சு. ராஜம்

தமிழ்த் திரைப்பட நடிகர்

எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் (பெப்ரவரி 10, 1919 - ஜனவரி 29, 2010) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குனர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6][7]

எஸ். ராஜம்

நடித்த திரைப்படங்கள் தொகு

விருதுகள் தொகு

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "S Rajam passes away". Times of India. 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  2. "S. Rajam remembered on birth anniversary". தி இந்து. 12 February 2010. Archived from the original on 16 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Musician S. Rajam passes away". The Hindu. 30 January 2010. Archived from the original on 2 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "About Shri.S.Rajam". Indian Heritage.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010.
  5. Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". The Hindu. Archived from the original on 10 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Ramnarayan, Gowri (5 February 2010). "Extraordinary life". The Hindu. Archived from the original on 9 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Rajam: A multifacted personality". இந்தியன் எக்சுபிரசு. 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 19 March 2010. {{cite web}}: Unknown parameter |6QYp3kQ= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ராஜம்&oldid=3554890" இலிருந்து மீள்விக்கப்பட்டது