கல்கி (இதழ்)

கல்கி என்பது உலகத் தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து வெளியானது.[1] இந்த இதழ் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் துவக்கப்பட்டது.[2] தி. சதாசிவம் பத்திரிகையின் இணை நிறுவனராக இருந்தார். பொன்னியின் செல்வன், ம சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று நாவல்களை வெளியிட்டதற்காக இந்த இதழ் அறியப்பட்டது.[3]

கல்கி
இதழாசிரியர்லஷ்மி நடராஜன்
முன்னாள் இதழாசிரியர்கள்சீதா ரவி,
கி. ராஜேந்திரன்,
டி. சதாசிவம்,
கி. கிருஷ்ணமூர்த்தி
வகைபல்சுவை
இடைவெளிவாரம் ஒரு முறை
முதல் வெளியீடு1941
நிறுவனம்பரதன் பப்ளிகேஷன்ஸ்,
47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.
நாடு இந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்kalkionline.com

கல்கி கிருஷ்ணமூர்த்தி இந்த இதழின் ஆசிரியராக இருந்தார்.[2] அவரது காலத்தில் இதன் தரம் காரணமாக பெரிதும் மதிக்கப்பட்டது.[2] 1977 இல் இதழின் வெளியீடு நிறுத்தப்பட்டது, ஆனால் 1978 ஜூனில் மீண்டும் வெளிவரத் தொடங்கியது.[4] வெள்ளி விழா புதினப் போட்டியில் இந்த இதழின் முதல் பரிசை வென்ற முள்ளும் மலரும் (உமாச்சந்திரன் எழுதியது) இந்த இதழில் தொடராக வெளிவந்தது, பின்னர் அதே பெயரில் வெற்றிகரமான தமிழ் திரைப்படமாக வந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்திக்குப் பின்னர் தி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். அதன் பிறகு ஆசிரியராக கல்கியின் பேத்தி இலட்சுமி நடராஜன் இருந்தார்.[2][3]

2020 ஆண்டின் துவக்கத்தில் கல்கியின் அச்சுப் பதிப்பு நிறுத்தப்பட்டது.[5] ஆனால் இணையத்தில் வெளிவந்துக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "But history will remain...". The Hindu. 11 June 2003 இம் மூலத்தில் இருந்து 18 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030918102658/http://www.thehindu.com/thehindu/mp/2003/06/11/stories/2003061100040100.htm. 
  2. 2.0 2.1 2.2 2.3 Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 1895. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
  3. 3.0 3.1 Narayanan, Pavithra (21 March 2014). What are you Reading?: The World Market and Indian Literary Production. Taylor & Francis. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-80926-5.
  4. "கல்கி வார இதழ் 1941". Kalki. 21 Sep 2021. Archived from the original on 19 December 2023. பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.
  5. கல்கி வாரப் பத்திரிகையும் நானும், இ. ஆர். ஏ. முருகன்

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(இதழ்)&oldid=4104541" இலிருந்து மீள்விக்கப்பட்டது