பேர்கன் நகரத்தில் கல்வி

(பேர்கன் நகர கல்வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேர்கன் நகரம்
பற்றிய கட்டுரைகள்

பேர்கன் (Bergen) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கே இலவசக்கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. உயர்கல்வி கற்க இங்கிருந்து வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அரசாங்க பாடசாலைகளில், கற்கும் மொழி நோர்வே மொழியாக இருப்பதுடன் இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மூன்றாம் மொழி ஒன்றும் தெரிவுசெய்து கற்க வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசாங்கப் பாடசாலைகளிலேயே, வெளிநாட்டு பெற்றோரையுடைய குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, நோர்வேஜிய மொழியில் கல்விகற்ற கடினமாக இருக்கும் குழந்தைகளுக்கே இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தமிழ்க் குழந்தைகளுக்கு சனிக்கிழமைகளில் தமிழ்ப் பாடசாலையும் இயங்கி வருகின்றது.

உயர்கல்வி

தொகு
The building of the Faculty of Education at Landås.
பேர்கன் பல்கலைக்கழகத்தின் ஆண் பாடகர் குழு என்ற அமைப்பினர்.

பேர்கன் பல்கலைக்கழகம், பேர்கன் பல்கலைக்கழக கல்லூரி ஆகியன உயர்கல்விக்கான இடங்களாக உள்ளன. பேர்கன் பல்கலைக்கழகமானது (Norwegian: Universitetet i Bergen) கிட்டத்தட்ட 16,000 மாணவர்களையும், 3000 அலுவலகர்களையும் கொண்டு நாட்டின் மூன்றாவது பெரிய பல்கலைக்கழகமாக இருக்கிறது[1]. பேர்கன் பல்கலைக்கழகக் கல்லூரி 6000 மாணவர்களையும், 600 அலுவலர்களையும் கொண்டுள்ளது[2].

இவை தவிர பொருளாதார வணிக நிர்வாகத்திற்கான கல்லூரி *Norwegian School of Economics and Business Administration, Norwegian: NHH Norges Handelshøyskole) ஒன்றும் உள்ளது. அத்துடன் பேர்கன் கட்டடக்கலைக் கல்லூரி Bergen School of Architecture (Bergen Arkitekt Skole), பேர்கன் தேசிய கலைப்பயிற்சிக் கல்லூரி (Bergen National Academy of the Arts (Kunsthøgskolen i Bergen), கடற்படைப் பயிற்சிக் கல்லூரி Naval Academy (Sjøkrigsskolen) போன்றனவும் உள்ளன.

ஆராய்ச்சி

தொகு

பேர்கன் பல்கலைக்கழகமும், ஹோக்கலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையுமே பேர்கனிலுள்ள பெரிய ஆராய்ச்சி மையங்களாகும்.

மனித உரிமைகளும் அபிவிருத்தியும் தொடர்பான ஆராய்ச்சியில் உள்ள மிகப்பெரிய தனியார் கல்வி நிலையமான Chr. Michelsen Institute - CMI (Christian Michelsens Institutt) உம் இங்கே உள்ளது. சர்வதேச அபிவிருத்தி தொடர்பான விடயங்களை அறிவித்தலும், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலுமே CMI இன் முக்கிய நோக்கமாகும்[3].
Norwegian Institute of Marine Research (Norwegian: Havforskningsinstituttet), UNIFOB AS போன்ற ஆராய்ச்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

ஆரம்ப, உயர்நிலைக் கல்வி

தொகு
 
The former building of the Bergen Katedralskole, then known as Bergen Latinskole.

ஆரம்ப, உயர்நிலைக் கல்வி முழுக்க முழுக்க இலவசமானதாகவே இருக்கிறது.

பேர்கனில் 64 ஆரம்பக்கல்வி பாடசாலைகளும்,[4] 18 கீழ் உயர்நிலைக்கல்வி பாடசாலைகளும்[5] 20 மேல் உயர்நிலைக்கல்வி பாடசாலைகளும்[6] இருக்கின்றன. அத்துடன் 11 ஆரம்ப, உயர்நிலைக்கல்வி இணைந்திருக்கும் பாடசாலைகளும் உள்ளன[7]

1153 ஆம் ஆண்டில் போப் அட்ரியன் நான்கு என்பவரால் இந்தப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது[8].இதுவே பேர்கனில் மிகப்பழைய பாடசாலையாகவும், நோர்வேயின் மிகப்பழைய பாடசாலைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. 1840 இலிருந்தே, இந்தப் பாடசாலை தற்போதைய இடத்தில் இயங்கி வருகின்றது. 2003 ஆம் ஆண்டில் பேர்கன் பாடசாலை அருங்காட்சியகம் இயங்கத் தொடங்கும்வரை, அந்தப் பாடசாலைக்குரிய பழைய இடம் பயன்படுத்தப்படாமலேயே இருந்து வந்தது[9]

பேர்கனில் இயங்கிவரும் ISB என்றழைக்கப்படும் International School of Bergen, ஆரம்ப, கீழ் உயர்நிலைக்கல்வி இணைந்த, ஆங்கிலவழிக்கல்வியை வழங்கும் ஒரு பாடசாலையாகும். இது 1972 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இங்கே கிட்டத்தட்ட 30 நாடுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைத்துலக மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் பாடசாலையின் பாடத்திட்டம் வரைவு செய்யப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Om Universitetet i Bergen" (in Norwegian). Archived from the original on 23 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Om Høgskolen i Bergen" (in Norwegian). 2007. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 August 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "About CMI" (in Norwegian). பார்க்கப்பட்ட நாள் 2 October 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Oversikt over barneskoler" (in Norwegian). Bergen kommune. 2007. Archived from the original on 5 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  5. "Oversikt over ungdomsskoler" (in Norwegian). Bergen kommune. 2007. Archived from the original on 14 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  6. "Skoleportalen" (in Norwegian). Hordaland fylkeskommune. 2007. Archived from the original on 26 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  7. "Oversikt over kombinerte skoler" (in Norwegian). Bergen kommune. 2007. Archived from the original on 5 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  8. Hartvedt, Gunnar Hagen (1994). Bergen Byleksikon. Kunnskapsforlaget. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-57-30485-9.
  9. "Bergen Skolemuseum, Informasjon, Historikk" (in Norwegian). பார்க்கப்பட்ட நாள் 9 September 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்கன்_நகரத்தில்_கல்வி&oldid=3625555" இலிருந்து மீள்விக்கப்பட்டது