ராணி லலிதாங்கி

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராணி லலிதாங்கி ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. பானுமதி முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

ராணி லலிதாங்கி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புதிருச்சி ஆர். கல்யாணராமன்
கதைதஞ்சை ராமையாதாஸ்
திரைக்கதைதஞ்சை ராமையாதாஸ்
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பி. பானுமதி
ராஜசுலோச்சனா
பி. எஸ். வீரப்பா
ஒளிப்பதிவுபி. எல். ராய்
படத்தொகுப்புஆர். ராஜகோபால்
கலையகம்டி. என். ஆர். புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்டி. என். ஆர். புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு21 செப்டம்பர் 1957
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

ஒரு ஆணைப்போல பெண்ணாலும் நாட்டை ஆளமுடியும் என்று காட்டுவது போல ராணி லலிதாங்கி ஒரு நாட்டை ஆள்கிறாள்.

கனிவான மனம் கொண்ட இன்னொரு நாட்டு அரசனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஒரு தேர்ச்சி பெற்ற சிற்பியாகவும் நுண் கலைகளை நேசிப்பவனாகவும் இருக்கிறான்.

சூழ்ச்சி எண்ணமும் நாட்டின் மேல் ஒரு கண் வைத்திருப்பவனுமான காண்டீபன் என்ற அரசன் இளவரசனை ஒரு குறவர் நடன நிகழ்ச்சியின் போது கொல்லத் திட்டமிடுகிறான்.

தனது திட்டத்தை நிறைவேற்ற ஒரு நாட்டியக்காரியை ஏவி விடுகிறான். ஆனால் அவளின் ஜாலங்களில் சிக்காமல் இளவரசன் தப்பி விடுகிறான். அத்துடன் அவனுக்குப் பெண்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது.

இளவரசனை விரும்பும் ராணி லலிதாங்கி ஒரு யோகினியாக வேடமணிந்து இளவரசனிடம் ஒரு காதல் கடிதம் கொடுக்கிறாள். இளவரசன் கோபமடைந்து அவளை வெளியே துரத்தி விடுகிறான். அவனது மனதைக் கவர்வதற்காக ராணி லலிதாங்கி நாட்டியம் கற்றுக் கொள்கிறாள். அரண்மனையில் நடைபெறும் ஒரு விழாவில் லலிதாங்கி நடனமாடி இளவரசனின் மனதை வெல்கிறாள்.

அவள் தன்னை மணந்து கொள்ளும்படி எவ்வாறு இளவரசனை வற்புறுத்துகிறாள் என்பதும் அவன் மனதை மாற்றி எவ்வாறு அவனைத் கணவனாக அடைகிறாள் என்பதுமே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்புக் குழு

தொகு
  • தயாரிப்பாளர்: திருச்சி ஆர். கல்யாணராமன்
  • தயாரிப்பு நிறுவனம்: டி. என். ஆர். ப்ரொடக்‌ஷன்ஸ்
  • இயக்குநர்: டி. ஆர். ரகுநாத்
  • இசையமைப்பு: ஜி. ராமநாதன்
  • பாடல்கள்: தஞ்சை ராமையாதாஸ்
  • திரைக்கதை: தஞ்சை ராமையாதாஸ்
  • வசனம்: தஞ்சை ராமையாதாஸ்
  • கலை: கங்கா
  • படத்தொகுப்பு: ஆர். ராஜகோபால்
  • நடனப்பயிற்சி: பசுமார்த்தி கிருஷ்ணமூர்த்தி, எஸ். கணேசன் பிள்ளை, தங்கராஜ்
  • ஒளிப்பதிவு: பி. எல். ராய்
  • சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சோமு
  • நடனம்: ஈ. வி. சரோஜா

தயாரிப்பு விபரம்

தொகு

இந்த ராஜா ராணி மற்றும் சூழ்ச்சி செய்யும் வில்லன் கதை முன்பு 1935ஆம் ஆண்டு லலிதாங்கி என்ற பெயரின் மதுரை, ராயல் டாக்கி விநியோகஸ்தர்களால் படமாக்கப்பட்டது. டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா நடித்திருந்தனர். திருச்சி ஆர். கல்யாணராமன் டி. என். ஆர் என்ற பெயரில் படக்கம்பெனியைத் தொடக்கினார். டி. என். ