முத்து குளிக்க வாரீயளா
முத்து குளிக்க வாரீயளா (Muthu Kulikka Vaarieyala) என்பது சந்திர குமாரின் கதைக்கு, திரைக்கதை அமைத்து கே. எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய 1995 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் குஷ்பூ, விக்னேஷ், சங்கவி ஆகியோர் நடித்துள்ளனர். இது 10, மார்ச், 1995 அன்று வெளியானது.
முத்து குளிக்க வாரீயளா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | வி. கிரி |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | சௌந்தர்யன் |
நடிப்பு | குஷ்பூ விக்னேஷ் சங்கவி |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | திருமூர்த்தி பிலிம்ஸ் |
வெளியீடு | 10 மார்ச்சு 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுசெல்லப்பா என்ற கிராமவாசி, கல்வி முடிந்து தனது கிராமத்திற்குத் திரும்பி, தனது பக்கத்து வீட்டு சுந்தரியைக் காதலிக்கிறான். அளது தந்தை, பஞ்சாயத்து தலைவர். இவர்களின் காதல் விவகாரம் யாருக்காவது தெரித்தால் அவளை சுடுவதாக அச்சுறுத்துகிறார். ராஜா என்பவர் இராணுவத்தில் பணியாற்றுவதால் அவரது நிலத்தை தான் கவனித்து வரும் நிலையில் ராஜாவுக்கே சுந்தரியை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
நடிகர்கள்
தொகு- மூளை குழம்பிய பெண்ணாக குஷ்பூ
- செல்லப்பாவாக விக்னேஷ்
- சுந்தரியாக சங்கவி
- பஞ்சாயத்து தலைவராக வினு சக்ரவர்த்தி
- விசித்ரா ஒரு கிராமத்து அழகி
- ராஜாவாக கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்பு
தொகுமுத்து குளிக்க வாரீயாளா படமானது சந்திர குமாரின் கதையை அடிப்படையாக கொண்டது. இக்கதைக்கு கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை, உரையாடல் எழுதி இயக்கியுள்ளார். திருமூர்த்தி பிலிம்ஸ் பதாகையில் வி. கிரி தயாரித்த இப்படத்திற்கு அசோக் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே. தனிகாச்சலம் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திற்கு சேரன் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.[1]
இசை
தொகுபடத்திற்கு சௌந்தர்யன் இசையமைக்க,[2] பாடல் வரிகள் காளிதாசன் எழுதியுள்ளார்.
வெளியீடும், வரவேற்பும்
தொகுமுத்து குளிக்க வாரீயாளா 10 மார்ச் 1995 அன்று வெளியிடப்பட்டது.[3] நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கே. விஜின் எழுதியபோது, "உண்மையில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாத போதிலும், ரவிக்குமார் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையில் கட்டிப்போட்டு நிர்வகிக்கிறார். இதற்காக அவரது திறமைகளுக்கு ஒரு மரியாதை. "
குறிப்புகள்
தொகு- ↑ ""ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" – சங்கவி". ஆனந்த விகடன். 24 March 2018. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
- ↑ "பாட்டு பாட சொன்ன வாத்தியார்!". தினமலர். Nellai. 21 February 2016. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
- ↑ "Muthukulikka Vaariyala (1995)". Screen4screen. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் முத்து குளிக்க வாரீயளா
- முத்து குளிக்க வாரீயளா at "Complete Index to World Film