ஸ்ரீராம் குழுமம்

இந்திய வணிக சேவை நிறுவனம்

ஸ்ரீராம் குழுமம் (Shriram Group) என்பது 5 ஏப்ரல் 1974 அன்று இராமமூர்த்தி தியாகராஜன், [3] ஏவிஎஸ். ராஜா, டி. ஜெயராமன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு இந்தியக் கூட்டு நிறுவனமாகும். நிறுவனத்தின் தலைமையகம் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ளது.[4] [5] [6] இக்குழுமம், ஆரம்பத்தில் சீட்டுக் கட்டுதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது. பின்னர், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் (வணிக வாகன நிதி), ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி (நுகர்வோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி), ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் ( பொது காப்பீடு ) ஆகியவற்றின் மூலம் கடன் வழங்கும் தொழிலில் நுழைந்தது.

ஸ்ரீராம் குழுமம்
வகைகுழுமம்
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்ஆர். தியாகராஜன் (தலைவர்)[1]
தொழில்துறைநிதி , அசையும் சொத்து வணிகம்
வருமானம் இந்திய ரூபாய் 1.06 இலட்சம் கோடி ( அமெரிக்க டாலர் $ 14 பில்லியன் )
பணியாளர்55000[2] (2020)
துணை நிறுவனங்கள்
  • ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்
  • ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவனம்
  • ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ்
  • ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ்
  • ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ்
  • ரீராம் கேபிடல்
  • ஸ்ரீராம் இன்சைட்
  • ஸ்ரீராம் பார்ச்சூன்
  • ஸ்ரீராம் ஏ.எம்.சி
  • ஸ்ரீராம் பிராபர்டீஸ்

நிறுவனங்கள் தொகு

  • ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், வாகனங்களுக்கு நிதியளிக்கும்இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிதியாளர். இது புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களுக்கான கடன்களை விநியோகிக்கிறது.
  • ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் மற்றும் இரு சக்கர கடன்கள் உள்ளிட்ட சில்லறை நிதியுதவிகளில் ஈடுபட்டுள்ளது.
  • ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸின் துணை நிறுவனமாகும். இது, முக்கியமாக வீட்டுக் கடன் சேவைகளை வழங்குகிறது.
  • ஸ்ரீராம் கேபிடல் என்பது ஸ்ரீராம் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாகும். இது பல குழு நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது.
  • ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் என்பது குழுமத்தின் ஆயுள் காப்பீட்டுக் குழுவாகும். மேலும் ஸ்ரீராம் கேப்பிட்டலுக்கும் தென்னாப்பிரிக்க நிறுவனமான சன்லம் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் வணிக மற்றும் சில்லறை வாகன காப்பீடு, வீட்டுக் காப்பீடு மற்றும் பயணக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ளது. இது ஸ்ரீராம் கேப்பிட்டலுக்கும் சன்லம் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • ஸ்ரீராம் பிராபர்டீஸ் ஒரு அசையா சொத்து உருவாக்கும் நிறுவனமாகும். இது முக்கியமாக தென்னிந்தியாவில் நடுத்தர வருமான வீட்டு திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
  • ஸ்ரீராம் பார்ச்சூன் என்பது குழுவின் நிதி சேவைகள் விநியோக பிரிவு ஆகும்.
  • ஸ்ரீராம் ஏ.எம்.சி என்பது பரஸ்பர நிதிகளில் கவனம் செலுத்தும் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம்.
  • ஸ்ரீராம் இன்சைட் ஒரு சில்லறை பங்கு தரகு நிறுவனம்.
  • ஸ்ரீராம் செல்வம் செல்வ மேலாண்மையைப் பற்றி ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Narasimhan, T. E. (31 January 2012). "Why private equity loves the Shriram Group". Business Standard India. https://www.business-standard.com/article/companies/why-private-equity-loves-the-shriram-group-112013100007_1.html. 
  2. "Shriram Life Insurance". www.shriramlife.com. Archived from the original on 2016-09-01. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
  3. "R Thyagarajan, Shriram Ventures Ltd: Profile and Biography". Bloomberg.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  4. "About the Group". Archived from the original on 2021-06-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  5. Raghuvir Badrinath & T E Narasimhan (24 May 2012). "Shriram Group's Rs 400-cr PE plan to bind its cement foray". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012.
  6. Sanjay Vijayakumar & V Balasubramanian (27 May 2012). "Shriram Group founder R Thyagarajan bets on math and mathematicians for business success, not that much on B-school grads". Economic Times. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராம்_குழுமம்&oldid=3712846" இலிருந்து மீள்விக்கப்பட்டது