எல். இராஜா

இந்திய திரைப்பட இயக்குநர், நடிகர்

எல். ராஜா (L. Raja) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார்.

எல். இராஜா
பிறப்புலிங்குசாமி கஸ்தூரி பி வெங்கட் இராஜா
1 சனவரி 1973 (1973-01-01) (அகவை 51)
சிவகாசி
மற்ற பெயர்கள்எல். ராஜா
பணி
  • Director
  • actor
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
ஈஸ்வரி ராவ்
(தி.2005-தற்போதுவரை)
பிள்ளைகள்2

தொழில்

தொகு

ராஜா இயக்குநர் ராஜசேகரின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] ஏ. வி. எம் நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் தயாரித்த சங்கர் குரு படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.[2] இவர் ஒன்பது படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார், அதில் ஆறு படங்கள் அர்ஜுன் நடித்தவை. சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ராஜா நடித்தார். இது இவரது நடிப்புக்கான அறிமுகமாக ஆனது. அதன்பின்னர் இவர் நாடோடிகள் உட்பட 35 படங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் இவர் சசிகுமாரின் தந்தையாக நடித்தார்.

ரகுவம்சம் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமான இவர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். மேலும் ராடான் மீடியாவொர்க்சிற்காக இதி கத காது மற்றும் நின்னு பெல்லாதுதா ஆகிய இரண்டு தொடர்களை இயக்கினார்.[1] ஏ.வி.எம் புரொடக்சன்சின் மௌன நடன நாடகமான ஹிம்சவேதத்தை இயக்கினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் நடிகை ஈஸ்வரி ராவை திருமணம் செய்து கொண்டார்.[3]

திரைப்படவியல்

தொகு

இயக்குநராக

தொகு
திரைப்படங்கள்
தொடர்கள்

நடிகராக

தொகு

படங்கள்

தொகு
ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ராமையா
2009 நாடோடிகள நட்ராஜ் வீரபத்ரன்
2010 வெளுத்து கட்டு மருதாச்சலம்
தில்லாலங்கடி கிருஷ்ண குமாரின் தந்தை
கல்லூரி காலங்கள் சங்கர்
அகம் புறம் மார்ட்டின் பெர்னாண்டஸ்
அபூர்வராகம் நான்சியின் தந்தை மலையாள படம்
2011 மார்கழி 16 ஜெனிபரின் தந்தை
போடிநாயக்கனூர் கணேசன் அழகர்
வித்தகன்
2012 கொண்டன் கொடுத்தான்
திருத்தணி மருத்துவர்
2017 யானும் தீயவன் மணிமாறன்
சென்னை 2 சிங்கப்பூர் ரோஷினியின் தந்தை
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் சுசீலாவின் தந்தை
2019 பஞ்சட்சரம் தர்மத்தின் தந்தை
தொடர்கள்
ஆண்டு தொடர் பங்கு சேனல்
ரகுவம்சம் சன் தொலைக்காட்சி
எத்தனை மனிதர்கள் தூர்தர்ஷன்
2000-2001 வாழ்கை சன் தொலைக்காட்சி
2011-2012 பிரிவோம் சாந்திப்போம் சண்முகராஜா விஜய் தொலைக்காட்சி
2011 மகாலட்சுமி நிவாசம் மகாலட்சுமியின் சகோதரர் ஜெமினி தொலைக்காட்சி
2011-2013 உத்திரிபூக்கள் தட்சிணாமூர்த்தி சன் தொலைக்காட்சி
2011-2012 மா நானா ஜெமினி தொலைக்காட்சி
2014–2018 தாமரை கருணாகரன் சன் தொலைக்காட்சி
2017 கங்கை ராமநாதன் சன் தொலைக்காட்சி
2017–2018 நெஞ்சம் மறப்பத்தில்லை ஆர். வேல்ராஜ் விஜய் தொலைக்காட்சி
2017–2019 பூவே பூச்சுடவா சுவாமிநாதன் ஜீ தமிழ்
2018–2019 கண்மணி தர்மதுரை சன் தொலைக்காட்சி
2019 - தற்போது வரை பொண்ணுகு தங்க மனசு வர்சினியின் தந்தை விஜய் தொலைக்காட்சி
இரட்டை ரோஜா ராமச்சந்திரன் ஜீ தமிழ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
  • குட்டும்பம் விருதுகள் 2020 - திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் பங்களித்தமைக்கான சிறப்பு விருது [4]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Rangarajan, Malathi (8 December 2016). "A scene change". The Hindu.
  2. 2.0 2.1 Ashok Kumar, S. R. (3 June 2010). "Grill Mill: Shankar Guru L. Raaja". The Hindu. https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-Shankar-Guru-L.-Raaja/article16240697.ece. 
  3. Kavirayani, Suresh (18 June 2017). "Eswari Rao stages a comeback" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
  4. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/kutumbam-viruthugal-2020-felicitates-talented-artists/articleshow/78888326.cms

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இராஜா&oldid=3946930" இலிருந்து மீள்விக்கப்பட்டது