என். எல். கானசரஸ்வதி

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

என். எல். கானசரஸ்வதி ஒரு இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1950 களிலும், 1960 களின் முற்பகுதியிலும் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். அநேகமாக தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள இவர் ஏனைய தென்னிந்திய மொழிப் படங்கள் சிலவற்றிலும் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை. அவை திரைப்படங்களில் நடனக் காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

பாடல்கள்

தொகு
தமிழ்

பின்வரும் பாடல் விபரங்கள் "திரைக்களஞ்சியம் தொகுதி 1[1] "திரைக்களஞ்சியம் தொகுதி 2[2] ஆகிய நூல்களிலிருந்து திரட்டப்பட்டன.

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் பாடலாசிரியர் உடன் பாடியவர்/கள்
1951 தேவகி இல்லறம் காப்பதுவே ஜி. இராமநாதன் திருச்சி லோகநாதன்
1952 அமரகவி எல்லாம் இன்பமே ஜி. இராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
சுரதா எம். கே. தியாகராஜ பாகவதர்
முல்லைச் சிரிப்பிலே லட்சுமனதாஸ் பி. லீலா
மூக்குத்தி மின்னுது
1952 குமாரி நாட்டுக்கு நலம் நாடுவோம் கே. வி. மகாதேவன் எம். பி. சிவம்
1952 மூன்று பிள்ளைகள் உன்னருள் மறவேன் ஐயா பி. எஸ். அனந்தராமன்
எம். டி. பார்த்தசாரதி
கொத்தமங்கலம் சுப்பு
1952 தாய் உள்ளம் பூ செண்டு நீ வி. நாகையா
ஏ. ராமாராவ்
கனகசுரபி டி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி
1953 அன்பு வெந்தழலாய் எரிக்கும் வெண்மதியே டி. ஆர். பாப்பா தண்டபாணி ஏ. பி. கோமளா
1953 மதன மோகினி ஆதி முதலானவர் கே. வி. மகாதேவன் எம். பி. சிவம் ஏ. பி. கோமளா
1953 நால்வர் அருள் தாரும் எமதன்னையே கே. வி. மகாதேவன் ஏ. மருதகாசி
1953 உலகம் காதலினால் உலகமே இன்பமதே எம். எஸ். ஞானமணி குயிலன் திருச்சி லோகநாதன்
கலையே உயிர் துணையே
1954 நல்லகாலம் கண்ணாலே காண்பதும் கே. வி. மகாதேவன் எம். பி. சிவம்
1954 பொன் வயல் நம்ம கல்யாணம் ரொம்ப நல்ல கல்யாணம் துறையூர் இராஜகோபால சர்மா
ஆர். இராஜகோபால்
டி. கே. சுந்தர வாத்தியார் டி. ஆர். இராமச்சந்திரன்
1954 புதுயுகம் ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க ஜி. இராமநாதன் கா. மு. ஷெரீப் ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்னமாலா
1955 கள்வனின் காதலி தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
கண்டசாலா
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எம். எல். வசந்தகுமாரி
1955 நல்ல தங்காள் எவளே அவளே ஜி. இராமநாதன் ஏ. மருதகாசி
1955 நம் குழந்தை பாலைவனமீதிலே ஜீவநதி போலவே எம். டி. பார்த்தசாரதி தஞ்சை இராமையாதாஸ்
1955 நீதிபதி ஆனந்தமே ஆனந்தம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஏ. மருதகாசி டி. வி. இரத்தினம்
1956 கண்ணின் மணிகள் மகேஸ்வரி உந்தன் எஸ். வி. வெங்கட்ராமன் பாபநாசம் சிவன்
வினையோ நின் சோதனையோ
நாயகர் பட்சமடி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
1956 நானே ராஜா ஆடற்கலைக்கழகு சேரப் பிறந்தவள் டி. ஆர். ராம்நாத் பாரதிதாசன் பி. லீலா
1956 ஒன்றே குலம் மாங்கிளை மேலே பூங்குயில் கூவியது எஸ். வி. வெங்கட்ராமன் சுரபி வி. என். சுந்தரம், கே. ராணி, எம். எஸ். இராஜேஸ்வரி, கல்யாணி
1956 படித்த பெண் இருள் சூழ்ந்த உலகினிலே அருண், இராகவன் கவி இலட்சுமணதாஸ்
வாழ்வினிலே காணேனே இன்பம் ஆரூர்தாஸ்
1956 ராஜா ராணி ஆனந்த நிலை பெறுவோம் டி. ஆர். பாப்பா எம். கே. ஆத்மநாதன் எம். எல். வசந்தகுமாரி
1956 ரம்பையின் காதல் கலைஞானம் உறவாடும் நாடு டி. ஆர். பாப்பா ஏ. மருதகாசி பி. லீலா
1957 அம்பிகாபதி கண்ட கனவு இன்று பலித்ததே ஜி. இராமநாதன் பாலகவி
1957 சமய சஞ்சீவி ஆனந்தம் தருவது சங்கீதமே ஜி. இராமநாதன் ஏ. மருதகாசி (ராதா) ஜெயலட்சுமி
1959 மணிமேகலை பழங்கால தமிழரின் வாழ்க்கை நிலை ஜி. இராமநாதன் ஏ. மருதகாசி எம். எல். வசந்தகுமாரி
அவனியில் புது அறநெறியே திருச்சி லோகநாதன்
1958 நாடோடி மன்னன் வருக வருக வேந்தே எஸ். எம். சுப்பையா நாயுடு சுரதா பி. எஸ். வைதேகி
1959 தலை கொடுத்தான் தம்பி தலை கொடுத்தான் தம்பி விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஏ. மருதகாசி எஸ். சி. கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்
பன்னீரில் தலை முழுகி
"அனைவரும் கருத்துடன்
1960 நான் கண்ட சொர்க்கம் இளமை மாறாத இன்பம் அஸ்வத்தாமா பி. லீலா
1961 மல்லியம் மங்களம் சிங்கார வேலா விளையாட வா டி. ஏ. கல்யாணம் வி. சீதாராமன் டி. எம். சௌந்தரராஜன்

தெலுங்கு

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் பாடலாசிரியர் உடன் பாடியவர்/கள்
1955 கன்யாசுல்க்கம் சரசுடசரிச்சேரா[3] கண்டசாலா

மேற்கோள்கள்

தொகு
  1. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016.
  3. Sarasudasarichera

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எல்._கானசரஸ்வதி&oldid=4083815" இலிருந்து மீள்விக்கப்பட்டது