எதிர்காற்று

முக்தா எஸ். சுந்தர் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எதிர்காற்று என்பது 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம்.

எதிர்காற்று
இயக்கம்முக்தா எஸ். சுந்தர்
தயாரிப்புமுக்தா ஸ்ரீனிவாசன்
கதைமுக்தா ஸ்ரீனிவாசன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
கனகா
வி. கே. ராமசாமி
ஆனந்த் பாபு
மனோரமா
ஒளிப்பதிவுமுக்தா எஸ். சுந்தர்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ராம் நரேந்திரன் என்னும் வாலிபன் தன் வாழ்வில் அர்த்தம் இல்லை என்று தற்கொலை செய்துகொள்ளச் செல்கிறான். அங்கே தற்கொலை செய்ய இன்னொரு வாலிபனும் வருகிறான். சீட்டு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட அந்த வாலிபனுக்காக அவன் செய்த கொலைப்பழியை ஏற்று ராம் சிறை செல்கிறான். சிறையில் அவன் இருக்கையில் அவனும் அந்த வாலிபனும் நண்பர்கள் ஆகின்றனர். சிறையில் இருந்து ராம் வெளிவர வக்கீல் துணையுடன் மீட்க முயற்சி செய்யும் அவ்வாலிபன் மர்மமான முறையில் இறக்கிறான். சிறையில் ராம் எழுதிய புத்தகத்திற்கு அரசின் விருது கிடைக்கிறது. பரோலில் வெளி வரும் ராம், பத்திரிக்கையில் வேலை பார்க்கும் பெண் நிருபரின் துணையுடன் சமூக விரோதிகளையும், நண்பனைக் கொன்றவர்களையும் கண்டுபிடிக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்காற்று&oldid=3711666" இலிருந்து மீள்விக்கப்பட்டது