கே. ஆர். செல்லம்

தமிழ்த் திரைப்பட நடிகை

கே.ஆர். செல்லம் (இயற்பெயர்; கனகவல்லி) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.

கே. ஆர். செல்லம்

வாழ்க்கைதொகு

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட கம்பயநத்தம் இவரது சொந்த ஊர். இவரது தந்தை கே. ரங்கசாமி பள்ளி ஆசிரியர். கனகவல்லிக்கு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் வறுமையின் காரணமாக பிழைப்புக்காக கணவனுடன் பம்பாய்க்குச் சென்று பின்னர் சென்னை வந்து சேர்ந்தனர். வேலைதேடிச் சென்ற கனகவல்லியின் கணவன் திரும்பிவராமலே போனார்.

நடிகையாகதொகு

சென்னையில் சவுத் இந்தியன் பிலிம் கார்பரேஷன் என்ற திரைப்பட நிறுவனம் கௌசல்யா என்ற படத்தை எடுத்து வந்தது. அந்த படத்தின் இயக்குநர் பி. எஸ். வி. ஐயர் நான்கு காட்சிகளில் வரும் கதாபாத்திரத்தைக் கனகவல்லிக்குக் கொடுத்து, கனகவல்லி என்ற பெயரை கே. ஆர். செல்லம் என்று மாற்றினார்.[1] அதன்பிறகு பல படங்களில் நடித்தார் குறிப்பாக கே. சாரங்கபாணிக்கு இணையாக பல நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தார்.

நடித்த படங்கள்தொகு

 1. கௌசல்யா (1935)
 2. வேலைக்காரன் (1952)
 3. கள்வனின் காதலி (1955)
 4. பாட்டாளியின் வெற்றி (1960)
 5. பாலயோகினி
 6. வனராஜ கார்ஸன்
 7. தேச முன்னேற்றம்
 8. மதனகாமராஜன்
 9. மீரா
 10. என் மனைவி
 11. லவங்கி
 12. கற்புக்கரசி
 13. அதிர்ஷ்டம்
 14. காரைக்கால் அம்மையார்
 15. ஜாதகம்
 16. பணக்காரி
 17. வைரமாலை
 18. மகாத்மா உதங்கர்
 19. பக்த ஜனா
 20. வேதாள உலகம்
 21. மச்சரேகை
 22. தாய் உள்ளம்
 23. பூம்பாவை
 24. சூர்யபுத்ரி
 25. பெற்ற தாய்
 26. ராஜி என் கண்மணி
 27. ஒன்றே குலம்
 28. எங்கள் செல்வி

மேற்கோள்கள்தொகு

 1. பிரதீப் மாதவன் (2017 திசம்பர் 15). "குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம்". கட்டுரை. தி இந்து தமிழ். 15 திசம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

யூடியூபில் என்னை அறியாமலே (வசந்தா ராகம்) வனராஜ கார்ஸன் (1938) திரைப்படத்தில் கே. ஆர். செல்லம் பாடிய ஒரு பாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._செல்லம்&oldid=3155626" இருந்து மீள்விக்கப்பட்டது