வி. என். சுந்தரம்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வி. என். சுந்தரம் (V. N. Sundaram, 1918 - 14 திசம்பர் 2009) தமிழக நாடக, திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.[1]

வி. என். சுந்தரம்
பிறப்பு1918 (1918)
பிறப்பிடம்விசலூர், தஞ்சாவூர், இந்தியா
இறப்பு14 திசம்பர் 1918 (அகவை 91)
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர், நடிகர்

தொடக்க வாழ்க்கை

தொகு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விசலூர் என்ற ஊரில் சுந்தரம் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் ஆலாசியசுந்தரம். சிறு வயதில் கோவில் விழாக்களில் நாதசுவர இசையை விரும்பிக் கேட்டு, இராகங்களை குரலில் ஒப்பிக்கும் வல்லமை படைத்தவர். தனது 12-ஆவது அகவையில் நாரத கான சபா என்ற நாடகக் கம்பனியில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். ஆனாலும், இவர் கம்பெனியின் உணவு ஒத்துக் கொள்ளாமல் ஆறு மாதங்களில் வெளியேறினார். பின்னர் மதுரை பால வினோத சங்கீத சபாவில் சேர்ந்து, யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பயிற்சி பெற்றார். பாதுகா பட்டாபிசேகம் என்ற தனது மூன்றாவது நாடகத்திலேயே அரசன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடக விளம்பரங்களில் சுருக்கம் கருதி இவரது பெயரை வி. என். சுந்தரம் என எழுதினார்கள். அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.[1]

திரைப்படங்களில் நடிப்பு

தொகு

நாடகங்களில் சிறப்பாக நடித்துப் புகழ் பெற்றதால், திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. 1935-இல் மார்க்கண்டேயா என்ற தனது முதலாவது திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.[3] இப்படத்தில் பாபநாசம் சிவன் வரிகளில் வாசஸ்பதி இராகத்தில் பராத் பரா என்ற இவர் பாடியப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து பட்டினத்தார் (1936) படத்தில் தண்டபாணி தேசிகருக்கு மகன் மருதவாணனாக நடித்தார்.[4] சந்திரஹாசன் (1936)[5] சுந்தரமூர்த்தி நாயனார் (1937),[6] கண்ணப்ப நாயனார் (1938),[6] சங்கராச்சாரியார் (1939)[6] ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துப் பாடினார். கடைசியாக தன அமராவதியில் (1947) நடித்தார்.

புராணப் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த சுந்தரம், 1940களின் இறுதியில் நடிப்பில் இருந்து விலகி பின்னணிப் பாடகராக திரைப்படங்களில் பங்களித்தார்.

நடிகராகவும் பாடகராகவும்

தொகு
ஆண்டு படம் பாடல் இசையமைப்பு உடன் பாடியோர்
1935 மார்க்கண்டேயா அன்புடன் விடை தருவீர்
பராத்பரா பரமேசுவரா ராசபாளையம் குழந்தைவேல் பாகவதர்
கைலாசவாசா சம்போ
ஆதாரம் யாரும் இல்லை ஐயா
விசுவநாதா எனை ஆண்டருள்வாய்
ஓ சிவா பரம்பொருளே
சரணம் சரணம்
1936 சந்திரஹாசன் மாயனே எனை யார்
தீவினையும் இதுவோ தெய்வமே
மகா பரம தயாள மூர்த்தியே
பாதமலைரைப் பணிந்தேன்
பூமாதோ ரதி தேவியோ
1937 சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைவாழ் அந்தணர் தம்
முகத்தைக் காட்டியே
இது வசந்த காலம் பெண்ணே
1938 கண்ணப்ப நாயனார் சாம்பவரி துணை புரி
வசந்த ஜோதி அழகே
உன்னை மறந்திடுவேனோ
தேவா நின் திருவடி
1939 சங்கராச்சாரியார்
1942 ராஜசூயம்
1947 தன அமராவதி இந்திசையும் வணங்கி ஏத்தும்

பின்னணிப் பாடல்கள்

தொகு

இவர் மணமகள் (1951) திரைப்படத்தில் சி. ஆர். சுப்பராமன் இசையில் எம். எல். வசந்தகுமாரியுடன் இணைந்து பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[1][3] 1962 வரை பல சிறந்த பாடல்களை தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் இவர் பாடினார்.

