இராமி ரெட்டி
கங்கசனி ராமி ரெட்டி (1 சனவரி 1959 - 14 ஏப்ரல் 2011) என்பவர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் முயன்றவர். இவர் எதிர்மறை பாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் நன்கு அறியப்பட்ட எதிர்மறை நாயகன் ஆவார். இவர் வழக்கமாக தெலங்காணா பேச்சுவழக்கை பொறுத்தமற்று பேசும் பாணியைக் கொண்டிருந்தார். அங்குசம் படத்தில் தனது "ஸ்பாட் பெடத்தா" என்ற வசனத்தால் புகழ் பெற்றார் .[1][2]
இராமி ரெட்டி | |
---|---|
பிறப்பு | கங்கசனி ராமி ரெட்டி 1 சனவரி 1959 ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், வாயல்பாடு |
இறப்பு | 14 ஏப்ரல் 2011 இந்தியா, தெலங்காணா, ஐதராபாத்து | (அகவை 52)
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–2011 |
உயரம் | 1.83 m (6 அடி 0 அங்) |
பிள்ளைகள் | 3 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகங்கசனி ராமி ரெட்டி சித்தூர் மாவட்டத்தின் வால்மிகிபுரத்தில் (முன்னர் வயல்பாத் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார்.[3] உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தனது பி.சி.ஜே (இதழியல்) படிப்பை மேற்கொண்டார்.[4]
தொழில்
தொகுதிரைபடங்களில் நடிக்க வருவதற்கு முன்பு, ரெட்டி எம். எஃப் டெய்லியில் பத்திரிகையாளராக பணியாற்றினார்.[3] இவர் வெற்றித் திரைப்படமான அங்குசம் படத்தில் நடித்த 'ஸ்பாட் நாகா' என்ற பாத்திரத்தால் புகழ் பெற்றார் மேலும் இவர் ஓசி ராமுலம்மா, அம்மோரு, கயாம், அனகனகா ஓகா ரோஜு, பெடாரிகம் போன்ற படங்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். மேலும் இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி மொழிகளில் எதிர்மறை பாத்திர நடிகராக 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இறப்பு
தொகுராமி ரெட்டி கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 14, ஏப்ரல், 2011 அன்று செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[3]
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | அங்குசம் | ஸ்பாட் நாகா | தெலுங்கு | |
1990 | அபிமன்யு | கன்னடம் | ||
1990 | ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி | அபுலு | தெலுங்கு | |
1990 | பிரதிபந்த் | கேங்க்ஸ்டர் "ஸ்பாட்" நானா | இந்தி | |
1991 | அபிமன்யு | அப்பாஸ் | மலையாளம் | |
1991 | பரம சிவுடு | தெலுங்கு | ||
1991 | நாடு அதை நாடு | தமிழ் | ||
1991 | க்ஷணக் க்ஷணம் | ஆய்வாளர் யாதவ் | தெலுங்கு | |
1992 | 420 | ரங்கா | தெலுங்கு | |
1992 | பலராம கிருஷ்ணடு | நுகராஜு | தெலுங்கு | |
1992 | மகான் | மலையாளம் | ||
1992 | பெடாரிகம் | பார்வதனேனி பரசு ராமையாவின் மகன் | தெலுங்கு | |
1993 | காயம் | சர்கார் | தெலுங்கு | |
1993 | வக்த் ஹமாரா ஹை | கர்னல் சிக்காரா | இந்தி | |
1994 | அல்லரி பிரேமிகுடு | பைரவைய்யா | தெலுங்கு | |
1994 | எலான் | மனா செட்டி | இந்தி | |
1994 | தில்வாலே | கூன் | இந்தி | |
1994 | குடர் | சுவாமி பாட்டீல் | இந்தி | |
1995 | அம்மனோரு | கோரக் | தெலுங்கு | தமிழில் அம்மன் என்று மொழிமாற்றம் செய்யபட்டது |
