ஆர். பாலசரஸ்வதி

இந்திய திரைப்பட நடிகை மற்றும் பிண்ணனி பாடகர்

ஆர். பாலசரசுவதி (R. Balasaraswathi, Raavu Balasaraswathi அல்லது Rao Balasaraswathi Devi; தெலுங்கு: రావు బాలసరస్వతీ దేవి; பிறப்பு: 28 ஆகத்து 1928) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியும், நடிகையும் ஆவார். இவர் 1930கள் முதல் 1960கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர். ஆர். பாலசரசுவதி அனைத்திந்திய வானொலியில் முதன் முதலாக மெல்லிசைப் பாடல்களைப் பாடியவரும், தெலுங்குத் திரைப்படங்களில் முதன் முதலாக பின்னணி பாடியவரும் ஆவார்.[1]

ராவு பாலரசசுவதி தேவி
R. Balasaraswathi Devi
பிறப்புராவ் பாலசரஸ்வதி தேவி
ஆகத்து 28, 1928 (1928-08-28) (அகவை 96)
வேங்கடகிரி, சென்னை மாகாணம், (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)
பணிநடிகை, பின்னணிப் பாடகி

ஆரம்ப வாழ்க்கை

தொகு

பாலசரசுவதி 1923 இல் வேங்கடகிரி என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே அளத்துரு சுப்பையா என்பவரிடம் இசை கற்றுக் கொண்டு, தனது ஆறாவது வயதில் எச்.எம்.வி இசைத்தட்டில் தனது குரலைப் பதித்தார்.

திரைப்படப் பணி

தொகு

1936 இல் சி. புல்லையாவின் இயக்கத்தில் உருவான சதி அனுசூயா, பக்த துருவா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நடிகையாகப் பாடி நடித்தார்.[2] இவரது திறமையைக் கவனித்த இயக்குநர் கே. சுப்பிரமணியம் தமது தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அழைத்தார். பக்த குசேலா (1936), பாலயோகினி (1937), திருநீலகண்டர் (1939) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். துக்காராம் (1938) திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர் துக்காராம் வேடத்தில் நடிக்க அவரது மகளாக பாலசரசுவதி நடித்தார்.

பாக்கிய லட்சுமி (1943) தெலுங்குத் திரைப்படத்தில் கமலா கோட்னிசு என்ற நடிகைக்கு பின்னணிப் பாடல் பாடினார்.

இவர் ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், சி. ஆர். சுப்பராமன், எஸ். வி. வெங்கட்ராமன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எஸ். அனுமந்தராவ், எஸ். ராஜேஸ்வர ராவ், சித்தூர் வி. நாகையா, கண்டசாலா, எஸ். தட்சிணாமூர்த்தி, வேதா, மாஸ்டர் வேணு, ஜி. கோவிந்தராயுலு, எம். பி. சீனிவாசன் ஆகியோரின் இசையமைப்பில் பாடல்களைப் பாடியுள்ளார்.

கண்டசாலா, ஏ. எம். ராஜா ஆகியோருடன் இணைந்து இவர் பல பாடல்கலைப் பாடியுள்ளார். அத்துடன் டி. எம். சௌந்தரராஜன், டி. ஏ. மோதி, சீர்காழி கோவிந்தராஜன், சு. ராஜம் ஆகியோருடனும் இணைந்து பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
  1. பக்த குசேலா (1936)
  2. பாலயோகினி (1936)
  3. துகாராம் (1938)
  4. திருநீலகண்டர் (1939)
  5. தாசிப் பெண் (ஜோதிமலர்) (1943)
  6. பில்ஹணா (1948)

மேற்கோள்கள்

தொகு
  1. "Stars : Star Profiles : Rao Balasaraswathi Devi to be felicitated on her 75th birthday". Telugucinema.com. Archived from the original on 25 February 2012. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
  2. "Light Music By Rao Balasaraswathi Devi: Events in Hyderabad". Fullhyderabad.com. Archived from the original on 23 May 2017. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பாலசரஸ்வதி&oldid=4114601" இலிருந்து மீள்விக்கப்பட்டது