கலகலப்பு 2

சுந்தர் சி. இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கலகலப்பு 2 (ஒலிப்பு) (Kalakalappu 2), சுந்தர் சி. இயக்கத்தில், குஷ்பூவின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் தமிழ்த்திரைப்படம். ஜீவா, ஜெய், நிக்கி கல்ரானி மற்றும் காத்ரீன் திரீசா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஹிப்ஹாப் தமிழாவின் இசையிலும், = [[யு. கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவிலும், என். பி. சிறீகாந்த் படத்தொகுப்பிலும் இத்திரைப்படம் 2018இல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.[1]

கலகலப்பு 2
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புகுஷ்பூ
கதைசுந்தர் சி.
பத்ரி
வெங்கட் இராகவன்
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்புஜீவா
ஜெய்
நிக்கி கல்ரானி
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 2018 (2018-02-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

கதை தொகு

தன் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் வாழும் ஜெய், காசி - வாரணாசியில் இருக்கும் தன் குடும்பச்சொத்தை மீட்கச் செல்கின்றார்.</ref> http://www.cineulagam.com/films/05/100918 பரணிடப்பட்டது 2018-02-10 at the வந்தவழி இயந்திரம்</ref> காசி - வாரணாசியில் அவருடைய குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் வாழும் ஜீவா, தன் சகோதரியின் திருமணம் முடியும் வரை அந்த அந்த வீட்டை விட்டுச்செல்லமல் ஏமாற்றுகின்றான். சிவா இவர்களிடம் இருந்து பணத்தை திருடுகிறார்.[2] அதே வேளையில் அரசியல்வாதி ஒருவரின் கமுக்கமான விவரங்களைக் கொண்ட ஒரு மடிக்கணிப்பொறி ஒரு மிரட்டல் பேர்வழியிடம் சிக்குகிறது. அந்த மிரட்டல் பேர்வழி காசியில் இருந்து தமிழ்நாட்டு அரசியல்வாதியை மிரட்டுகின்றான். அந்த இரு இளைஞர்களும் எப்படி அரசியல் மிரட்டல் பேர்வழியுடன் தொடர்பு படுத்தப்படுகின்றனர்? என்னும் கதையுடன், இன்னும் பல நகைச்சுவைக் கிளைக்கதைகளும் திருப்பங்களும் கலந்து கலகலப்பு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.[3]

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசை, பின்னணி இசைப் பணிகளை மேற்கோண்டுள்ளார். இப்படத்தின் ராகேஷ், சரவெடி சரண், ஹிப்ஹாப் தமிழா, மோகன் ராஜன் ஆகியோர் எழுதியுள்ளார்.[4]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகலப்பு_2&oldid=3709411" இலிருந்து மீள்விக்கப்பட்டது