விழிப்புணர்வு

விழிப்புணர்வு என்பது ஒரு நிகழ்வு பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ, உணர்வுகள் பற்றியோ சரியான, முறையான, உண்மையான நிலையை ஏற்றுக் கொள்ளக் கூடிய அல்லது உணரக் கூடிய நிலை அல்லது ஆற்றலைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல்லாகும். நாம் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது எமது விழிகள் மூடப்பட்டு வெளிக் காட்சிகள் எதுவும் எமது கண்களுக்கு தெரியாததுப் போன்று, மனிதர்கள் தங்கள் வேலைப் பளு மற்றும் வேறுவிதச் சிந்தனைச் சிதறல்களால் தாம் அறிய வேண்டியவற்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும், பெற வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், தம்மை ஏமாற்றுவதை தாம் உணராமலும் இருக்கும் நிலையை, நித்திரையில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பதுப் போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பதே “விழிப்புணர்வு” ஏற்படுத்தல் ஆகும்.

ஒருவர் தனது பிரச்சினைகளில் இருந்து தானாகவே “விழிப்புணர்வு” அடையவும் முடியும். ஒருவர் மற்றொருவருக்கோ அல்லது ஒரு மக்கள் குழுமத்திற்கோ “விழிப்புணர்வு” ஏற்படுத்தவும் முடியும்.

,,,

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழிப்புணர்வு&oldid=3187812" இருந்து மீள்விக்கப்பட்டது