அஞ்சாதே (திரைப்படம்)
அஞ்சாதே 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இது இயக்குனர் மிஸ்கினின் இரண்டாவது படைப்பாகும்; பெப்ரவரி 15, 2008அன்று வெளியானது.[1][2][3]
அஞ்சாதே | |
---|---|
இயக்கம் | மிஸ்கின் |
கதை | மிஸ்கின் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | பிரசன்னா நரேன் அஜ்மல் அமீர் விஜயலட்சுமி |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசுவாமி |
வெளியீடு | பெப்ரவரி 14, 2008 |
ஓட்டம் | 190 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் நரேன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நரேனின் நண்பனாக இருந்து கால ஓட்டத்தில் எதிரியாக மாறும் கதாப்பாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். நடிகர் பிரசன்னா அதிகம் பேசாத வில்லனாகவும் பாண்டியராஜன் பிரசன்னாவுக்கு துணை நிற்கும் லோகு என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி, இத்திரைப்படத்தில் அஜ்மலின் தங்கையாக நரேனை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். இவர்களைத்தவிர லிவிங்ஸ்டன் (நடிகர்) அஜ்மலின் தந்தையாகவும்,எம். எஸ். பாஸ்கர் நரேனின் தந்தையாகவும், இயக்குனர், நடிகர் பொன்வண்ணன் நரேனின் காவல் துறை உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றார்கள். சுந்தர்.சி பாபு இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.
அஞ்சாதே திரைப்படம் மூலம் விஜய் டிவி விருதுகளில் "சிறந்த இயக்குனர் " விருதுக்காக இயக்குனர் மிஸ்கின் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sathya Sodanai to Aaruvadu Sinam to Anjaade". Yahoo Movies. 16 October 2007. Archived from the original on 16 October 2007.
- ↑ Welcome to Sify.com
- ↑ Kalorth, Nithin (2013). "Identification and Analysis of Images in Anjathey". Media Watch 4 (3): 391–399. doi:10.1177/0976091120130311. https://www.academia.edu/4810771. பார்த்த நாள்: November 29, 2015.