பேர்கன்
பேர்கன் (ⓘ) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில், நோர்வேயின் தலைநகரமாகவும் பேர்கன் இருந்தது. நோர்வேயின் வடமேற்கு கரையோரத்திலுள்ள ஓர்டலாந்து (Hordaland) மாவட்டத்தில் பேர்கன் நகரம் அமைந்திருப்பதுடன், ஓர்டாலாந்து மாவட்டத்தின் ஆட்சியக மையமும் இதுவேயாகும்.
பேர்கன் | |
---|---|
நாடு | நோர்வே |
மாநகராட்சி | பேர்கன் |
வட்டாரம் | வெஸ்ட்லான்ட் |
மாவட்டம் | மேற்கு நோர்வே |
நிறுவல் | 1070 |
அரசு | |
• நகரத் தந்தை | குணார் பாக்கி |
பரப்பளவு | |
• நகரம் | 465 km2 (180 sq mi) |
• நகர்ப்புறம் | 94.03 km2 (36.31 sq mi) |
• மாநகரம் | 2,755 km2 (1,064 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 3,11,200 |
• நகர்ப்புறம் | 2,91,900 |
• பெருநகர் | 4,81,000 |
இனம் | பேர்கனர் |
இனக்குழுக்கள் | |
• நோர்வேயர்கள் | 89.4% |
• போலந்தர் | 1.2% |
• ஈராக்கியர் | 0.6% |
• வியட்நாமியர்கள் | 0.5% |
• சிலி மக்கள் | 0.4% |
நேர வலயம் | ஒசநே+1 (நடு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (நடு ஐரோப்பிய கோடை நேரம்) |
இணையதளம் | http://www.bergen.kommune.no |
2011 ஒக்டோபர் 1 இல் உள்ள கணக்கெடுப்பின்படி பேர்கனின் மக்கள்தொகை 261,705 ஆக உள்ளது.[2] நோர்வே புள்ளிவிபர திணைக்களம் பேர்கன் பொருளாதாரப் பகுதியின் மக்கள்தொகை 2008 சனவரி கணக்கெடுப்பின்படி 378,818 என வரையறுத்துள்ளது.[3]
பேர்கன் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்குவதுடன், 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரங்கள் எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்பது ஐரோப்பிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ளது[4].
பேர்கன் நகரானது ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்”"Umbrella". Bergens Tidende. 15. oktober 2016. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04. {{cite web}}
: Check date values in: |date=
(help) என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. முன்னொரு காலத்தில் குடைகளை பணமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய இயந்திரங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை சரியாக வெற்றியளிக்காததால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது[5].
வரலாறு
தொகு
பேர்கன் நகரம் |
---|
பேர்கன்
|
பேர்கன் நகரமானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பழம்பெரும் நகரமாகும். இந்நகரம் 10ஆம் நூற்றாண்டிலிருந்து பலநூறு ஆண்டுகள் சர்வதேச வணிகம், கப்பல் வணிகம் போன்ற துறைகளில் முன்னணியில் இருந்தது. பேர்கன் நகர வரலாறானது பல வேறுபட்ட கூறுகளை உள்ளடக்கியிருப்பதாகும்.
பேர்கன் நகரமானது ஹரால்ட் ஹாட்ரோட (Harald Hardråde) என்பவரின் மகனான ஊலாவ் கிர்ர (Olav Kyrre) (1067–1093) அரசனால் கி.பி. 1070 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது[7]. பேர்கன் என்ற பெயரையும் ஊலாவ் கிர்ர அரசனே "மலைகளிடையேயான பசும்புல் நிலம்" என்ற அர்த்தத்தில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது[8]. பேர்கன் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் சில காலம் நோர்வேயின் தலைநகரமாகவும் இருந்தது.
பேர்கன் நகரானது ஒரு சர்வதேச வணிக முக்கியத்துவம்பெற்ற இடமாகும். ஹன்சியாட்டிக் லீக் (Hanseatic League) அமைப்பினரே பேர்கன் வர்த்தகத்தில் ஆட்சியுடையவர்களாக இருந்திருப்பினும், ஏனைய ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்களும், நோர்வே வர்த்தகர்களும்கூட இந்த வியாபார மையத்தை முக்கியமாகப் பாவித்து வந்தனர்.
