நாட்டாமை

நாட்டாமை என்பது ஒரு புவியியல் சார்ந்த மக்கட்குழுவின் சமூக நிர்வாக அமைப்பின் தலைவராவார். பொதுவாக பரம்பரைப் பரம்பரையாக கிராமங்களில் நிர்வாக அதிகாரத்தில் இருப்பவரை நாட்டாமை என்று அழைக்கப்படுகிறார். கிராமங்களில் நடக்கும் சண்டை சச்சரவு, பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது, நீர்நிலைகளை கண்காணித்தல், வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பது போன்று அப்பகுதியை ஆளும் பணிகள் நாட்டாமைக்குரியதாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் படிப் படியாக நாட்டாமையின் அதிகாரங்கள் வலுயிழந்து, மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஊராட்சி மன்றம் மூலம் கிராமங்களில் நிர்வாகம் நடைபெறுகின்றன. தற்போதும் சில இடங்களில் நாட்டாமையின் அதிகார வரம்பு சுருக்கப்பட்டு, சில கிராமங்களில் சாதிரீதியான குழுக்களுக்கு மட்டும் தலைவராக இருக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டாமை&oldid=1817540" இருந்து மீள்விக்கப்பட்டது