ஆண்டு திரைப்படம் பாடல் இசை இணைந்து பாடியோர்
1947 தாய்நாடு எங்கள் இந்திய பாரதியே ஆர். நாராயண ஐயர் ஏ. பி. கோமளா
1951 மணமகள் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சி. ஆர். சுப்பராமன் எம். எல். வசந்தகுமாரி
பாவியினும் படு பாவி எம். எல். வசந்தகுமாரி
1951 ராஜாம்பாள் இதயத் தாமரை மலர எம். எஸ். ஞானமணி பி. லீலா
1953 இன்ஸ்பெக்டர் வருவாய் மன மோகனா ஜி. ராமநாதன் எம். எல். வசந்தகுமாரி
1953 பூங்கோதை நீலவான் நெடுங்குன்றம் பி. ஆதிநாராயணராவ்
1954 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கவியின் கனவில் வாழும் காவியமே டி. ஜி. லிங்கப்பா
அழகே பெண் வடிவமான சூலமங்கலம் ராஜலட்சுமி
1954 கூண்டுக்கிளி ராத்திரிக்கு பூவாவுக்கு லாட்டரி கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் & கே. வி. மகாதேவன்
வாங்க எல்லோருமே ஒன்றாகவே டி. எம். சௌந்தரராஜன், ராதா ஜெயலட்சுமி & கே. ராணி
காயாத கானகத்தே டி. எம். சௌந்தரராஜன்
1954 போன மச்சான் திரும்பி வந்தான் ஓடம் போலே நமது சி. என். பாண்டுரங்கன் & ம. சு. விசுவநாதன் ஏ. எல். ராகவன், டி. சத்தியவதி, சுப்புலட்சுமி
1954 ராஜி என் கண்மணி உலகம் இதுதானோ எஸ். அனுமந்தராவ்
1954 தூக்குத் தூக்கி குரங்கிலிருந்து பிறந்தவன் ஜி. ராமநாதன் பி. லீலா, ஏ. பி. கோமளா & டி. எம். சௌந்தரராஜன்
பியாரி நிம்பள் மேலே எம். எஸ். இராஜேஸ்வரி
1955 சி.ஐ.டி இணை இல்லாத சுக வாழ்வில் பி ஆர். லட்சுமணன் ஏ. எம். ராஜா, பி. லீலா & சரோஜினி
1955 நல்லவன் பாரதியே நம் பாரத எம். எஸ். ஞானமணி
1955 நம் குழந்தை தெய்வத்தால் ஆகாதெனின் எம். டி. பார்த்தசாரதி
1955 போர்ட்டர் கந்தன் ஆதியாய் உலகுக்கெல்லாம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1955 வள்ளியின் செல்வன் கண்ணா என்றாடும் பி. எஸ். அனந்தராமன்
1956 மகாகவி காளிதாஸ் ராஜேந்திர எம் ரசிகானியே கொன்னப்ப பாகவதர்
குள்ள நரியோ கொக்கரிக்குதே
சிங்கார வாகினி மனமோகினி
வாராய் வாராய் வாராய் ஆர். பாலசரஸ்வதி
ஓம்கார ரூபிணி ஆர். பாலசரஸ்வதி
1956 மர்ம வீரன் முன்னாலே போகாமே வேதா டி. எம். சௌந்தரராஜன்
1956 மாதர் குல மாணிக்கம் எனக்கே தாரமாடி எஸ். ராஜேஸ்வர ராவ்
1956 நானே ராஜா சிந்து பாடும் தென்றல் வந்து டி. ஆர். ராமநாதன் பி. லீலா
1956 ஒன்றே குலம் மாங்கிலை மேலே பூங்குயில் கூவியது எஸ். வி. வெங்கட்ராமன் என். எல். கானசரஸ்வதி, கே. ராணி, எம். எஸ். இராஜேஸ்வரி & கல்யாணி
1956 தெனாலிராமன் அடரிப் படர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பொன்னால்ல பொருள்
கன்னா பின்னா மன்னா
விந்தியும் வடக்காக
சந்திரன் போலே
துரு துரு என மாடுகள்
தாதி தூது தீது
1957 அம்பிகாபதி சோறு மணக்கும் சோ நாடாம் ஜி. ராமநாதன்
கொட்டிக்கிழங்கோ கிழங்கோ
என்னரும் நலத்தினால்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
1957 பக்த மார்க்கண்டேயா உலகமெலாம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
தேவாதி தேவா
1957 முதலாளி எங்க முதலாளி தங்க கே. வி. மகாதேவன் எஸ். வி. பொன்னுசாமி, ஏ. ஜி. ரத்னமாலா, ஜி. கஸ்தூரி
1957 தங்கமலை ரகசியம் அறியாத பிள்ளை போலே டி. ஜி. லிங்கப்பா ஜிக்கி
1958 செஞ்சு லட்சுமி அளித்திடும் அவமதிப்பை நான் நசுக்குவேன் எஸ். ராஜேஸ்வர ராவ்
இங்கிருப்பானோ அங்கிருப்பானோ என்ற ஐயமே பி. சுசீலா
1958 மாலையிட்ட மங்கை அம்மா உன்னைக் கொண்டு வனத்திலே விஸ்வநாதன்-ராமமூர்த்தி
1958 பதிபக்தி ராக் ராக் ராக் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜே. பி. சந்திரபாபு
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தேடித் தேடி அலைகிறேனே சி. இராமச்சந்திரா திருச்சி லோகநாதன் & பி. சுசீலா
1959 அவள் யார் வாராரு வாராரு வந்துக்கிட்டே எஸ். ராஜேஸ்வர ராவ்
1959 சிவகெங்கைச் சீமை மருவிருக்கும் கூந்தல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
ஆலிக்கும் கைகள்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றிவடிவேலனே.... மனம் கனிந்தருள் ஜி. ராமநாதன் எஸ். வரலட்சுமி
1960 எங்கள் செல்வி ஜெய ஜெய ஜெய ராமா கே. வி. மகாதேவன்
1960 குமார ராஜா மணமகளாக வரும் மங்கை எவளோ டி. ஆர். பாப்பா
நான் வந்து சேர்ந்த இடம் பி. லீலா
1960 நான் கண்ட சொர்க்கம் ஜி. அசுவத்தாமா
1961 என்னைப் பார் மூத்தோர் சொல் வார்த்தை தான் டி. ஜி. லிங்கப்பா
1963 லவகுசா வெற்றி முரசு ஒலிக்கச் செய்யும் கே. வி. மகாதேவன், கண்டசாலா கே. ராணி
1964 ரிஷ்யசிருங்கர் தலம் புகழும் உயர் டி. வி. ராஜு