இந்நகர் பல தடவைகள் நெருப்பின் அழிவுக்குட்பட்டது. அத்துடன் சில தடவைகள் கொள்ளை நோயினால் நகரில் பலர் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயினர்.
நிர்வாகம்
தொகுபேர்கன் (ⓘ) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டைய காலத்தில் அரசாட்சி முறையில் ஆளப்பட்டு வந்த இந்நகராட்சி, பின்னர் அரசாட்சி முறையை இழந்து நாடாளுமன்ற நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2000 ஆம் ஆண்டு முதல் பேர்கன் நாடாளுமன்ற நடை முறையை அடிப்படையாகக் கொண்ட நகராட்சி முறையிலான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது[9]. நகர மன்றத்தினால் தெரிவுசெய்து அமர்த்தப்படும் ஆணையர்கள் (Commisioners) என அழைக்கப்படும் ஏழு அரசாங்க அங்கத்துவர்களே நகரத்திற்கான உயர் அதிகாரத்தைக் கொண்டவர்களாவர். நகர அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் (Chief Commisioner), 25 ஏப்ரல் 2019 இலிருந்து, ரோகர் வல்ஹம்மெர் (Roger Valhammer) என்பவர்[10]இருக்கிறார். ஒக்டோபர் 2015 - செப்டெம்பர் 2021 இற்கான நகர முதல்வராக (Mayor) மார்த்தே மியூஸ் பேர்சென் (Marte Mjøs Persen) என்பவர் இருந்தார். [11] தற்போதைய நகர முதல்வராக ரூன பாக்கர்வீக் Rune Bakervik 2013 வரை இருப்பார்.[12] பேர்கன் நகராட்சி உள்ளிட்ட வெஸ்ட்லான்ட் (Vestland) மாவட்டத்தின் மாவட்ட ஆணையராக (County Governer of Vestland) லார்ஸ் ஸ்பொன்ஹைம் (Lars Sponheim) என்பவர் இருக்கிறார்[1].
பேர்கன் நகரமானது நிலவியல் அடிப்படையில் 8 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[13]. இப்பிரதேசங்களின் சில பகுதிகள் நகரப் பரப்பிற்குள் இல்லாவிட்டாலும், நகராட்சியினுள் இணைந்தே இருக்கின்றன.
நகரின் மையப் பகுதி பேர்கன்ஹூஸ் (Bergenhus) என்ற பகுதியினுள் வருகின்றது.
புவியியல்
தொகுபேர்கன் மாநகராட்சிக்கு உட்பட்ட பரப்பு 465 km2. அங்குள்ள சனத்தொகை 256,580[14]. சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 551 மனிதர்கள்.
பேர்கன் நகரானது மிகக் குறைவான அளவில் தாழ்நிலத்தைக் கொண்ட, மலைசார்ந்த பிரதேசமாகும். நகரின் முக்கிய பகுதிகளும், அதனைச் சூழவுள்ள பகுதிகளும் மலைகளாலும், கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. 50% ஆன நிலப்பரப்பு கடல் மட்டத்தைவிட 160 மீட்டர் உயரத்திற்கு மேலாகவே உள்ளது. நிலப்பரப்பில் 40% காடாகவும், 23.3% மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாகவும், 4.4% நன்னீர் கொண்ட பகுதியாகவும், 3.5% பயிர் செய்யும் நிலமாகவும் இருக்கிறது. பேர்கனின் அதியுயர் நிலமானது குல்ஃபியெல் (Gullfjell) என அழைக்கப்படும் மலையின் உச்சியாகவும், இது கடல் மட்டத்திலிருந்து 987 மீட்டர் உயரத்திலும் அமைந்திருக்கிறது[15][16].
