சரிதா

இந்திய நடிகை

சரிதா (Saritha) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். 141 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1][2][3]

சரிதா
பிறப்புஅபிலாஷா
7 சூன் 1960 (1960-06-07) (அகவை 64)
குண்டகல் ஆந்திர பிரதேசம், இந்தியா
பணிநடிகை, பின்னணி குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1978-2006
2012-நடப்பு
வாழ்க்கைத்
துணை
வேங்கட சுப்பையா
(1975; மணமுறிவு.1976)
முகேஷ் (திருமணம்.1988; மணமுறிவு.2011)
பிள்ளைகள்ஸ்ரவன்
தேஜாஸ்

வரலாறு

தொகு

சரிதா கே. பாலச்சந்தரால் 1978 இல் மரோ சரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் கெ.பாலச்சந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத் தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது

சரிதா பாலச்சந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலச்சந்தர் இவரை நடிக்கச் செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப் பின்னர் 2005 இல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர்
1978 அவள் அப்படித்தான் கே.பாலச்சந்தர்
தப்புத் தாளங்கள் கே.பாலச்சந்தர்
1979 பொண்ணு ஊருக்கு புதுசு ஆர். செல்வராஜ்
நூல் வேலி கே.பாலச்சந்தர்
சக்களத்தி தேவராஜ்-மோகன்
1980 வண்டிச்சக்கரம் கே. விஜயன்
சுஜாதா மோகன்
ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது தேவராஜ்-மோகன்
தைப்பொங்கல் எம். ஜி. வல்லபன்
ருசி கண்ட பூனை ஜி. என். இரங்கராஜன்
குருவிக்கூடு பி. மாதவன்
பணம் பெண் பாசம் எம். ஏ. கஜா
1981 மௌன கீதங்கள் கே.பாக்யராஜ்
நெற்றிக்கண் எஸ். பி. முத்துராமன்
தண்ணீர் தண்ணீர் கே.பாலச்சந்தர்
கீழ்வானம் சிவக்கும் வி. ஸ்ரீநிவாசன்
ஆணிவேர் கே. விசயன்
அஞ்சாத நெஞ்சங்கள் ஆர். தியாகராஜன்
47 நாட்கள் கே.பாலச்சந்தர்
ஒருத்தி மட்டும் கரையினிலே ஜே.ராமு
எங்க ஊரு கண்ணகி கே.பாலச்சந்தர்
காலம் ஒரு நாள் மாறும் என். ஏ. பன்னீர் செல்வம்
கோயில் புறா கே. விஜயன்
1982 அக்னி சாட்சி கே. பாலச்சந்தர்
புதுக்கவிதை எஸ். பி. முத்துராமன்
தாய் மூகாம்பிகை கே. சங்கர்
நெஞ்சில் ஒரு ராகம் டி. ராஜேந்தர்
அம்மா ராஜசேகர்
பண்ணைப்புரத்துப் பாண்டவர்கள் பி. லெனின்
கண்மணி பூங்கா விசு
துணை துரை
1983 சாட்டை இல்லாத பம்பரம் ஈரோடு என். முருகேஷ்
மலையூர் மம்பட்டியான் ராஜசேகர்
சிவப்பு சூரியன் வி. ஸ்ரீனிவாசன்
தங்கைக்கோர் கீதம் டி. ராஜேந்தர்
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது மௌலி
இமைகள் ஆர். கிருஷ்ணமூர்த்தி
யாமிருக்க பயமேன் கே.சங்கர்
உயிருள்ளவரை உஷா டி. ராஜேந்தர்
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி எஸ். ஏ. சந்திரசேகர்
கொம்பேறிமூக்கன் ஏ. ஜெகநாதன்
அச்சமில்லை அச்சமில்லை கே.பாலச்சந்தர்
குழந்தை ஏசு பி. ராஜன்
இருமேதைகள் வி. ஸ்ரீநிவாசன்
சங்கரி டி. ஆர். ராமண்ணா
உறவை காத்த கிளி டி. ராஜேந்தர்
நலம் நலமறிய ஆவல் பி. ஜெயதேவி
சிம்ம சொப்பனம் எஸ். எஸ். கருப்புசாமி
1985 அண்ணி கார்த்திக் ரகுநாத்
கல்யாண அகதிகள் கே.பாலச்சந்தர்
வேலி துரை
சாவி கார்த்திக் ரகுநாத்
சுகமான ராகங்கள் ஆர். சுந்தர்ராஜன்
கொலுசு கே.எஸ்.மாதங்கன்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எஸ். பி. முத்துராமன்
1986 ஊமை விழிகள் அரவிந்தராஜ்
மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி எஸ். ஜெகதீசன்
தர்மம் ஆர். தியாகராஜன்
குங்குமப்பொட்டு ரஞ்சித்குமார்
கோடை மழை முக்தா எஸ். சுந்தர்
1987 பூ பூவா பூத்திருக்கு வி. அழகப்பன்
வேதம் புதிது பாரதிராஜா
மங்கை ஒரு கங்கை டி. அரிகரன்
ஏட்டிக்கு போட்டி ஆர்.கோவிந்தராஜன்
வாழ்க வளர்க விஜய் கிருஷ்ணராஜ்
எல்லைக்கோடு எஸ். ராகவன்
1988 ராசாவே உன்னெ நம்பி டி. கே. போஸ்
பூ பூத்த நந்தவனம் பி.வி பாலகுரு
கை கொடுப்பாள் கற்பகாம்பாள் எஸ்.ஜெகதீசன்
2002 ஆல்பம் வசந்தபாலன்
2003 பிரண்ட்ஸ் சித்திக்
2003 ஜூலி கணபதி பாலு மகேந்திரா
2006 ஜூன் ஆர் ரேவதி எஸ் வர்மா
2014 இனம் சந்தோஷ் சிவன்

விருதுகள்

தொகு

சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்

மேற்கோள்கள்

தொகு
  1. "newstodaynet.com". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.
  2. "hindu.com/2006/01/12/stories/2006011205590200.htm". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21.
  3. "hinduonnet.com/thehindu/mp/2005/04/27/". Archived from the original on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2011-09-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா&oldid=4114044" இலிருந்து மீள்விக்கப்பட்டது