கனகா (நடிகை)
கனகா என்று பிரபலமாக அறியப்பட்ட கனக மகாலட்சுமி, இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மறைந்த பிரபல
(கனகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனகா (பிறப்பு: 14 சூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ஆம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு[1]. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
கனகா | |
---|---|
பிறப்பு | கனகா மஹாலட்சுமி சூலை 14, 1973 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1989–2001 |
சொந்த வாழ்க்கை
தொகு2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அவர் காணவில்லை என்றும், பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.[2]
திரைப்படங்கள்
தொகுதமிழ்
தொகு- கரகாட்டக்காரன் - 1989
- எதிர்காற்று - 1990
- அதிசய பிறவி - 1990
- கும்பக்கரை தங்கய்யா - 1991
- தாலாட்டு கேக்குதம்மா - 1991
- சாமுண்டி - 1992
- கோயில் காளை - 1993
- சக்கரை தேவன் - 1993
- கிளிப்பேச்சு கேட்கவா - 1993
- ஜல்லிக்கட்டுக்காளை - 1994
- சக்திவேல் - 1994
- பெரிய குடும்பம் - 1995
- சிம்ம ராசி - 1998
- விரலுக்கேத்த வீக்கம் - 1999
மலையாளம்
தொகு- காட்பாதர் - 1991
- வியட்நாம் காலனி - 1992
- கோளாந்தர வார்த்த - 1993
- பின்காமி - 1994
- வார்த்தக்யபுராணம் - 1994
- குஸ்ருதிக்காற்று - 1995
- மன்னாடியார் பெண்ணினு செங்கோட்டச்செக்கன் - 1997
- நரசிம்மம் - 2000