மலைகள்
தொகுபேர்கன் நகரானது மலைகள் நிறைந்த பிரதேசமாகும். ஆனாலும் முக்கியமான 7 மலைகள் பேர்கன் நகரின் மையப்பகுதியைச் சுற்றி காணப்படுகின்றன[17]. அவற்றை 'ஏழு மலைகள்' என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தவர் லுட்விக் ஹோல்பேர்க் (Ludvig Holberg) (1684–1754) என்னும் பேர்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வரலாற்றியலாளர் ஆவார்[18]. அவையாவன:
- Sandviksfjellet – 417 m.
- Fløyfjellet – 400 m.
- Rundemanen – 568 m.
- Ulriken – 643 m.
- Løvstakken – 477 m.
- Damsgårdsfjellet – 317 m.
- Lyderhorn – 396 m.
இவற்றுள் Fløyfjellet மலையில் உறுதியான இரும்புக் கம்பிகளின் தொடர் இழுவையால் மலையின் உச்சிவரை சென்று திரும்பக் கூடிய பேருந்தினை ஒத்த வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும். (Cable bus). Ulriken மலையில் இரும்புக் கம்பிகளின் தொடர் இழுவையால் தொங்கியபடி செல்லும் சிறிய வண்டிகள் (Cable cars) மலைக்குச் சென்றுவர உதவுகின்றன. இவை பேர்கனின் முக்கியமான சுற்றுலா மையங்களாகும்.
காலநிலை
தொகுபேர்கனின் காலநிலையானது மிதமான, ஈரலிப்பான, ஆண்டு முழுவதுமான வெப்பநிலையில் குறைந்தளவு மாற்றம் காட்டும் கரையோர காலநிலையாகும். இதனால் நோர்வேயின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது குளிர்காலம் குளிர் குறைந்ததாகவும், கோடைகாலம் குளிர்மையானதாகவும் காணப்படுகிறது. குளிர்காலத்தில் நோர்வேயிலேயே வெப்பநிலையை அதிகமாகக் கொண்ட இடமாக பேர்கன் இருக்கிறது. நோர்வேயிலேயே அதிகமான சராசரி வெப்பநிலையாக 7.7 பாகை செல்சியசைக் கொண்ட பிரதேசமாகும்.
பேர்கன் நோர்வேயின் மேற்குக் கரையோரத்தில் இருப்பதுடன், மலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதானால் அதிக மழை வீழ்ச்சியைக் கொண்டிருக்கிறது. வருடத்தின் எந்த ஒரு நாளிலும் பெரிய மழைவீழ்ச்சி ஏற்படலாம். வருடத்திற்கு சராசரியாக 213 நாட்கள் மழை பெய்வதுடன், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 357 ஐரோப்பிய நாடுகளில் 22 ஆவது இடத்தில் இருக்கிறது[19]. பேர்கனில் தொடர்ந்து வந்த 84 நாட்கள் தொடர் மழை பெய்ததன் மூலம், 21 ஜனவரி 2007 , புதிய சாதனையை பெற்றுக் கொண்டது[20]. பழைய சாதனை 1975 இல் தொடர்ந்து 59 நாட்கள் மழை பெய்தமையாகும்[21]. பேர்கனின் ஆண்டுக்குரிய சராசரி மழைவீழ்ச்சி 2250 mm ஆகும்[22].
Bergen (1961–1990) - தட்பவெப்பச் சராசரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | ஜன | பெப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | டிச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 3.6 (38) |
4.0 (39) |
5.9 (43) |
9.1 (48) |
14.0 (57) |
16.8 (62) |
17.6 (64) |
17.4 (63) |
14.2 (58) |
11.2 (52) |
6.9 (44) |
4.7 (40) |
10.5 (51) |
தாழ் சராசரி °C (°F) | -0.4 (31) |
-0.5 (31) |
0.9 (34) |
3.0 (37) |
7.2 (45) |
10.2 (50) |
11.5 (53) |
11.6 (53) |
9.1 (48) |
6.6 (44) |
2.8 (37) |
0.6 (33) |
5.2 (41) |
மழைவீழ்ச்சி mm (inches) | 190 (7.48) |
152 (5.98) |
170 (6.69) |
114 (4.49) |
106 (4.17) |
132 (5.2) |
148 (5.83) |
190 (7.48) |
283 (11.14) |
271 (10.67) |
259 (10.2) |
235 (9.25) |
2,250 (88.58) |
மூலம்: World Meteorological Organisation [23], Hong Kong Observatory [24] 2010-05-20 |
தட்பவெப்பநிலை வரைபடம் பேர்கன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
190
4
-0
|
152
4
-1
|
170
6
1
|
114
9
3
|
106
14
7
|
132
17
10
|
148
18
12
|
190
17
12
|
283
14
9
|
271
11
7
|
259
7
3
|
235
5
1
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: WMO [23] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
1947 ஆம் ஆண்டில் அளக்கப்பட்ட 31.8 பாகை செல்சியசே அதி கூடிய வெப்பநிலையாகும்[25]. அதி குறைந்த வெப்பநிலை 1987இல் −16.3 பாகை செல்சியசாக அளவீடு செய்யப்பட்டிருந்தது[26].
