அண்ணன் (திரைப்படம்)

அனு மோகன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணன் (Annan) 1999 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் சுவாதி நடிப்பில், இளையராஜா இசையில், அனு மோகன் இயக்கத்தில், டி. சீனிவாசன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]

அண்ணன்
இயக்கம்அனு மோகன்
தயாரிப்புடி. சீனிவாசன்
கதைஅனு மோகன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. தாமோதரன்
படத்தொகுப்புபி. கிருஷ்ணகுமார்
கலையகம்மைசன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 29, 1999 (1999-03-29)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

வேலன் (ராமராஜன்) கிராமத்திலுள்ள சந்தையை நிர்வகிப்பவன். அவனது தங்கை லட்சுமியின் (அபூர்வா) மீது மிகுந்த பாசம் உடையவன். லட்சுமி பள்ளியில் ஆசிரியையாக பணிசெய்கிறாள். சுந்தரி (சுவாதி) அவள் தந்தையோடு (ஆர். சுந்தர்ராஜன்) அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வேலனும் சுந்தரியும் காதலர்கள். லட்சுமியும் அந்த கிராமத்தில் பணியாற்றும் கிராம வளர்ச்சி அலுவலரான செல்வமும் (வாசன்) காதலர்கள். வேலன் தன் தங்கைக்கும் கிராமத்தின் தலைவர் ராசப்பன் (மணிவண்ணன்) மகன் மாணிக்கத்திற்கும் (பொன்வண்ணன்) திருமணம் செய்ய முடிவுசெய்கிறான். மாணிக்கம் மோசமான நடத்தையுள்ளவன்.

கிராமத்து வழக்கத்தை மீறி செல்வம் நடந்துகொண்டதால் அவன் பஞ்சாயத்தில் தண்டிக்கப்படுகிறான். தான் செல்வம் மீது வைத்துள்ள காதலை அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்தி அவனைத் திருமணம் செய்கிறாள் லட்சுமி. அதற்கு பிறகு செல்வத்தைப் பற்றிய உண்மை தெரியவருகிறது. செல்வம் கிராம வளர்ச்சி அலுவலர் இல்லை. அவன் ஒரு காவல் அதிகாரி. அவன் வேலனைக் கைதுசெய்யும் திட்டத்தோடு அந்தக் கிராமத்திற்கு வந்துள்ளான். ஏனென்றால் செல்வத்தின் தந்தைக்கும் வேலனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரைக் கொலை செய்த குற்றத்திற்காக வேலனைக் கைது செய்கிறான். வேலன் சிறைக்குச் சென்றதும் கிராமத்தின் சந்தையை நிர்வகிக்கும் பொறுப்பு மாணிக்கத்திடம் வருகிறது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் வேலனை வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. வேலன் தன் கிராமத்திற்கு வருகிறான். அவனது தங்கை வாழ்வு என்னவானது? அவனுக்கும் சுந்தரிக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் கங்கை அமரன், முகமது மேத்தா, காமகோடியன் மற்றும் அறிவுமதி.[5]

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 ஆலமரத்துக் குயிலே அறிவுமதி இளையராஜா, சுஜாதா 5:02
2 கண்மணிக்கு வாழ்த்து (பெண்குரல்) காமகோடியன் பவதாரிணி 4:24
3 கண்மணிக்கு வாழ்த்து (ஆண்குரல்) காமகோடியன் இளையராஜா 4:24
4 வயசுப்புள்ள வயசுப்புள்ள அறிவுமதி இளையராஜா, சுஜாதா 5:08
5 ஒத்த ரூபாவுக்கு ஒரு மு. மேத்தா அருண்மொழி, சுஜாதா 5:00
6 குட்டி நல்ல குட்டி கங்கை அமரன் அருண்மொழி 5:03

மேற்கோள்கள்

தொகு
  1. "Annan (1999) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  2. "Filmography of annan". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  3. "Find Tamil Movie Annan". jointscene.com. Archived from the original on 2011-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  4. "A-Z (I) - INDOlink". indolink.com. Archived from the original on 31 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  5. "பாடல்கள்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணன்_(திரைப்படம்)&oldid=4000620" இலிருந்து மீள்விக்கப்பட்டது