திருத்தணி (திரைப்படம்)

பேரரசு இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திருத்தணி 2012ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பரத், சுனைனா, ராஜ்கிரண், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] இப்படத்தை இயக்கிய பேரரசுவே இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

திருத்தணி
இயக்கம்பேரரசு
தயாரிப்புசொக்கலிங்கம்
சுப்புராஜ்
கதைபேரரசு
இசைபேரரசு
நடிப்புபரத்
சுனைனா
ராஜ்கிரண்
பாண்டியராஜன்
ஒளிப்பதிவுகே. பாலா
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்வி. கே. ஆர்ட்ஸ்
வெளியீடு19 அக்டோபர் 2012[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இயக்குனர் பேரரசு இப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் ஆகஸ்டு 20 அன்று நடைபெற்றது. எஸ். ஜே. சூர்யா, ஏ. ஆர். முருகதாஸ், பாக்யராஜ், பாண்டியராஜன், எஸ். ஏ. சந்திரசேகர், மோகன் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, பி. எல். தேனப்பன், தனஞ்செயன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள பல புகழ்பெற்ற நபர்கள் முன்னிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.[3] இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன.

எண் பாடல் பாடலாசிரியர் பாடியவர்(கள்)
1 நீ எனக்கு நீ எனக்கு பேரரசு கார்த்திக், சைந்தவி
2 வானவேடிக்கை வெடிடா திப்பு
3 அடி வானவில்லே உன்னிமேனன், சின்மயி
4 யம்மா யம்மா டி. ராஜேந்தர், அனுராதா ஸ்ரீராம்
5 வண்ணாரப்பேட்டை திப்பு, கிருஷ்ணவேணி பேரரசு
6 ராஜா ராஜா சுசித்ரா

வெளியீடு

தொகு

படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இப்படத்திற்கு "யூ" சான்றிதழ் அளித்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/87397.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  3. "Sify.com Thiruthani Audio Function". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தணி_(திரைப்படம்)&oldid=4146598" இலிருந்து மீள்விக்கப்பட்டது