புள்ளி விபரம்
தொகு88.8% மக்கள் பூர்வீக நோர்வேஜிய மக்களாகவும், 2.1% மக்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து குடியேறியவர்களாகவும், 6.6% மக்கள் மேற்கத்தைய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து குடியேறியவர்களாகவும் இருக்கின்றனர்.[27] 2002 ஆம் ஆண்டில் பேர்கனில், 17 வயதுக்கு மேற்பட்டோரில், ஒருவரின் சராசரி மொத்த வருமானம் 330,000 (NOK) ஆக இருந்தது[27]. 2007 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 20-29 வயதுக்கு இடையானோரில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 104.6 ஆண்கள் இருந்ததுடன், 22.8% மானோர் 17 வயதுக்கு உட்பட்டவராயும், 4.5% ஆனோர் 80 வயதுக்கு மேற்பட்டோராயும் இருந்தனர்[27].
மதங்கள்
தொகுமதம் | உறுப்பினர்கள்[28] | விழுக்காடு |
---|---|---|
புனித பால் கத்தோலிக திருச்சபை | 7,300 | 2.89% |
சுதந்திர புரடஸ்தாந்த திருச்சபை | 6,297 | 2.49% |
இசுலாம் | 2,533 | 1.00% |
இந்து | 832 | 0.33% |
மரபுவழி திருச்சபை | 273 | 0.10% |
ஆண்டு | 1876 | 1951 | 1976 | 2004 | 2008 |
---|---|---|---|---|---|
பேர்கனிலுள்ள ரோமன் கத்தோலிக்கர் | 20 | 408 | 1,112 | 4,044 | 7,300 |
விழுக்காடு | 0.0% | 0.3% | 0.5% | 1.7% | 2.9% |
ஆண்டு | 2006 | 2009 |
---|---|---|
பேர்கனிலுள்ளஇசுலாமியர் | 1,892 | 2,533 |
விழுக்காடு | 0.7% | 1.0% |
(இங்கு குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை, குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களாகப் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே. மக்கள் தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் எந்தவொரு மதத்திலும் பதிவு செய்யப்படாமலும் உள்ளனர். பதிவு செய்யப்பட்டவர்கள், மொத்த சனத்தொகையில் என்ன விழுக்காடு என்பதே கணிக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.)
