வீ. க. தனபாலன்
வீ. க. தனபாலன் அல்லது வீரசங்கிலி கண்ணையா தனபாலன் (26 ஜனவரி 1954 - 11 நவம்பர் 2024) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் மதுரா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருது பெற்ற இவர் “வீ. கே. டி. பாலன்” என்கிற பெயரால் அறியப்படுகிறார்.
வீ. க. தனபாலன் | |
---|---|
கலைமாமணி வீ.கே.டி. பாலன் | |
பிறப்பு | திருச்செந்தூர், திருநெல்வேலி மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா | 26 சனவரி 1954
இறப்பு | 11 நவம்பர் 2024 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 70)
மற்ற பெயர்கள் | மதுரா பாலன் |
பணி | தலைவர் மதுரா குழும நிறுவனங்கள் |
பெற்றோர் | கன்னையா & இசக்கியம்மாள் |
வாழ்க்கைத் துணை | டி.சுசிலா |
பிள்ளைகள் | சரண்யா (மகள்) , ஸ்ரீகரன் (மகன்), |
விருதுகள் | கலைமாமணி விருது, லிம்கா சாதனையாளர் − |
படைப்புகள்
தொகு- பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட “வெளிச்சத்தின் மறுபக்கம்” எனும் விழிப்புணர்வுத் தொலைக்காட்சித் தொடரை ஆறு ஆண்டுகள் இயக்கியுள்ளார்.[1][2]. மக்கள் தொலைக்காட்சியில் இவரது நெறியாளுகையில் ”இவர்கள்” எனும் தொடர் ஒளிபரப்பாகிறது.
- “சொல்லத்துடிக்குது மனசு” என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.
- தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய சுற்றுலா வழிகாட்டி நூல்கள் இவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறப்புகள்
தொகு- இணையத்தில் ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் முதன் முதலாக "தமிழ்க்குரல்" எனும் இணைய வானொலியை 2001 ஆம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி ஆரம்பித்தார்.[3]
- மதுரா வெல்கம் என்னும் தமிழ்நாடு சுற்றுலா கையேட்டின் ஆசிரியராக உள்ளார். இந்தச் சுற்றுலா வழிகாட்டி நூல் மூன்று மாதங்களுக்கொரு முறை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-08-29. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
வெளி இணைப்புகள்
தொகு- வாழ்க்கை வரலாறு (ஆங்கிலம்) பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்