பாலயோகினி
கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பாலயோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பேபி சரோஜா , கே. ஆர். செல்லம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5]
பாலயோகினி | |
---|---|
பாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜாவும், கே. ஆர். செல்லமும் தோன்றும் காட்சி | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
கதை | திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம் |
இசை | மோதி பாபு |
நடிப்பு | சி. வி. வி. பந்துலு கே. பி. வத்சல் சேலம் சுந்தரம் பேபி சரோஜா ஆர். பாலசரஸ்வதி செல்லம் ருக்குமணி கே. ஆர். செல்லம் |
வெளியீடு | பெப்ரவரி 5, 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிறு தகவல்கள்
தொகுபாலயோகினியைத் தயாரித்த கே. சுப்பிரமணியம் நூறு ரூபாய் பரிசை அறிவித்து, பொது மக்களிடம் இருந்து தம் கதைக்குத் தகுந்த முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.[6]
பாடல்கள்
தொகுஇப்படத்திற்கு மோதி பாபு இசை அமைத்தார். பாடல் வரிகளை பாபநாசம் சிவன் எழுதினார். பேபி சரோஜா தனது பொம்மைக்கு தாலாட்டு பாடிய ‘கன்னி பாப்பா, கனிமுத்து பாப்பா’ பாடல் பிரபலமானது.
- ராதே தோழி
- க்ஷமாப்பனா ஓ மாமா க்ஷமாப்பனா
- கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கி தருவேன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blast From the Past - Balayogini 1937, The Hindu 10 April 2009". Archived from the original on 11 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 15.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Baskaran, S. Theodore (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880-1945. Chennai: Cre-A. p. 116.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-93410-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-93410-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ed.). New York: Routledge. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-39680-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "இது நிஜமா?". குண்டூசி: பக். 59. ஆகத்து 1951.