குடியேறிய மக்கள்
தொகுநாடு | மக்கள் தொகை[29] |
---|---|
மொத்தம் | 28,974 |
ஐரோப்பிய ஒன்றியம்/EEA, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து | 11,189 |
ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தவிர்த்த ஓசியானியா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்/EEA தவிர்த்த ஐரோப்பா | 17,785 |
நாடு | மக்கள் தொகை[30] | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 28,974 | 11.2% |
போலந்து | 3,128 | 1.2% |
ஈராக் | 1,662 | 0.6% |
வியட்நாம் | 1,294 | 0.5% |
சிலி | 1,244 | 0.4% |
செருமனி | 1,142 | 0.4% |
இலங்கை | 1,130 | 0.4% |
சுவீடன் | 1,014 | 0.3% |
சோமாலியா | 976 | 0.3% |
ஐக்கிய இராச்சியம் | 923 | 0.3% |
பொசுனியா எர்செகோவினா | 808 | 0.3% |
தாய்லாந்து | 711 | 0.2% |
ஈரான் | 690 | 0.2% |
டென்மார்க் | 688 | 0.2% |
துருக்கி | 606 | 0.2% |
இந்தியா | 586 | 0.2% |
உருசியா | 576 | 0.2% |
பிலிப்பீன்சு | 569 | 0.2% |
ஐக்கிய அமெரிக்கா | 536 | 0.2% |
லித்துவேனியா | 513 | 0.1% |
சீனா | 473 | 0.1% |
கல்வி
தொகுஇலவசக்கல்வி முறையே இங்கு நடைமுறையில் உள்ளது. உயர்கல்வி கற்க இங்கிருந்து வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அரசாங்க பாடசாலைகளில், கற்கும் மொழி நோர்வே மொழியாக இருப்பதுடன் இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மூன்றாம் மொழி ஒன்றும் தெரிவுசெய்து கற்க வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசாங்கப் பாடசாலைகளிலேயே, வெளிநாட்டு பெற்றோரையுடைய குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, நோர்வே மொழியில் கல்விகற்க கடினமாக இருக்கும் குழந்தைகளுக்கே இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பேர்கனில் கல்வித் திட்டமானது ஆரம்பக் கல்வி, கீழ் உயர்நிலைக் கல்வி, மேல் உயர்நிலைக் கல்வி, உயர் கல்வி என்ற நிலைகளை உள்ளடக்கியிருக்கும்.
பொருளாதாரம்
தொகுபேர்கனில் இருக்கும் துறைமுகமானது நோர்வேயிலேயே மிகப் பெரிய துறைமுகமாகவும், ஐரோப்பியாவிலுள்ள பெரிய துறை முகங்களில் ஒன்றாகவும் இருக்கிறது[31]. ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டில் டைம் செய்தியிதழானது பேர்கனை, ஐரோப்பாவின் 14 "இரகசிய சொத்துக்கள்" இல் ஒன்றாக வர்ணித்திருந்தது[32]. பேர்கனின் சொத்தானது கடல் வணிகம் (Maritime business), நீர் வேளாண்மை (aquaculture), கடல் தொடர்பான ஆய்வுகள் (marine research) போன்றவற்றில் தங்கியுள்ளது. கடல் தொடர்பான ஆய்வில் பேர்கனிலுள்ள IMR (Institute of Marine Research) ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளதுடன் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய கடல் ஆய்வு நிலையமாகவும் இருக்கிறது.
நோர்வே கடற்படைக்குரிய முக்கிய தளமும் பேர்கனிலே இருப்பதுடன், பேர்கன் விமான நிலையமே நோர்வேயின் வடகடல் பெற்றோலிய வர்த்தகத்திற்குரிய உலங்கு வானூர்தித் தளமாகவும் இருக்கிறது[33]
நோர்வேயின் மிகப்பெரிய TV 2 என்ற தொலைக்காட்சி நிலையத்தின் முதன்மையான அலுவலகமும் பேர்கனிலேயே அமைந்துள்ளது.
நகரின் முக்கிய வருமானம் சுற்றுலாத்துறையிலிருந்தே பெறப்படுகிறது. பல காலங்களில் நகரிலுள்ள அனைத்து விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளாலும், கூட்டங்கள், மாநாடுகளில் பங்களிப்போராலும் நிறைந்திருக்கும்[34][35]. பேர்கன் நகரமானது உலகப் புகழ்பெற்ற கடல்நீரேரிகளுக்கான (கடனீர் இடுக்கேரி) வாசலாக அடையாளப்படுத்தப் படுத்தப்படுவதால், உல்லாச கடல் பயணத்திற்கான முக்கிய இடமாகவும் விளங்குகின்றது[36].
