பேர்கன் மருத்துவமனை
பேர்கன் மருத்துவமனை நோர்வே நாட்டின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கும் பேர்கன் நகரத்தில் இயங்கி வரும் அரசாங்க பொது மருத்துவமனையாகும். இது பேர்கனில் இயங்கிவரும் பேர்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயங்கி வருவதனாலும், Haukeland என்னும் இடத்தில் அமைந்திருப்பதனாலும் Haukeland University Hospital (HUS - Haukeland UniverstitetsSykehus) பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையுடன் வேறும் பத்து மருத்துவ நிறுவனங்கள் இணைக்கப்பட்டு Helse Bergen பரணிடப்பட்டது 2007-08-10 at the வந்தவழி இயந்திரம் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இந்த 11 நிறுவனங்களிலும் மிகப் பெரியது Haukeland University Hospital (HUS) ஆகும். இது நோர்வேயிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருப்பதுடன், மாற்று உறுப்பு பொருத்துதல் தவிர்ந்த ஏனைய எல்லா வகையான நோய் ஆய்வறிதல், அனைத்துவகை சிகிச்சைகளையும் அளிக்கவல்ல இடமாகவும் உள்ளது[1] பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் இந்த மருத்துவமனையே நோர்வேயில் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது[2] பரணிடப்பட்டது 2009-02-09 at the வந்தவழி இயந்திரம்.
பேர்கன் மருத்துவமனை அறக்கட்டளை | |
---|---|
அமைவிடம் | ஆக்கிலாந்து, பேர்கன், ஒர்தலாந்து, நோர்வே |
ஆள்கூறுகள் | 60°22′26″N 5°21′31″E / 60.374°N 5.3587°E |
மருத்துவப்பணி | பொது |
வகை | பல்கலைக்கழக மருத்துவமனை |
அவசரப் பிரிவு | ஆம் |
படுக்கைகள் | 1100 |
நிறுவல் | 1912 |
வலைத்தளம் | ஆக்கிலாந்து பல்கலைக்கழக மருத்துவமனை Haukeland University Hospital |
பட்டியல்கள் |
அத்துடன் பேர்கன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மருத்துவபீட மாணவர்களுக்கும், மருத்துவம் தொடர்பான ஏனைய பயிலுனர்களுக்கும் முறையான பயிற்சிநெறிகளை அளிப்பதற்கான இடமாகவும், மருத்துவம் தொடர்பான பல ஆய்வுகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட 9500 ஊழியர்கள் தொழில்புரியும் இடமாகவும், 700 க்கு மேற்பட்ட மருத்துவர்களையும், 2700 தாதியர்களையும் கொண்டிருக்கும் மருத்துவமனையாக இருப்பதனால் ஸ்கான்டினாவியா நாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது[3] பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்.
இம்மருத்துவமனையானது பேர்கன் பல்கலைக்கழகம், நோயியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Gade Institute பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்பட்டு வருகின்றது.
இந்த மருத்துவமனை 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 17.01.2012 அன்று 100 ஆவது ஆண்டு நிறைவுநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
படக்காட்சியகம்
தொகு-
ஆய்வுகூடங்களைக் கொண்ட கட்டடம் படத்தின் நடுப்பகுதியிலும், வலது பக்கம் பிரதான கட்டடமும், இடதுபக்கத்தில் உயிரியல் ஆய்வுகூடக் கட்டடமும் அமைந்துள்ளது.
-
பழைய பிரதான கட்டடம்
-
பெண்கள் மருத்துவப்பிரிவு
-
மருத்துவமனை நிருவாகக் கட்டடம்
-
பழைய The Gade Institute கட்டடம்
-
குழந்தைப் பேறு பெண்கள், உறவினர்கள், மற்றும் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுக்குரிய பார்வையாளர்கள் தமது சொந்த செலவில் தங்குவதற்கான விடுதி
-
புற்றுநோய்ப் பிரிவுக்கான கட்டடம்}