பூ பூவா பூத்திருக்கு

வி. அழகப்பன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூ பூவா பூத்திருக்கு (Poo Poova Poothirukku) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். வி. அழகப்பன் இயக்கிய இப்படத்தை காவேரி மனோகரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபு, சரிதா, அமலா ஆகியோர் நடித்துள்ளனர். இது 18 செப்டம்பர் 1987 அன்று வெளியானது.

பூ பூவா பூத்திருக்கு
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புகாவேரி மனோகரன்
திரைக்கதைவி. அழகப்பன்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புபிரபு
சரிதா
அமலா
ஒளிப்பதிவுகே. பி. தயாளன்
படத்தொகுப்புவி. இராஜகோபால்
கலையகம்மை புரொடக்சன்ஸ்
வெளியீடு18 செப்டம்பர் 1987 (1987-09-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

ராமுவும் ( பிரபு ), ஜானகியும் ( சரிதா ) திருமணமான தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்றாலும், ராமு தன் மனைவிக்குத் தெரியாமல் அந்தமானில் மேரியுடன் ( அமலா ) இரகசிய உறவு கொண்டிருக்கிறார். மேலும் அவர்களுக்கு கண்ணன் என்ற மகன் பிறக்கிறான். சில ஆண்டுகளுக்குப் பிறகு மகிழுந்து விபத்தில் மேரி இறந்துவிடுகிறார். இதனால் ராமு தன் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார். மீதமுள்ள படமானது இதன் பின்விளைவுகளைப் பற்றியதாக உள்ளது.

தயாரிப்பு தொகு

பூ பூவா பூத்திருக்கு படத்தை வி. அழகப்பன் திரைக்கதை எழுதி, இயக்கினார். இப்படத்தை காவேரி மனோகரன் மை புரொடக்‌ஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தார். கே. பி தயாளன் ஒளிப்பதிவு செய்ய, வி. ராஜகோபால் படத் தொகுப்பை செய்தார்.

இசை தொகு

டி. ராஜேந்தர் இப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதி, இசையமைத்தார்.[1]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "குக்கூ குக்கூ குயிலே"  டி. ராஜேந்தர் 4:51
2. "உங்கப்பா வாங்கித் தந்த"  எஸ். ஜானகி, டி. ராஜேந்தர், வித்யா 4:44
3. "பூ பூத்த செடியக்"  டி. ராஜேந்தர் 4:39
4. "இங்லீஷ்காரன் தண்ணி"  டி. ராஜேந்தர், மலேசியா வாசுதேவன் 4:39
5. "வாசம் சிந்தும்"  மனோ, வாணி ஜெயராம் 4:31

வெளியீடு மற்றும் வரவேற்பு தொகு

பூ பூவா பூத்திருக்கு படம் 1989 செப்டம்பர் 18 அன்று வெளியானது.[2] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி எழுதிய விமர்சனத்தில் திரைப்படத்தை "ஓரளவு இழுபறி" என்று குறிப்பிட்டார். மேலும் மேன், உமன், சைல்ட் (1983) படத்துடன் இந்த படத்திற்கு உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டார், ஆனால் பிரபு, சரிதா, குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பைப் பாராட்டினார்.[3]

குறிப்புகள் தொகு

  1. "Poo Poova Poothirukku". JioSaavn. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
  2. "பூ பூவா பூத்திருக்கு". Vellitthirai. Archived from the original on 22 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "On illegitimacy". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870925&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_பூவா_பூத்திருக்கு&oldid=3777666" இலிருந்து மீள்விக்கப்பட்டது