சுவாதி (நடிகை)

சுவாதி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். வான்மதி மற்றும் தேவா போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

சுவாதி
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சுவாதி கிரண்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1996– தற்போது

திரை வாழ்க்கைதொகு

நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த வான்மதி திரைப்பட வெற்றிக்குப் பிறகு இவர் தனது படிப்பைத் தொடர தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு திரும்பினார்.[2]

சிறிய இடைவேளைக்குப் பிறகு நடிக்கத் திரும்பிய இவர் அமீரின் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான யோகி திரைப்படத்தில் நடித்தார்.[3]

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவருக்கு துபாயைச் சார்ந்த ஒரு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் அந்த திருமணம் நடைபெறவில்லை.[1] பின்னர் 2009-ம் ஆண்டில் ஐதராபாத்தைச் சார்ந்த ஒரு நிறுவனத்தின் மேலாளரை திருமணம் செய்துகொண்டதுடன் தனது திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.[4]

நடித்த திரைப்படங்கள்தொகு

தமிழ்த் திரைப்படங்கள்தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் உடன் நடித்தவர்கள் குறிப்பு
1995 தேவா பாரதி விஜய்
1996 வான்மதி வான்மதி அஜித் குமார்
வசந்த வாசல் விஜய்
செல்வா சுமதி விஜய்
1997 மாப்பிள்ளை கௌண்டர் பிரபு
மை இந்தியா
நாட்டுப்புற நாயகன்
1999 உன்னை தேடி சித்ரா அஜித் குமார்
அண்ணன்
சிவன் நெப்போலியன், அருண் பாண்டியன்
2001 அசத்தல் சத்யராஜ்
2009 யோகி கரோலின் அமீர்

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_(நடிகை)&oldid=2922816" இருந்து மீள்விக்கப்பட்டது