போக்குவரத்து
தொகுபேர்கனின் ஃப்லேஸ்லாண்ட் (Flesland) இலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு நேரடிச் சேவையும் வழங்கப்படுகிறது. அத்துடன் பேர்கனிலிருந்து நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ வரைக்குமான தொடர்வண்டிப் போக்குவரத்து சேவையும் உண்டு. பேர்கனில் இருந்து பல இடங்களுக்கும் பேருந்து சேவைகளும் இருக்கின்றது. பேர்கனிலிருந்து ஒஸ்லோ செல்லும் ஐரோப்பிய பாதை E16 ஆனது உலகிலேயே நிக நீண்ட குகையான Lærdalstunnelen ஐக் கடந்து செல்கிறது[37]. விரைவு பேருந்து வண்டிகள் நாட்டிலுள்ள, நீண்ட தூரப் பயணங்களில் பயன்படுத்தப்படுகிறது[38][39][40].
நகரினுள்ளும், நகரை அண்டிய பிரதேசங்களிலும் பேருந்து சேவை இருக்கிறது.
2010 ஜூன் மாதம் முதல் நகரில் இலகு தொடருந்து (Light Rail) சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நகரின் மையப்பகுதியில் இருந்து நெஸ்தூன் (Nesttun) என்னும் இடம்வரை சேவையிலுள்ளது[41]. விரைவில் விமான நிலையம் வரைக்கும், வேறு நகரை அண்டிய பகுதிகளுக்கும் இச்சேவை ஆரம்பமாகும்.
Fløyen மலை உச்சிக்குப்போய் திரும்புவதற்கு இழுவையில் இயங்கும் இலகு தொடருந்துகளும் (Funicular), ஊல்ரிக்கென் Ulriken மலைக்குப் போய்த் திரும்புவதற்கு இழுவையில் இயங்கும் தொங்கு வண்டிகளும் (Aerial tramway) இயங்குகின்றன. இது பொதுவாக சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படும். பேர்கனிலிருந்து கரையோரம் வழியாக வடக்கிலுள்ள இடங்களுக்குச் செல்ல, கப்பல் சேவையும் உள்ளது.
கலாச்சாரம்
தொகுபேர்கன் ஒரு வணிக நகரமாக இருந்தபோதிலும், பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்த வணிகர்கள், வணிகரீதியில் காட்டிய ஆர்வத்துடன் கூடவே கலாச்சாரத்திலும் தமது நாட்டத்தையும், ஈடுபாட்டையும் அதிகளவில் காட்டிய காரணத்தால் இந்த நகரம் தற்போதும் நோர்வேயில் ஒரு முக்கிய கலாச்சார மையமாகத் திகழ்ந்து வருகின்றது. பேர்கன் நகரமானது, 2000 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கலாச்சார நகரமாகவும் தெரிவாகியிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
உலகிலேயே பழமையான ஒத்தினிய (Symphony) சேர்ந்திசைக்குழுக்களில் (orchestras) ஒன்றை பேர்கன் நகரம் கொண்டிருப்பதுடன், நாட்டின் முதல் தேசிய திரையரங்கத்தையும் கொண்டிருக்கின்றது. அத்துடன் சர்வதேச அளவிலான பல கொண்டாட்டங்களுக்கான இடமாக இருப்பதுடன், பல்வேறு வகையான அருங்காட்சியகங்கள், நிலையங்களையும் கொண்டிருக்கின்றது. புகழ்பெற்ற சித்திரப்படத் தொடர் எழுத்தாளர் லுட்வீக் ஹோல்பேர்க், இயற்கைக்காட்சி ஓவியர் யொஹான் கிறிஸ்டியன் டால், இசையமைப்பாளர் எட்வேர்ட் கிரீக் ஆகியோர் பேர்கனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர். மேலும் பிரபல்யமான நாடகவியலாளரான ஹென்ரிக் இப்சன் பேர்கனைப் பிறப்பிடமாக கொண்டிராத போதிலும் அங்குள்ள அரங்கிலேயே தனது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தார். பேர்கனில் வாழ்ந்த ஒரு தொழிலதிபர், புகழ்பெற்ற ஓவியரான எட்வேர்ட் முன்ச் அவர்களது தனித்துவம் வாய்ந்த பல ஓவியங்கள் பேர்கன் நகரில் சேமித்து வைக்கப்பட உதவினார்.
