சைந்தவி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: நி22 நி2ச ரி221 ப த2 நி2
அவரோகணம்: 2 ப ம12 ரி2 ச நி22 நி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது.

குறிப்பு

தொகு
  1. Music Handbook - Raga Index -S 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைந்தவி&oldid=702862" இலிருந்து மீள்விக்கப்பட்டது