தேவகி (திரைப்படம்)
தேவகி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எஸ். பாலச்சந்தர், மாதுரி தேவி, வி. என். ஜானகி, எம். என். நம்பியார், ஆர். பாரதி, ஏ. கருணாநிதி, எஸ். ஆர். ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தேவகி | |
---|---|
பாட்டுப் புத்தக மேலட்டை | |
இயக்கம் | ஆர். எஸ். மணி |
தயாரிப்பு | கணபதி பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை மு. கருணாநிதி |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | என். என். கண்ணப்பா எஸ். பாலச்சந்தர் நம்பியார் ஏ. கருணாநிதி மாதுரி தேவி வி. என். ஜானகி ஆர். பாரதி எஸ். ஆர். ஜானகி |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் |
வெளியீடு | சூன் 21, 1951 |
நீளம் | 16575 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுஎன். என். கண்ணப்பா - துரை
எஸ். பாலச்சந்தர் - ராஜா
எம். என். நம்பியார் - கோபு
டி. பாலசுப்ரமணியம் - ரகுநாத்
டி. என். சிவதாணு - காரியதரிசி
ஏ. கருணாநிதி - கோவிந்தன்
எஸ். எம். திருப்பதிசாமி - மெய்யப்பர்
ஏ. கணபதி - கந்தவேள்
வி. எம். ஏழுமலை - வைத்தியர்
எம். என். கிருஷ்ணன் - சிஷ்யன்
டி. எம். சௌந்தரராஜன் - பிச்சைக்காரன்
பி. எஸ். சுப்பையா - வேலையற்றவன்
வி. என். ஜானகி - தேவகி
மாதுரிதேவி - லீலா
ஆர். பாரதி - பாப்பா
எஸ். ஆர். ஜானகி - குஞ்சம்மாள்
எம். ராதாபாய் - மாணவ சங்கத் தலைவி
எம். டி. கிருஷ்ணாபாய் - மாதர் சங்கத் தலைவி
பேபி ராணி வசந்தி - செல்வமணி
பாடல்கள்
தொகுதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். பாடல்களை இயற்றியோர்: ஏ. மருதகாசி, கா. மு. ஷெரீப், கண்ணதாசன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. ஜி. கிருஷ்ணவேணி (ஜிக்கி), என். எல். கானசரஸ்வதி, ஆர். ரத்னமாலா, யு. ஆர். சந்திரா, ஆர். பார்வதி ஆகியோர்.
உசாத்துணைகள்
தொகு- சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 2016-11-07.
- தேவகி பாட்டுப் புத்தகம். சேலம்: கஜலக்ஷ்மி பவர் பிரஸ், எக்ஸ்டென்சன், சேலம்.