வலங்கை (Valangai அல்லது right hand) என்பது தமிழ்நாட்டில் சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவு ஆகும். இந்தப் பிரிவு பண்டைக் காலத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட, இருந்து வந்தது ஆகும். இந்திய விடுதலைக்குப் பிறகான காலகட்டத்துக்குப் பிறகு இந்த, வேறுபாடுகள் நடைமுறையில் இருந்து மறைந்துவிட்டன.[1][2] இதை ஒத்த இன்னொரு பிரிவு இடங்கை ஆகும்.

வலங்கையில் இருந்த சாதிப் பிரிவுகள், வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பணிகளை மேற்கொண்ட சாதிகளாகவும், அதே நேரத்தில் இடங்கை சாதிப் பிரவுகளானது வேளாண்மை சாராத தொழில்களைச் செய்பவர்களான உலோகத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைவினை உற்பத்தித் தொழிலை செய்யும் சாதிகளைக் இருந்தது.[3]

வலங்கைப் பிரிவானது எண்ணிக்கை அடிப்படையில் இடங்கைப் பிரிவினரைவிட கணிசமாக உயர்ந்த பிரிவாக இருந்தது. இடங்கைப் பிரிவில் ஆறு சாதிப் பிரிவுகளும் வலங்கைப் பிரிவானது அறுபது சாதிகளைக் கொண்ட பிரிவாக இருந்தது. வலங்கைப் பிரிவானது அரசியல் ரீதியாக, இடங்கைப் பிரிவை விட நல்லமுறையில் ஒழுங்கமைக்கப்பட்டதாக இருந்தது.[4]

ஆபே டூபே என்னும் 19 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர் வலங்கைப் பிரிவைப் பற்றி எழுதும்போது, வலங்கைப் பிரிவின் தலையாய ஆதரவாளர்களாக பறையர் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக, அவர்கள் பூண்டிருந்த வலங்கையின் நண்பர் என்ற பொருள் தரத்தக்க ‘வலங்கை-முகத்தார்’, என்ற பட்டமே ஆதாரம் என்கிறார்.[5]

சோழர் காலத்தில், இடங்கை மற்றும் வலங்கைப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தொண்ணூறு எட்டு சாதிகளைக் கொண்டிருந்தன, ஆனால் 19 ஆம் நூற்றாண்டில், வலங்கைப் பிரிவு 60 சாதிகள் கொண்டதாகவும், இடங்கைப் பிரிவு ஆறு சாதிகளைக் கொண்டதாக மட்டுமே இருந்தது.

வரலாறு தொகு

இப்பிரிவின் தோற்றம் பற்றி மரபுவழிக நிலவும் கதை பின்வறுமாறு; உள்நாட்டு சரக்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்களுக்கும், ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுவந்த வளஞ்சியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு தகராறில், சோழ மன்னன் தலையிட்டு காஞ்சிபுரம் கோயிலில் சமாதானம் செய்து வைத்ததாகவும், அப்போது ஒரு பிரிவினர் கடவுளின் சன்னிதானத்துக்கு இடது புறமும், மற்றொரு பிரிவினர் வலது புறமும் நின்று அரசனின் இடது, வலது கைகளில் இருந்து வெற்றிலை, பாக்கு பெற்றதாகவும், அன்றிலிருந்து அவர்கள் வலங்கையர் இடங்கையர் என்று அழைக்கப்பட்டதாக மரபுக் கதை உண்டு.[6]

பகைமை தொகு

நிரந்தரமாகக் குடியிருந்த விவசாயிகளுக்கும், இடம் விட்டு இடம் பெயர்ந்த கைவினைஞர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கும் இடையிலான பகைமையின் வெளிப்பாடே வலங்கை, இடங்கை பாகுபாடுகள் அதாவது நிலை குடிகளுக்கும், அலைகுடிகளுக்கும் இடையிலான பேதமே இந்தப் பகையையின் அடிப்படை என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.[6]

காலப்போக்கில் இப்பிரிவினருக்கு இடையேயான பகை வெகுவாக முற்றியது எனவும் சோழர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வலங்கை இடங்கை பிரிவினர் ஒரே கோயிலில் இறைவனை தரிசிக்கமாட்டார்கள், சமய சடங்குகளுக்காக ஒரே மண்டபத்தை பயன்படுத்த மாட்டார்கள், தேவதாசிகள் நடனமாடும் பெண்கள்கூட இரு பிரிவினருக்கும் வேறுவேறுதான் என்றும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.[6]

சோழர் காலத்தில் வலங்கையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அப்போது அப்பிரிவில் பெரும் விவசாயிகள் (தமிழகத்தில் வேளாளர்கள், கர்நாடகத்தில் ஒக்காலியர், ஆந்திராவில் ரெட்டியார்கள்) இடம் பெற்றிருந்தனர். ஆனால் விசயநகர ஆட்சிக் காலத்தில் இடங்கையினர் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தனர். அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி துவங்கியபோது வலங்கை இடங்கை மோதல்களில் சென்னை இரத்தம் பார்த்தது. ஆங்கிலேயர்கள் அதுவரை பாரம்பரியமாக மன்னர்களிடம் மரியாதே பெற்றுவந்த வலங்கையினரை புறக்கணித்து, தங்களுக்கு இணக்கமாக இருந்த வணிகப் பிரிவினராக இடங்கையினரை ஆதரித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் தொடர்ச்சியாக இரு பிரிவினருக்கு இடையில் கலவரங்கள் நடந்து வந்துள்ளன, அவை சென்னை பிளாக் டவுன் கலவரம் 1652, சென்னை பெத்தநாயக்கர் பேட்டை மோதல் 1707, சென்னை பிளாக் டவுன் கலவரம் 1789 போன்றவை ஆகும்.[6]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. G. S.Ghurye, Pg 359
  2. E. Alcock, Susan; Terence N. D'Altroy; Kathleen D. Morrison; Carla M. Sinopoli (2001). Empires: Perspectives from Archaeology and History. Cambridge University Press. பக். 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-77020-0. 
  3. Gift Siromoney (1975). "More inscriptions from the Tambaram area". Madras Christian College Magazine, Vol. 44, 1975. Madras Christian College Magazine. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  4. Caste Ideology and Interaction, Pg 105
  5. Hindu manners, customs and ceremonies. Dubois, J. A. (Jean Antoine),1899(Page.25.)
  6. 6.0 6.1 6.2 6.3 நவீனத் தமிழகத்தில் சமூக வன்முறைகள் (2002). நவீனத் தமிழகத்தில் சமூக வன்முறைகள். மனோரமா இயர்புக் 2002. பக். 250-253. 

மேற்கோள்கள் தொகு

  • Ghurye, G. S. (1991). Caste and Race in India. Bombay: Popular Prakashan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலங்கை&oldid=3803273" இலிருந்து மீள்விக்கப்பட்டது