வி. அழகப்பன்

தமிழ் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

வேந்தன்பட்டி அழகப்பன் [1] என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சுரேஷ், ரேவதி ஆகியோர் நடித்த ஆகாயத் தாமரைகள் (1985) என்ற காதல் நாடகத் திரைப்படத்தை உருவாக்கிய பின்னர் இவர் புகழ் பெற்றார். இதேபோன்ற வகைகளில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வருகிறார்.[2][3][4]

தொழில்

தொகு

தனது தொழில் வாழ்க்கையில் அழகப்பன் வழக்கமாக நடிகர் ராமராஜன், சுரேஷ் ஆகியோருடன் தவறாமல் பணியாற்றியுள்ளார்.[5] இவரது இறுதி வெளியீடான, பூ மனமே வா (1999) நளினி சினி ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் ராமராஜனின் மனைவி நளினி ராமராஜனால் தயாரிக்கபட்டது. தயாரிப்பின் போது, இந்த படம் நடிகரின் 40 வது படம் என்றும், இயக்குநராக 11 வது படம் என்றும் அறிவிக்கபட்டது. வி. அழகப்பனுக்கு பின்னரே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. படத்தில் முதலில் சந்திரசேகர், மனோரமா, சந்தான பாரதி போன்ற நடிகர்களும் நடிப்பார்கள் என அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் இடம்பெறவில்லை.[6]

திரைப்படவியல்

தொகு
இயக்குநர்
ஆண்டு படம் நடிகர்கள்
1980 ராமாயி வயசுக்கு வந்துட்டா உதய சங்கர், மேனகா
1985 ஆகாயத் தாமரைகள் சுரேஷ், ரேவதி
1986 பூக்களை பறிக்காதீர்கள் சுரேஷ், நதியா
1986 நம்ம ஊரு நல்ல ஊரு ராமராஜன், ரேகா
1987 பூமழை பொழியுது விசயகாந்து, நதியா
1987 பூ பூவா பூத்திருக்கு பிரபு, சரிதா, அமலா
1988 குங்குமக்கோடு மோகன், நளினி, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன்
1988 இரண்டில் ஒன்று ராம்கி, நதியா, ரகுவரன்
1988 என் வழி தனி வழி ரகுவரன், கீதா, சாந்திபிரியா
1989 தங்கமான ராசா ராமராஜன், கனகா
1991 தங்கத் தாமரைகள் அர்ஜுன், ரூபினி
1999 பூ மனமே வா ராமராஜன், சங்கிதா

மேற்கோள்கள்

தொகு
  1. Krishnaswamy, N. (25 September 1987). "On illegitimacy". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870925&printsec=frontpage&hl=en. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-08. Retrieved 2021-03-28.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-03-30. Retrieved 2021-03-28.
  4. https://timesofindia.indiatimes.com/tv/programmes/erandil-ondru/params/tvprogramme/programmeid-30000000549690610/channelid-10000000001190000/starttime-201801041000
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-08. Retrieved 2021-03-28.
  6. "A-Z (V)". 27 September 2013. Archived from the original on 27 September 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அழகப்பன்&oldid=4190008" இலிருந்து மீள்விக்கப்பட்டது