ஏ. ஜி. ரத்னமாலா

ரத்னமாலா

ஏ.ஜி. ரத்னமாலா (A. G. Rathnamala) ஓர் இந்திய நாடக நடிகையும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமாவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500 க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.[1][2]

நாடக நடிகையாக

தொகு

எம்.ஜி.ஆரின் இன்பக் கனவு நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார். என் தங்கை திரைப்படமாக வருமுன் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. நாடகத்தில் சிவாஜி கணேசன் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் தங்கையாக ரத்னமாலா நடித்தார். எம்.ஜி.ஆர். நாடகக் குழுவில் நடிகையாக இருந்து வந்தார். பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்து வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மன் மனைவி ஜக்கம்மாவாக நடித்தார். டி.ஆர். மகாலிங்கத்தின் “ஓர் இரவு” நாடகத்தில் மட்டுமல்லாது நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி போன்ற பழம்பெரும் நடிகர்களுடனும் ரத்னமாலா நாடகங்களில் நடித்திருக்கிறார். [1]

பின்னணிப்பாடகியாக

தொகு

இசையமைப்பாளர்கள்

தொகு

ரத்னமாலா பின்வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பின்னணி பாடியுள்ளார்:[3]

இறப்பு

தொகு

ஏ.ஜி. ரத்னமாலா 2007 சூன் 3-ந் திகதி இதய நோய் காரணமாக தனது 76 ஆவது வயதில் சென்னை தியாகராய நகரிலிருந்த தமது வீட்டில் காலமானார்.[1]