1995 | அங்ராக்ஷாக் | வேலு | இந்தி | |
1995 | அந்தோலன் | பாபு நாயக் | இந்தி | |
1995 | ஹக்கீகத் | அண்ணா | இந்தி | |
1995 | வீர் | இந்தி | ||
1996 | அங்காரா | ஹோண்டா தாதா | இந்தி | |
1996 | ரங்க்பாஸ் | நந்து | இந்தி | |
1997 | அனகனகா ஓக ரோஜு | சாக்லேட் | தெலுங்கு | |
1997 | தடயம் | சிறை கண்காணிப்பாளர் பாண்டித்துரை | தமிழ் | |
1997 | இட்லர் | ருத்ரராஜு | தெலுங்கு | |
1997 | ஜூவன் யுத் | மதன் | இந்தி | |
1997 | காலியா | பவானி சிங் | இந்தி | |
1997 | லோஹா | தக்லா | இந்தி | |
1997 | ஓசி ராமுலம்மா | நிலக்கிழார் ஜகன்னாயக் பட்வாரி | தெலுங்கு | |
1998 | துள்ளித் திரிந்த காலம் | தேவியின் தந்தை | தமிழ் | |
1998 | சந்தால் | துர்ஜன் ராய் சஹாப் சிங் | இந்தி | |
1998 | ஹத்யாரா | ஷிஷுபால் சிங்கானியா | இந்தி | |
1998 | குண்டா | காலா செட்டி | இந்தி | |
1999 | நெஞ்சினிலே | சுப்பாரி | தமிழ் | |
1999 | கங்கா கி கசம் | காவல் ஆய்வாளர் | இந்தி | |
1999 | தாதா | யஷ்வந்த் | இந்தி | |
1999 | ஷெரா | இந்தி | ||
1999 | ஜான்வர் | ரகு செட்டி | இந்தி | |
1999 | சௌதாளா | இந்தி | ||
2000 | குர்பானியன் | இந்தி | ||
2000 | பூத் ராஜ் | பாட்லூ | இந்தி | |
2000 | அடவி சுக்கா | குருநாதம் | தெலுங்கு | |
2000 | தாகு ராம்காலி | இந்தி | ||
2000 | குரோத் | காவ்ரே | இந்தி | |
2000 | கணபதி | தெலுங்கு | ||
2001 | கலியோன் கா பாட்ஷா | இந்தி | ||
2001 | மிருகராஜு | தெலுங்கு | ||
2002 | 2 மச் | தெலுங்கு | ||
2003 | ராகவேந்திரா | தெலுங்கு | ||
2003 | சம்பு | தெலுங்கு | ||
2003 | வில்லன் | தெலுங்கு | ||
2003 | தடா | பித்தால் ராவ் | இந்தி | |
2003 | சத்யகத்: கிரைம் நெவர் பைஸ் | அப்பாஸ் அலி | இந்தி | |
2004 | அஞ்சி | குருராஜ் | தெலுங்கு | |
2004 | சேசாத்ரி நாயுடு | தெலுங்கு | ||
2005 | காக்கி | |||
2005 | பெல்லாம் பிச்சோடு | தெலுங்கு | ||
2005 | ஸ்லோகம் | தெலுங்கு | ||
2005 | அதனோக்கடே | படாபாய் | தெலுங்கு | |
2005 | நாயக்குடு | தெலுங்கு | ||
2005 | பாமகலப்பம் | தெலுங்கு | ||
2006 | முத்து | |||
2006 | சாமான்யுடு | ராமு யாதவ் | தெலுங்கு | |
2007 | போலீஸ் ஸ்டோரி 2 | கன்னடம் | ||
2007 | பந்தையக் கோழி | நாச்சப்பா கவுண்டர் | மலையாளம் | |
2008 | அதே நவ்வு | தெலுங்கு | ||
2009 | ஜகத்குரு ஸ்ரீ ஷிரிடி சாய் பாபா | தெலுங்கு | ||
2010 | தம்முனோடு | தெலுங்கு | ||
2010 | சந்தடி | தெலுங்கு | ||
2010 | அனகனகா ஒக ஆரண்யம் | தெலுங்கு |
குறிப்புகள்
தொகு- ↑ "Villain Ram Reddy dies of cancer". www.greatandhra.com. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
- ↑ "Rami Reddy is no more." www.bharatstudent.com. Archived from the original on 2011-04-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
- ↑ 3.0 3.1 3.2 "Actor Rami Reddy passes away". The Hindu (Chennai, India). 14 April 2011. http://www.thehindu.com/arts/cinema/article1696518.ece.
- ↑ https://www.imdb.com/name/nm0708218/