சுட்ட பழம்
சுட்ட பழம் (Sutta Pazham) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் வயதுவந்தவர்களுக்காக நகைச்சுவை பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜி. கே இயக்கிய இப்படத்தில் மோகன், சுபா பூஞ்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தர். ஆர். என். ஆர். மனோகர், லிவிங்ஸ்டன், மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம். எசு. பாசுகர், அனு மோகன், குள்ளமணி, சௌந்தர், சாப்ளின் பாலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீ சாம் இசை அமைத்துள்ளார். சி. மாயா ஒளிப்பதிவையும், ஆர். கே. உதயகுமார் படத் தொகுப்பையும் செய்துள்ளனர். படம் 25 சூலை 2008 அன்று வெளியானது.[1][2]
சுட்ட பழம் | |
---|---|
இயக்கம் | ஜி. கே. |
தயாரிப்பு | பிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ் |
கதை | ஜி. கே. ஏ. எஸ். கண்ணன் (உரையாடல்) |
இசை | ஸ்ரீ சாம் (பாடல்கள்) இராஜ் பாஸ்கர் (பின்னணி இசை) |
நடிப்பு | மோகன் சுபா பூஞ்சா |
ஒளிப்பதிவு | சி. மாயா |
படத்தொகுப்பு | ஆர். கே. உதயகுமார் |
கலையகம் | பிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ் |
வெளியீடு | சூலை 25, 2008 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மோகன் நந்தகுமாராக (நந்து)
- சுபா பூஞ்சா காவல் ஆய்வாளர் வந்தனாவாக
- ஆர். என். ஆர். மனோகர் தேவாயல பாதிரியாராக
- லிவிங்ஸ்டன் காவல் ஆய்வாளர் பிரசாத்தாக
- மனோபாலா காவல் துணை ஆணையராக
- வெண்ணிற ஆடை மூர்த்தி மூர்த்தியாக
- எம். எசு. பாசுகர் குமாரசாமியாக
- அனு மோகன் மணியாக
- குள்ளமணி
- சௌந்தர் தலைமைக் காவலராக
- சாப்லின் பாலு மதுக்கடையில் உள்ளவராக
- உடுமலை ரவி மதுக்கடையில் உள்ளவராக
- சர்மிளா கீர்த்தியாக
- பாவா லட்சுமணன்
- நெல்லை சிவா
- ஜெமினி பாலாஜி
- செம்புலி ஜகன்
- கும்தாஜ்
தயாரிப்பு
தொகுபிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட சுட்ட பழம் படத்தை ஜி. கே இயக்கினார். மூத்த நடிகர் மோகன், இதற்கு முன் கடைசியாக அன்புள்ள காதலுக்கு (1999) படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் வழியாக அவர் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார். கதாநாயகியாக நடிக்க சுபா பூஞ்சா தேர்வு செய்யப்பட்டார். இப்படம் மூணார், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படமானது வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை-பரபரப்பூட்டும் திரைப்படம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர். ஆனால் படத்தில் எந்தவிதமான மோசமான தன்மையும் இல்லை.[3][4][5][6][7][8]
இசை
தொகுதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீ சாம் அமைத்தார். இசைப்பதிவில் ஐந்து பாடல்கள் உள்ளன, இது 16 சூலை 2008 அன்று சென்னையில் உள்ள ஹலோ எப். எம் வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் மோகன், ஷாம், எம். எசு. பாசுகர், திரைப்பட இயக்குனர் ஜி. கே, இசை அமைப்பாளர் ஸ்ரீ சாம், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.[9][10]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் சினேகன்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தேன் மழை" | |||||||||
2. | "சுட்ட பழம்" | |||||||||
3. | "குளிரடிக்குதடி" | |||||||||
4. | "அழகு அழகு" | |||||||||
5. | "உயிரிலே உயிரிலே" |
வெளியீடு
தொகுஇந்த படம் 25 சூலை 2008 அன்று மற்றொரு சிற்றின்பப் படமான பத்து பத்து படத்துக்கு போட்டியாக வெளியானது. அந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் தணிக்கை வாரியத்தால் வெட்டப்பட்டு, "ஏ" சான்றிதழ்கள் வழங்கப்படவை ஆகும். ஏனெனில் அவை அதிகப்படியான பாலியல், இரட்டை அர்த்த உரையாடல்களைக் கொண்டிருந்தன.[3][11][12]
குறிப்புகள்
தொகு- ↑ "Find Tamil Movie Sutta Pazham". jointscene.com. Archived from the original on 2 February 2012. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Suttapazham (2008) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ 3.0 3.1 "Sutta Pazham". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Mohan back with a bang". indiaglitz.com. 2 July 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Kokila back in Kannada". Bangalore Mirror. 21 September 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "சுபா புஞ்சா -மைக் மோகன்" [Shubha Poonja -Mike Mohan]. filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "'சுட்ட பழம்' கெட்ட படமா?" ['Sutta Pazham' a bad film ?]. Cinema Vikatan. 9 July 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Mike Mohan in 'Sutta Pazham'". cinesouth.com. Archived from the original on 12 December 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Suttapazham's audio launch". kollywoodtoday.net. 22 July 2008. Archived from the original on 22 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hello FM partners music launch of Tamil film Suttapazham". radioandmusic.com. 16 July 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Sex & sleaze is the flavour of the season". Sify. 22 July 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Mohan's 'Sutta Pazham' from 18 July". indiaglitz.com. 15 July 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.