விடுதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தங்குமிடத்தையும் அதனோடு இணைந்த சேவைகளையும் வழங்கும் வணிகமே விடுதி ஆகும். பொதுவாக தற்காலகமாகவே விடுதிகளில் வாடிக்கையாளார்கள் தங்குவர். பயணிகள் சுற்றுலா அல்லது வேலை காரணமாக ஓர் இடத்துக்குச் செல்லும் போது விடுதிகளை நாடுவர்.

தமிழில் விடுதிகள் என்ற சொல் ஹோட்டல் (hotel), ஹாஸ்டல் (hostel) ஆகிய இரண்டு ஆங்கில சொற்களுக்கும் இணையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் தற்காலிக இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹோட்டல்’ என்றும், நீண்ட நாட்கள் இருப்பிட வசதிகளை வழங்கும் வணிகங்களை ’ஹாஸ்டல்’ என்றும் பொருட்படுத்துவர். ஹோட்டல் சற்று வசதியும் விலையும் கூடியதாகவும், ஹாஸ்டல் வசதியும் விலையும் குறைவாகவும் இருக்கும். வெளி இடங்களில் சென்று படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஆண்டில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பர்.