தமிழ்ப் பாடல்கள்

தொகு

இப்பட்டியலில் ஏ. ஜி. ரத்னமாலா பாடிய சில பாடல்கள் ஆண்டுவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் உடன் பாடியவர்/கள்
1950 திகம்பர சாமியார் காக்க வேண்டும் கடவுளே நீ ஜி. ராமநாதன் & எஸ். எம். சுப்பையா நாயுடு யு. ஆர். சந்திரா
1951 ராஜாம்பாள் ஒரு தினுசா எம். எஸ். ஞானமணி
1951 தேவகி ஹலோ மை டியர் ஹலோ ஜி. ராமநாதன் திருச்சி லோகநாதன்
டீ டீ சூடான டீ ஜிக்கி
1952 அந்தமான் கைதி லவ் யூ…. ஆசையானேனே உன் மேலே ஜி. கோவிந்தராஜுலு நாயுடு ஜே. பி. சந்திரபாபு
என் தங்கை குட் லக் குட்லக் சி. என். பாண்டுரங்கன் சி. எஸ். பாண்டியன்
தர்ம தேவதை அன்பாய் ஓடி வாடா ஆனந்த கிருஷ்ணா சி. ஆர். சுப்புராமன் சி. ஆர். சுப்புராமன், ஜிக்கி
1953 ஜாதகம் ஆண்டவன் நமக்கு ஆர். கோவர்த்தனம் ஜி. கே. வெங்கடேஷ்
ஜெனோவா செய்யாமலே செய்வேன் என்று டி. ஏ. கல்யாணம், எம். எஸ். ஞானமணி & எம். எஸ். விஸ்வநாதன்
ஆசை மகன் அக்கம் பக்கம் வி. தட்சணாமூர்த்தி திருச்சி லோகநாதன்
மருமகள் ஆணுக்கொரு பெண்பிள்ளை ஜி. ராமநாதன், சி. ஆர். சுப்புராமன் &விஸ்வநாதன்-ராமமூர்த்தி பி. ஏ. பெரியநாயகி, ஏ. பி. கோமளா
1954 துளி விஷம் மணமில்லா மலருக்கோர் மகிமையில்லை கே. என். தண்டாயுதபாணி பிள்ளை பி. லீலா
போன மச்சான் திரும்பி வந்தான் பெண்ணை வீட்டில் பூட்டி சி. என். பாண்டுரங்கன் & எம். எஸ். விஸ்வநாதன் பி. லீலா
கொடுத்துடு நீயா கொடுத்துடு கே. செல்லமுத்து
1955 நல்ல தங்கை மாப்பிள்ளை மக்கு மாப்பிள்ளை ஜி. ராமநாதன் பி. லீலா
நல்ல தங்காள் கோமள செழுந்தாமரை எழில் மேவிய ஜி. ராமநாதன் பி. லீலா, ஏ. பி. கோமளா, டி. வி. ரத்தினம், உடுதா சரோஜினி
மங்கையர் திலகம் புரிந்து கொள்ளவில்லை இன்னும் எஸ். தட்சணாமூர்த்தி எஸ். சி. கிருஷ்ணன்
மகேஸ்வரி சொன்னா போதும் கண்ணாலே ஜி. ராமநாதன் எஸ். சி. கிருஷ்ணன்
ஜனக்கு ஜனக்கு ஜிஞ்ஜனக்கு
முந்தி முந்தி விநாயகனே
ஆகாய வீதியிலே அண்ணாந்து பாத்தபடி
உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா
குலேபகாவலி பாராண்ட மன்னரெல்லாம்.... அச்சு நிமிர்ந்த வண்டி விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜே. பி. சந்திரபாபு
காவேரி காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம் ஜி. ராமநாதன் & விஸ்வநாதன்-ராமமூர்த்தி பி. லீலா
டாக்டர் சாவித்திரி மாயி மகமாயி…. ஆதி பரமேஸ்வரியே ஜி. ராமநாதன் டி. எம். சௌந்தரராஜன்
1956 தாய்க்குப்பின் தாரம் விட்டதடி ஆசை கே. வி. மகாதேவன் எஸ். சி. கிருஷ்ணன்
கந்தா வரம் தந்தருள்வான் திருச்செந்தூரில்
ரம்பையின் காதல் காட்டுவெள்ளம் நீயே டி. ஆர். பாப்பா கே. ஹெச். ரெட்டி
போடு டக்கு முக்கு டக்கு தாளம் எஸ். சி. கிருஷ்ணன்
சதாரம் எங்கும் ஒளி வீசுதே எனைத் தேடி ஜி. ராமநாதன் பி. பானுமதி, ஏ. பி. கோமளா
அன்னையே காளியம்மா ஈஸ்வரி டி. எம். சௌந்தரராஜன், வி. டி. ராஜகோபாலன், ஏ. பி. கோமளா
கண்ணின் மணிகள் எதுக்கும் ரெண்டு தேவை எஸ். வி. வெங்கட்ராமன் உடுதா சரோஜினி
நானே ராஜா ஏலேலங்கடி டி. ஆர். ராமநாதன்
எல்லாம் இன்பமயம் வண்டே நீ வா வா கண்டசாலா
1957 மக்களைப் பெற்ற மகராசி அடி தாராபுரம் தாம்புரம் கே. வி. மகாதேவன் எஸ். சி. கிருஷ்ணன்
ஓ மல்லியக்கா ஓ ரோஜாக்கா ஜிக்கி, ஜமுனாராணி
மணமகன் தேவை போட்டானே ஒரு போடுதான் ஜி. ராமநாதன் கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா
புதுமைப் பித்தன் ஐயா யாருக்கு வேணும் இந்த ஜி. ராமநாதன்
மாமன்னர் அந்த
கடன் வாங்கி கல்யாணம் காசிக்குப் போனே ராமாஹரே எஸ். ராஜேஸ்வரராவ் எஸ். சி. கிருஷ்ணன்
அக்கா மகளே….தூத்துக்குடி சாத்துக்குடி
ஆரவல்லி இது செங்கம்மா அது அங்கம்மா ஜி. ராமநாதன் சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா டி. வி. ரத்தினம்
கற்புக்கரசி நல்வாக்கு நீ கொடடி ஜி. ராமநாதன் எஸ். சி. கிருஷ்ணன்
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி
மகாதேவி உன் திருமுகத்தெ ஒருமுகமா திருப்பு விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜே. பி. சந்திரபாபு
தந்தான தாளம் போடுவோம்
ராணி லலிதாங்கி ஆடுங்க பாடுங்க ஓடுறீங்க ஜி. ராமநாதன் பி. லீலா
பஜனைக்கு நாழிகை வி. டி. ராஜகோபாலன்
1958 நீலமலைத் திருடன் வெத்தல பாக்கு சுண்ணாம்பு கே. வி. மகாதேவன் எஸ். சி. கிருஷ்ணன்
ஒண்ணுக்கு ரெண்டாச்சு உபத்திரவத்துக்கு
நீலாவுக்கு நெறஞ்ச மனசு சைக்கிள் வருது சைக்கிள் வருது கே. வி. மகாதேவன் திருச்சி லோகநாதன்
சிங்கார சங்கீதமே சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி
காத்தவராயன் கும்கார குப்பண்ணா ஜி. ராமநாதன் எஸ். சி. கிருஷ்ணன்
