என். மாத்ருபூதம்

தமிழ்த் திரைப்பட நடிகர்

என். மத்ருபூதம் (N. Mathrubootham )(2 சூலை 1944 - 18 நவம்பர் 2004) என்பவர் இந்திய மனநல மருத்துவர், எழுத்தாளர், திரைப்பட நடிகர், இயக்குநர் ஆவார். இவர் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர் சில தமிழ்ப் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

N. Mathrubootham
பிறப்பு(1944-07-02)2 சூலை 1944
திருச்சிராப்பள்ளி
இறப்பு18 நவம்பர் 2004(2004-11-18) (அகவை 60)
சென்னை, இந்தியா
பணிமருத்துவர், ஆலோசகர், மனநல மருத்துவர்
அறியப்படுவதுபாலியல் கல்ல்வி, ஆலோசனை, திரைப்பட நடிப்பு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மாத்ரூபூதம் 1944 சூலை 2 அன்று திருச்சிராப்பள்ளியில் ஐயர் குடும்பத்தில் பிறந்தார்.[1] ஆரம்பக் கல்வியினை திருச்சிராப்பள்ளியில் கற்ற இவர் 1966இல் சென்னையில் உள்ள இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். மாத்ரூபூதம் தனது ஆசிரியர்களின் வழியில் மனநல மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றதும், சென்னையின் மனநல நிறுவனத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

தொழில்

தொகு

மனநல நிறுவனத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த மாத்ருபூதம் மனநல மருத்துவ பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[1] மேலும் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மனநல பேராசிரியராகவும் பணியாற்றினார். மாத்ருபூதத்திற்கு இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் மருத்துவர் மர்பாதியா விருதையும், மது போதைப்பொருள் குறித்த ஆராய்ச்சிக்காகவும், அவரது பன்மொழி பாலியல் கல்வித் திரைப்படமான "புதிரா புனிதமா " இற்கான உயரிய விருதையும் வழங்கியது.

இறப்பு

தொகு

இவரது பிற்கால வாழ்க்கையில், கீல்வாதம், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு[2] இதயத் தடுப்பு காரணமாக 2004 நவம்பர் 18 அன்று காலமானார்.[1]

திரைப்படவியல்

தொகு

நகைச்சுவை நடிகர் விவேக் உடன் சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை நடிகராகச் சிறிய வேடங்களில் மாத்ருபூதம் நடித்துள்ளார்.[2]

ஆண்டு படம் பங்கு
1999 வாலி டாக்டர்
2000 கண்டுகொண்டைன் கண்டுகொண்டைன் மனோகரின் தந்தை
2001 பெண்ணின் மனதை தொட்டு பேராசிரியர். தாசு அல்லது லார்ட் லபக்குதாசு
ஷாஜகான் பேராசிரியர். தாசு
2003 விசில் டாக்டராக கேமியோ பங்கு
2007 துள்ளல் தாசு/ கிரி/ சந்த்/ பிள்ளை/3

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._மாத்ருபூதம்&oldid=4089615" இலிருந்து மீள்விக்கப்பட்டது