இடங்கை

ஒரு சாதித் தொகுப்பு

இடங்கை (Idangai அல்லது left hand) என்பது தமிழ்நாட்டில் சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரிவு ஆகும். இந்தப் பிரிவு பண்டைக் காலத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட, இருந்து வந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகான காலகட்டத்துக்குப் பிறகு இந்த, வேறுபாடுகள் நடைமுறையில் இருந்து மறைந்துவிட்டன.[1][2] இதை ஒத்த இன்னொரு பிரிவு வலங்கை ஆகும்.

உறுப்பு சாதிகள் தொகு

பண்டைய காலங்களிலிருந்து, இடங்கை மற்றும் வலங்கை சாதிப் பிரிவுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.[3] வலங்கைப் பிரிவானது எண்ணிக்கை அடிப்படையில் இடங்கைப் பிரிவினரைவிட கணிசமாக உயர்ந்த பிரிவாக இருந்தது. இடங்கைப் பிரிவில் ஆறு சாதிப் பிரிவுகளும், வலங்கைப் பிரிவானது அறுபது சாதிகளைக் கொண்ட பிரிவாக இருந்தது.[1] இந்தப் பிரிவுகளில் இடம்பெற்ற சாதிகளானது என்பது தெளிவற்றதாக உள்ளது. சில வட்டாரங்களில் இடங்கையாக கருதப்படும் சில சாதிகள் வேறு வட்டாரங்களில் வலங்கையாக கருதப்பட்டன.[4] வலங்கையில் இருந்த சாதிப் பிரிவுகள், வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பணிகளை மேற்கொண்ட சாதிகளாகவும், அதே நேரத்தில் இடங்கை சாதிப் பிரவுகளானது வேளாண்மை சாராத தொழில்களைச் செய்பவர்களான உலோகத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைவினை உற்பத்தித் தொழிலை செய்யும் சாதிகளைக் இருந்தது.[5]

இடங்கையில் உள்ள முக்கிய குழுக்கள் அஞ்சலார்/பஞ்சலார் என்று அழைக்கப்படும் ஐந்து சாதிகள். அதாவது:-

  • கண்ணர்
  • தட்டார்
  • ஆசாரி
  • கொல்லர்
  • தச்சன்

மேலும் சாதிகள் பல்வேறு காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டன.[6]

வலங்கைப் பிரிவானது அரசியல் ரீதியாக, இடங்கைப் பிரிவை விட நல்லமுறையில் ஒழுங்கமைக்கப்பட்டதாக இருந்தது.[7]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Ghurye (1991), ப. 359
  2. Alcock et al. (2001), ப. 269
  3. Ghurye (1991), ப. 358
  4. Yandell & Paul (2000), ப. 30
  5. Siromoney (1975)
  6. "The Right and Left hand divisions" (PDF). Shodhganga.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. McGilvray (1982), ப. 105

நூற்பட்டியல்

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடங்கை&oldid=3931119" இலிருந்து மீள்விக்கப்பட்டது