ஆர். தியாகராஜன்

இந்தியத் தொழிலதிபர்

ஆர். தியாகராஜன் (R. Thyagarajan) ஓர் தொழிலதிபரும், சென்னையைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனருமாவார். வர்த்தக மற்றும் தொழில்துறை துறையில் இவரது பங்களிப்பிற்காக 2013ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

ஆர். தியாகராஜன்
பிறப்பு25 ஆகத்து 1937 (1937-08-25) (அகவை 87)
கேங்டாக், சிக்கிம், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விஇந்தியப் புள்ளியியல் கழகம்
பணிஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர்
விருதுகள்பத்ம பூசண்

தொழில்

தொகு

இவர், இந்தியப் புள்ளியியல் கழகத்தில் கணிதத்தில் முதுகலை பட்டமும், கணித புள்ளிவிவரத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். 1961ஆம் ஆண்டில், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமான "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட்" நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] 1974 ஆம் ஆண்டில், தனது நண்பர்களுடன் ஒரு வணிக நிதி நிறுவனத்தைத் தொடங்க ஸ்ரீராம் சிட்ஸை ( சீட்டுக் கட்டுதல் ) அமைத்தார். காலப்போக்கில், வணிகம், இந்திய ரூபாய் 60,000 கோடி நிறுவனமாக உருவெடுத்தது. இவர் "லைஃப் செல் இன்டர்நேஷனலின்" தலைவராகவும் அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். "டி.வி.எஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்"டின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். பிலிப்பீன்சின் ஆசிய காப்பீட்டு நிறுவனம், சிங்கப்பூர், கோலாலம்பூரில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு விருந்தினர் உறுப்பினராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jagannathan, K. T. (24 February 2013). "Doing business is painful". The Hindu. https://www.thehindu.com/business/Industry/doing-business-is-painful/article4449278.ece. 
  2. "Create a firm that creates wealth for society". Livemint. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._தியாகராஜன்&oldid=3192689" இலிருந்து மீள்விக்கப்பட்டது