துள்ளித் திரிந்த காலம்

பாலசேகரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

துள்ளித் திரிந்த காலம் (Thulli Thirintha Kaalam) என்பது 1998 ஆண்டைய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பாலசேகரன் இயக்கிய இப்படத்தை கே. பாலச்சந்தர் தயாரித்தார். இப்படத்தில் அருண் குமார், குஷ்பூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், ரோஷினி, ரகுவரன், கரண் ஆகியோர் பிற வேடங்களிலும் நடித்தனர். ஜெயந்த் இசையமைத்த இப்படம் 1998 மார்ச்சில் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.

துள்ளித் திரிந்த காலம்
இயக்கம்பாலசேகரன்
தயாரிப்புராஜம் பாலசந்தர், பஷ்பா கந்தசாமி
கதைபாலசேகரன்
இசைஜெயந்த்
நடிப்புஅருண் குமார்
குஷ்பூ
ரோஷினி
கரண்
ஒளிப்பதிவுவிஜய் கோபால்
படத்தொகுப்புகணேஷ்
கலையகம்கவிதாலயா
வெளியீடு12 மார்ச் 1998
ஓட்டம்150 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

எந்த உருப்படியான செயலையும் செய்யாத நான்கு இளைஞர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அவர்களின் பொறுப்பற்ற நடத்தையால் சோர்ந்து போகிறார்கள். கௌசல்யா அவர்கள் அருகில் குடிவருகிறார். அவர்களின் வாழ்க்கை முறையையும் நடத்தையையும் பார்த்து, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறார்.

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு ஜெயந்த் இசையமைத்தார்.[1]

வெளியீடு தொகு

இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இந்த படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை வெளியிட்டது, "இந்த கே. பாலச்சந்தர் தயாரிப்பில் புதியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ எதுவும் இல்லை, ஆனால் இளைஞர்களுக்கான பழைய-ஆலோசனை மசாலாவை, சில சென்டிமென்ட் ஊறுகாய், நகைச்சுவை இனிப்பு ஆகியவற்றை பாடல்களுடன் கலந்து வழங்குகிறது".[2]

இப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது, இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகளைத் தயாரிக்க ஊக்கபடுத்தியது.[3] அம்மாயி கோசம் என்ற தெலுங்கு மறு ஆக்கத்தில் ரவி தேஜா மற்றும் மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

குறிப்புகள் தொகு

  1. https://www.jiosaavn.com/album/thulli-thirintha-kaalam/P6hjVmKR0gY_
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  3. http://www.rediff.com/entertai/1998/dec/01ss.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=துள்ளித்_திரிந்த_காலம்&oldid=3708616" இலிருந்து மீள்விக்கப்பட்டது