சங்கிலி ஜிங்கிலி.... வாராண்டி வாராண்டி குட்டிச்சாத்தான் ஜே. பி. சந்திரபாபு, எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தரராஜன்
வெற்றியே அருள் அம்மா கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா
அன்னையின் ஆணை என்ன சாமி எதுக்கு சும்மா பாக்கிறே எஸ். எம். சுப்பையா நாயுடு
பெற்ற மகனை விற்ற அன்னை தில் ரப்சா பண்றாங்கோ விஸ்வநாதன்-ராமமூர்த்தி எஸ். சி. கிருஷ்ணன்
சாரங்கதாரா எட்டி எட்டி பாக்குதடி தோப்பிலே ஜி. ராமநாதன்
குடும்ப கௌரவம் வெறும் வேஷம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஏ. பி. கோமளா
காத்திருக்கோம் ஏ. பி. கோமளா
சைனா யப்பான் ரங்கோன் ஏ. பி. கோமளா
மாங்கல்ய பாக்கியம் அனுசூயா கதா காலட்சேபம் ஜி. ராமநாதன் சீர்காழி கோவிந்தராஜன், எம். எல். வசந்தகுமாரி, ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி
பாடுபட்டாலே மச்சான் எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி
ஒன்றே மாந்தர் குலம் சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி
இமய மலையை இடது கையால் கே. ஜமுனாராணி
தங்கமலை ரகசியம் காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா டி. ஜி. லிங்கப்பா கே. ராணி
வரவேணும் வரவேணும் ஏ. பி. கோமளா, கே. ராணி
பூலோக ரம்பை வண்ண மயில் வேல் முருகன் சி. என். பாண்டுரங்கன் கே. ராணி
ஓம் என்ற பிரணவத்தின்…. கள்ளி மலை குறிஞ்சிநிலம் திருச்சி லோகநாதன், ஜிக்கி, எஸ். சி. கிருஷ்ணன்
சம்பூர்ண ராமாயணம் ஸ்ரீ ராமச்சந்திரன் மகுடாபிசேக திருக்கோலம் கே. வி. மகாதேவன் ஏ. பி. கோமளா, கே. ராணி, உடுதா சரோஜினி
மண்ணெல்லாம் பொன்னாகும் ராமன் வரவாலே ஏ. பி. கோமளா, எஸ். சி. கிருஷ்ணன், கே. ராணி, உடுதா சரோஜினி, பத்மா
திருமணம் வை ராஜா வை எஸ். எம். சுப்பையா நாயுடு & டி. ஜி. லிங்கப்பா சீர்காழி கோவிந்தராஜன்
மாய மனிதன் போக்குக் காட்டி போறவளே பொன்னம்மா ஜி. கோவிந்தராஜுலு நாயுடு ஏ. எல். ராகவன்
1959 வண்ணக்கிளி சாத்துகுடி சாறு தானா பாத்துக்குடி கே. வி. மகாதேவன் எஸ். சி. கிருஷ்ணன்
தங்கப்பதுமை பூமாலை போட்டுப் போன மாமா விஸ்வநாதன்-ராமமூர்த்தி
மனைவியே மனிதனின் மாணிக்கம் காத்திருப்போம் கை பிடிப்போம் கண்ணே எஸ். அனுமந்தராவ் திருச்சி லோகநாதன்
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஜி. ராமநாதன் கே. ஜமுனாராணி, வி. டி. ராஜகோபாலன், திருச்சி லோகநாதன்
போகாதே போகாதே என் கணவா
எங்கள் குலதேவி பாலும் பழமிருக்க பக்கத்தில நானிருக்க கே. வி. மகாதேவன்
மின்னல் வீரன் வலையை வீசும் சி. தங்கப்பன்
சுமங்கலி அக்கா மகளே சுட்டி பொண்ணே எம். ரங்காராவ் எஸ். சி. கிருஷ்ணன்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் கோபிக்கிறாப்புல கோபிச்சுக்காதே கண்ணு கே. வி. மகாதேவன்
1960 குறவஞ்சி செங்கயல் வண்டு கலிங் கலிங் என்று டி. ஆர். பாப்பா சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஏ. பி. கோமளா
1961 திருடாதே அச்சா பகுத் அச்சா எஸ். எம். சுப்பையா நாயுடு எஸ். சி. கிருஷ்ணன்
அந்தி சாயும் நேரத்திலே ஏ. எல். ராகவன்
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே கோட்டும் சூட்டும் பெண்டியாலா நாகேஸ்வரராவ் எஸ். சி. கிருஷ்ணன்
மருத நாட்டு வீரன் செய்ததொரு சந்தேகம் கேளு கண்மணி எஸ். வி. வெங்கட்ராமன் ஏ. எல். ராகவன்
குமார ராஜா அங்காடிக்கடை வீதியிலே டி. ஆர். பாப்பா சூலமங்கலம் ராஜலட்சுமி
1962 இந்திரா என் செல்வம் காதலுக்கு காலேஜு எங்கே இருக்கு சி. என். பாண்டுரங்கன் & ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி எஸ். சி. கிருஷ்ணன்
1963 கொஞ்சும் குமரி தோப்புல ஒரு நாள் சிரித்தாயடி வேதா திருச்சி லோகநாதன்
1963 கலை அரசி கெட்டாலும் கெட்டது இப்படிக் கெட்டிடக் கூடாது கே. வி. மகாதேவன்
1963 குபேரத் தீவு கண்கண்ட செல்வம் இங்கே பாரு சி. என். பாண்டுரங்கன்
1964 சித்ராங்கி ஒய்யாரி பாமா உனக்காக வாம்மா வேதா எஸ். வி. பொன்னுசாமி
உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு இருக்குது மனசு திருச்சி லோகநாதன்

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 1.2 "எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7". Archived from the original on 2017-04-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Indian Heritage" (in ஆங்கிலம்).
  3. Mani, Charulatha (4 January 2013). "Notes of peace – The Hindu". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/notes-of-peace/article4272618.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._ரத்னமாலா&oldid=4035816" இலிருந்து மீள்விக்கப்பட்டது