.com/books?id=wZI9AAAAMAAJ.
- ↑ https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF
- ↑ David, Kenneth (2011-06-03) (in en). The New Wind: Changing Identities in South Asia. Walter de Gruyter. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110807752. https://books.google.com/books?id=Vp_la9QMGIQC.
- ↑ Ramaswamy, Vijaya (2016-09-26) (in en). Women and Work in Precolonial India: A Reader. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351507406. https://books.google.no/books?id=TzxwDQAAQBAJ&pg=PT103&dq=vannan&hl=en&sa=X&ved=0ahUKEwjx___gxObfAhXJAxAIHWCAB8oQ6AEISzAF#v=onepage&q=vannan&f=false.
- ↑ Cartman, James (1957). Hinduism in Ceylon. M.D. Gunesena. பக். 134. https://books.google.com/books?id=EnhAAAAAIAAJ.
- ↑ க.காமராசன். "தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் - கீற்று". keetru.com.
- ↑ http://www.kalachuvadu.com/archives/issue-158/வண்ணார்-கிளர்ச்சி
- ↑ "தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்". Panuval Book Store.
- ↑ http://tamil.thehindu.com/general/literature/பார்க்கத்-தகாதவர்களாக்கப்பட்ட-மனிதர்கள்/article6917501.ece
- ↑ அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்
- ↑ ஆறுமுக நாவலர் , தொகுப்பாசிரியர் (1990). திருத்தொண்டர் வரலாறு அல்லது பெரிய புராண வசன காவியம். சரசுவதி மஹால் நூலகம் , தஞ்சாவூர். பக். 23. https://books.google.co.in/books?id=wtgZAAAAIAAJ&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwi1-7G5hNTrAhUWb30KHT92AFkQ6AEwBHoECAUQAQ. "திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இவர் காஞ்சிபுரத்து வண்ணார்"