இசை
தொகு
உலகின் மிகப் பழமை வாய்ந்த சேர்ந்திசைக் குழுக்களில் ஒன்றான Bergen Philharmonic Orchestra வானது பேர்கன் நகரிலேயே தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இது தவிர பல்வேறுபட்ட இசைக்குழுக்களும் பேர்கன் நகரைத் தமது அடித்தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
உலகறிந்த இசையமைப்பாளரான எட்வார்ட் கிரீக் என்பவர் பேர்கன் நகரைச் சார்ந்தவர். அவரது வீடும், அவரது இசை தொடர்பான ஆவணங்களும் பேர்கனில் பாதுகாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரை நினைவுகூரும் முகமாக, பேர்கன் நகரில் கிரீக் மண்டபம் (Grieg Hall) எனப்படும் கலை கலாச்சார விழாக்கள் நிகழ்த்தக்கூடிய பெரிய மண்டபம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இம்மண்டபமானது ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தக் கூடிய வகையில் 1509 இருக்கைகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வட்டாரப்பேச்சு மொழி
தொகுபேர்கனுக்குரிய வட்டாரப்பேச்சு மொழியானது பேர்கன்ஸ்க் (Bergensk) என்று அழைக்கப்படுகின்றது. இந்த மொழியானது மிக இலகுவாக ஏனைய வட்டாரப்பேச்சு மொழிகளிலிருந்து அடையாளப்படுத்தக் கூடியது. இந்த பேச்சு மொழியிலுள்ள சொற்கள் பலவும் நோர்வேயின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரு மொழி வடிவங்களான பூக்மோல் அல்லது நீநொர்ஸ்க் ஆகியவற்றில் காணப்பட்டபோதிலும், இவ்விரு எழுத்து வடிவ மொழிகளிலும் காணப்படாத பல இயல்புகள் இந்த வட்டாரப்பேச்சு மொழியில் உள்ளது.
பேர்கன் நகரில் 1350–1750 காலப்பகுதியில் வணிக நோக்கத்திற்காக குடியேறியிருந்த Hanseatic League அமைப்பினரின் யேர்மன் மொழியும் இப்பேச்சு மொழியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[42] அத்துடன் நோர்வே டென்மார்க்க்குடன் இணைந்திருந்த, 1536–1814 ஆண்டுகளில் பேர்கன் நோர்வேயின் முக்கிய நகரமாக இருந்ததுடன், டென்மார்க் மொழியையும் ஓரளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருந்தது.
விளையாட்டு
தொகுபேர்கன் மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு கால்பந்து ஆகும். Brann, Løv-Ham என்பவையே பேர்கனின் முக்கியமான தொழில்சார் கால்பந்து அணிகளாகும். அதிகளவு பொதுமக்களின் ஆதரவைப் பெற்ற அணியாக 'நெருப்பு' என்ற அர்த்தமுடைய பெயரைக் கொண்ட Brann அணியே இருந்து வருகின்றது. பேர்கனின் மிகப்பெரிய விளையாட்டரங்கு Brann Stadion ஆகும்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ "Immigrants and Norwegian-born to immigrant parents by country of birth1,(the 20 largest groups).Selected municipalities.1 January 2009". Statistics Norway. Archived from the original on 2012-09-17. பார்க்கப்பட்ட நாள் 2009-07-06.
- ↑ Population per 1 October 2009 and population changes during 3rd quarter of 2009. Hordaland
- ↑ "Table 3 Population per 1 January 2008 and population changes in 2007. Economic Regions". Archived from the original on 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "European Capitals of Culture 2000–2005, European Commission". Archived from the original on 2007-01-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
- ↑ "Paraply-fiasko i Bergen" (in Norwegian). Archived from the original on 2007-12-15. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Brekke, Nils Georg (1993). Kulturhistorisk vegbok Hordaland (in நோர்வேஜியம்). பேர்கன்: Hordaland Fylkeskommune. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-7326-026-7.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Elisabeth Farstad (2007). "Om kommunen" (in Norwegian). Bergen kommune. Archived from the original on 5 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Brekke, Nils Georg (1993). Kulturhistorisk vegbok Hordaland (in Norwegian). Bergen: Hordaland Fylkeskommune. p. 252. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-7326-026-7.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Styringssystem" (in Norwegian). Bergen kommune. Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 9 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Byrådet Valhammer 2019 - 2021". பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
- ↑ [https://www.bergen.kommune.no/politikk/ordforeren/historikk/marte-mjos-persen%7Cdate=}}[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Om Rune Bakervik". Archived from the original on 2022-01-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
- ↑ Statistics Norway (2004). "Bydeler i Oslo, Bergen, Stavanger og Trondheim" (in Norwegian). Archived from the original on 3 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Population, by sex, age and municipality. Hordaland. 1 January 2010". Statistics Norway. 2010. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 15 March 2010.
