வீட்டுக்குள்ளே திருவிழா

1996 ஆண்டைய திரைப்படம்

வீட்டுக்குள்ளே திருவிழா (Veettukulle Thiruvizha) என்பது கே. ஆர். எஸ் ஜவகர் இயக்கிய 1996 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் ஆனந்த் பாபு, சங்கவி, ரோகிணி, வினோதினி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர் சுந்தர்ராஜன், வடிவுக்கரசி, விஜய சந்திரிகா, ஜெய்கணேஷ், குமரிமுத்து, கே. கே. சௌந்தர், பாண்டு ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சங்கர் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துளார். படமானது 30, திசம்பர், 1996 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

வீட்டுக்குள்ளே திருவிழா
இயக்கம்கே. ஆர். எஸ் ஜவகர்
தயாரிப்புசங்கர்
கதைடி. தினகர் (உரையாடல்)
திரைக்கதைகே. ஆர். எஸ் ஜவகர்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். கேசவன்
எஸ். ஏ. என். கோபி
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
கலையகம்சுந்தர் ஆர்ட் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடுதிசம்பர் 30, 1996 (1996-12-30)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

முத்துவேல் ( ஆனந்த் பாபு ) ராமசாமி ( ஆர். சுந்தர்ராஜன் ) மற்றும் பார்வதி ( வடிவுக்கரசி ) ஆகியோரின் மகன். ராமசாமி தனது மகனுக்கு தனது மருமகளான அபிராமியை ( சங்கவி ) திருமணம் செய்விக்க விரும்புகிறார். பார்வதி தனது மருமகள் கிருஷ்ணவேணியை ( வினோதினி ) திருமணம் செய்விக்க விரும்புகிறார். பட்டணத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு, முத்துவேல் தனது வீட்டிற்குத் திரும்புகிறார். இதனால் அபிராமி தனது பெற்றோருடன் ( குமரிமுத்து மற்றும் ஷீலா) மற்றும் கிருஷ்ணவேணி தன் பெற்றோருடன் ( ஜெய்கணேஷ் மற்றும் விஜய சந்திரிகா) முத்துவேலை கவர்ந்திழுக்க அவனது வீட்டிற்குள் நுழைகிறனர். ஒரு நாள், முத்துவேலின் கல்லூரி காதலி காயத்ரி ( ரோகிணி ) அவனது வீட்டிற்கு வந்து முத்துவேலைக் கட்டிப்பிடிக்கிறாள். இது அவனது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

முத்துவேலும் காயத்ரியும் காதலிக்கிறனர். அவர்கள் இருவரும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்புகிறனர்.. முத்துவேலுக்காக போராடிக்கொண்டிருந்த அபிராமியும், கிருஷ்ணவேணியும் காயத்ரிக்கு எதிராக கைகோர்த்து செயல்படுகின்றனர். இதற்கிடையில், முத்துவேலின் தங்கை கர்ப்பமாகி, தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கல்லூரித் தோழர் குமரேசன் தான் தந்தை என்று தெரிவிக்கிறாள். குமரேசனின் தந்தையான கௌண்டர் ( கே. கே. சௌந்தர் ) தனது மகனுக்கு அவளை திருமணம் செய்விக்க தயாராக இல்லை என்கிறார். ஆனால் பின்னர், முத்துவேல் தனது மகள் லட்சுமியை திருமணம் செய்யத் தயாராக இருந்தால் அவனது தங்கையை தன் மகனுக்கு மணமுடிப்பதாக கூறுகிறார். பின்னர் காயத்ரி தன்னை ஒரு கெட்ட நடத்தையுள்ளவளாக சித்தரிக்கும் ஒரு போலி நாடகத்தைத் திட்டமிட்டு நடத்தி தனது காதலை தியாகம் செய்கிறாள். இதற்கிடையில், அபிராமியின் பெற்றோரும், கிருஷ்ணவேணியின் பெற்றோரும் தங்கள் மகளை இனி முத்துவேலுக்கு திருமணம் செய்விக்க முடியாது என்பதால், அவர்கள் அனைவரும் அவனது வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். முத்துவேல் காயத்திரியின் போலி நாடகத்தைப் பற்றி அறிந்ததும், அவன் தனது காதலியைத் தேடுகிறான். முத்துவேலும், காயத்ரியும் தழுவியவுடன் படம் முடிகிறது.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கான இசையை இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டுள்ளார். 1996 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், வாலி மற்றும் பொன்னியின் செல்வன் எழுதிய பாடல்களுடன் 5 இசைப் பாடல்கள் உள்ளன.[4][5]

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அத்தை சுட்ட"  சுவர்ணலதா, கிருஷ்ணராஜ் 4:28
2. "ராசா உன்ன ரவிக்கையின்"  சுவர்ணலதா, சுனந்தா, கிருஷ்ணராஜ் 4:44
3. "பச்சைக்கல்லு மூக்குத்தி"  மலேசியா வாசுதேவன், பி. எஸ். சசிரேகா 5:06
4. "தெய்வனை அன்பு"  சுவர்ணலதா 4:54
5. "ஊத்துக்கோட்டை"  மனோ, சித்ரா 4:50
மொத்த நீளம்:
24:02

குறிப்புகள் தொகு

  1. "Veetukkulle Thiruvizha Tamil Movie". woodsdeck.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  2. "Jointscene : Tamil Movie Veettukkulle Thiruvizha". jointscene.com. Archived from the original on 27 September 2009. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  3. "Filmography of veettukulle thiruvizha". cinesouth.com. Archived from the original on 28 November 2004. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  4. "Veetukullae Thiruvizha (1996) - Deva". mio.to. Archived from the original on 11 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  5. "Veetukullae Thiruvizha (Original Motion Pictures Soundtrack)". jiosaavn.com. Archived from the original on 11 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.