தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பாரம்பரியமுடைய கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பாகும்.

தோற்றம் தொகு

தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் எனும் பெயரில் 1955 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது‌.

சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 27-11-1956 ஆம் நாள் பதிவு செய்யப் பெற்றது. பின்னர் 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனும் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தலைவர், செயலாளர் தொகு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் தற்போது, திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகரும் [1]உறுப்பினர் - செயலாளராக முனைவர் ராமசுவாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.[2]

செயல்பாடுகள் தொகு

இந்த அமைப்பின் மூலம் கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. இது தவிர நலிவுற்ற கலைஞர்களுக்கு மாத உதவித்தொகை, நலிவுற்ற கலைஞர்களின் குடும்பத்திற்கான மாத உதவித் தொகை போன்று வேறு சில திட்டங்களின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

உசாத்துணை தொகு

ஆதாரங்கள் தொகு

  1. தினமணி நாளிதழ் செய்தி
  2. "தினகரன் நாளிதழ் செய்தி". Archived from the original on 2022-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.

வெளி இணைப்புகள் தொகு