- ↑ Christoffer Oftedahl: Norges geologi. Tapir. 2. utg. 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-519-0446-3
- ↑ "Norwegian Mountains: Gullfjellstoppen". பார்க்கப்பட்ட நாள் 8 September 2007.
- ↑ "Bergen Kommune: Om kommunen". Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
- ↑ Gunhild Agdesteen (2007). "I den syvende himmel" (in Norwegian). Bergens Tidende. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ bt.no: Bergen er ikke regnbyen
- ↑ ANB-NTB (2007). "Stopp for nedbørsrekord" (in Norwegian). siste.no. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "TV 2 Nettavisen: «Knusende nedbørrekord»". Archived from the original on 2008-01-25. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
- ↑ Meterologisk Institutt (2007). "met.no: Normaler for Bergen" (in Norwegian). Archived from the original on 13 ஆகஸ்ட் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ 23.0 23.1 "World Weather Information Service – Bergen". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 2010-05-20.
- ↑ "Climatological Normals of Bergen". Hong Kong Observatory. Archived from the original on 2013-02-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-20.
- ↑ "Varmerekord i Bergen" (in Norwegian). 2003. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Bjørbæk, G. 2003. Norsk vær i 110 år. N.W. DAMM & Sønn. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-04-08695-4; page 260
- ↑ 27.0 27.1 27.2 "SSB:Tall om Bergen Kommune". Archived from the original on 2007-10-01. பார்க்கப்பட்ட நாள் 2010-08-24.|(in Norwegian)|Statistics, Norway|Retrived 1 October 2007
- ↑ County Mayor of Hordaland – Norwegian
- ↑ "Immigrants and Norwegian-born to immigrant parents, by country background and municipality. 1 January 2010. Absolute figures and per cent". Statistics Norway. பார்க்கப்பட்ட நாள் 2010-04-30.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Statistics Norway பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம் – Immigrants and Norwegian-born to immigrant parents, by country of birth, (the 20 largest groups). Selected municipalities.1 January 2010]
- ↑ "Bergen havn holder koken" (in Norwegian). NA24. 2004. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Europe's Secret Capitals". TIME Magazine. 30 August 2004 இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040823170931/http://www.time.com/time/europe/secret/opener.html. பார்த்த நாள்: 14 August 2007.
- ↑ "Film Location:Bergen". West Norway Film Commission. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 October 2007.
- ↑ Lars Kvamme and Ingvild Bruaset. "Russerne kommer" (in Norwegian). bt.no. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Frode Buanes and Lars Kvamme (2006). "Sender bergensturister vekk" (in Norwegian). bt.no. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 10 October 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Bergen Havn. "Velkommen til Bergen havn - "Inngangen til Fjordene"" (in Norwegian). Archived from the original on 18 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Lærdalstunnelen" (in Norwegian). 2007. Archived from the original on 2008-01-17. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ekspressbuss (Tide ASA)" (in Norwegian). Tide ASA. Archived from the original on 2007-12-23. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Lavprisekspressen.no" (in Norwegian). Lavprisekspressen.no. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Fjord1 – Ekspressbussruter" (in Norwegian). Fjord1. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Signingsferden" (in Norwegian). 2010. Archived from the original on 26 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Nesse, Agnete (2003). Slik ble vi bergensere – Hanseatene og bergensdialekten. Sigma Forlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-7916-028-0.