இறப்பு

தொகு

வி. என். சுந்தரம் 2009 திசம்பர் 14 அன்று தனது 92-ஆவது அகவையில் இறந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Narasimhan, Vamanan. Thirai Isai Kalanjiyam (December 2014 ed.). Chennai: Manivasagar Publishers=044 25361039. pp. 101–109.
  2. ராண்டார் கை (28 August 2011). "Chandrahasan 1936". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204041445/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2404261.ece. 
  3. 3.0 3.1 ராண்டார் கை (16 June 2012). "Blast from the past – Markandeya 1935". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130816170456/http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/markandeya-1935/article3536326.ece. 
  4. Guy, Randor (17 October 2008). "Pattinathaar 1936". தி இந்து. Archived from the original on 30 August 2014. பார்க்கப்பட்ட நாள் 17 November 2018.
  5. Vijayakumar, Akila. Thamizh Cinema Ulagam Part 1 (1 March 2019 ed.). Chennai: Manivasagar Publishers 044 25361039. p. 153.
  6. 6.0 6.1 6.2 Film News Anandan (23 October 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers. Archived from the original on 17 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  7. "Veteran Tamil actor and playback singer V.N. Sundaram passes". 27 December 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._சுந்தரம்&oldid=3670444" இலிருந்து மீள்விக்கப்பட்டது