பத்து பத்து
பத்து பத்து (Pathu Pathu) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சிற்றின்ப திரில்லர் திரைப்படம் ஆகும். சத்தியம் எழுதி இயக்கிய இப்படத்தில் சோனா ஹைடன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், கிருஷ்ணா, சஞ்சித், செங்கல்பட்டு மாறன், பத்மா நாராயணன், மணிமறன், சுவாமிநாதன், ஆஷிஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். ராஜேஸ்வரி ஞானசம்பந்தம் தயாரித்த இப்படத்திற்கு, எல். வைத்தியநாதனின் மகன் எல். வி. கணேசன் இசை அமைத்தார். இப்படமானது 25 சூலை 2008 அன்று வெளியானது. இது தெலுங்கில் மதன்மோகினி என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]
பத்து பத்து | |
---|---|
இயக்கம் | சத்யம் |
தயாரிப்பு | ராஜேஸ்வரி ஞானசம்பந்தம் |
கதை | சத்யம் |
இசை | எல். வி. கணேசன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சிறீ கணேசன் |
படத்தொகுப்பு | எம். ஜெயகுமார் |
கலையகம் | இந்தியன் டிரீம் மேக்கர்ஸ் |
வெளியீடு | சூலை 25, 2008 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சோனா ஹைடன் மோகியாக
- தலைவாசல் விஜய் சுப்புவாக
- போஸ் வெங்கட் வெங்கட்டாக
- கிருஷ்ணா பி. டி. அருணாக
- சஞ்சித் நிசாம் அலியாக
- செங்கல்பட்டு மாறன் ஜேப்படியாக
- பத்மா நாராயணன் வழக்கறிஞர் வெள்ளையாக
- மணிமாறன் சவ ஊர்வல நடனக் கலைஞராக
- சுவாமிநாதன் கண்ணனாக
- ஆஷிஷ் வினோத்தாக
- மூனாறு ரமேஷ் காவல் ஆய்வாளர் ரவியாக
- இரவிராஜ் கனகசபையாக
- மேனேஜர் சின்னா வெங்கட்டின் தந்தையாக
- இராஜதுரை
- அர்சவர்தன்
- சரத்பாபு
- வாசு சத்தீஷ்
- பூச்சி செந்தில்
- ரூபசந்திரன்
- அரும்பாக்க சௌந்தர்ராஜன்
- எஸ். ஐ. குமார்
- அபிநயசிறீ சிறப்புத் தோற்றத்தில்
- பூமிகா சிறப்புத் தோற்றத்தில்
- பிரியங்கா சிறப்புத் தோற்றத்தில்
- லக்சா சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
தொகுஇந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இரட்டை அர்த்த சிற்றின்ப பரபரப்பு படமான பத்து பத்து படத்தின் மூலம் இயக்குனராக சத்யம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகை சோனா ஹைடன் இல்லத்தரசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அவரின் இளம் உறவினரை காமவெறியுடன் பார்க்கும் வேடத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சஞ்சித், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த இசைக்கலைஞர் எல். வைத்தியநாதனின் மகன் எல். வி கணேசன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.[2][3][4]
இசை
தொகுதிரைபடத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 21 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், யுகபாரதி, முத்து விஜயன், ஜே. சலீம் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[5][6]
எண். | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "அலிபாபா அலிபாபா" | சங்கீதா | 4:41 |
2 | "மல்ல மல்ல" | வினயா | 4:54 |
3 | "பல்லவரம் பரங்கி" | சின்னப்பொண்ணு | 4:11 |
4 | "பூவும் பூவும்" | வினயா | 4:24 |
5 | "வாடா வாடா" | ரோஷினி | 4:59 |
வெளியீடு
தொகுஇந்த படம் 25 சூலை 2008 அன்று மற்றொரு சிற்றின்ப திரைப்படமான சுட்ட பழத்துக்கு போட்டியாக வெளியிடப்பட்டது . அந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் தணிக்கை வாரியத்தால் வெட்டப்பட்டவையாக இருந்தன. மேலும் அவை பாலியல் மற்றும் இரட்டை அர்த்த உரையாடல்களை அதிக அளவு கொண்டிருந்ததால் 'ஏ' சான்றிதழ் அளிக்கபட்டன.[7]
வணிகம்
தொகுஇந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தெலுங்கில் மதனமோகினி என மொழிமாற்றம் செய்யபட்டு ஸ்ரீ மேகனா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர் .ஜி.யால் 9 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது.[8][9]
குறிப்புகள்
தொகு- ↑ "Jointscene : Tamil Movie Pathu Pathu". jointscene.com. Archived from the original on 1 February 2010. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Thiller in the name of cricket". behindwoods.com. 14 May 2008. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Shilpa Shetty comes down for Sona". behindwoods.com. 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Pathu Pathu Preview". hinducinema.com. Archived from the original on 18 December 2010. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Pathu Pathu (2008) - L.V. Ganesan". mio.to. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pathu Pathu Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Sex & sleaze is the flavour of the season". சிஃபி. 22 July 2008. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sona's Sex with Teenage Boy". cinejosh.com. 22 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
- ↑ "Madanmohini releasing on March 9th!". chitramala.in. 29 February 2012. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.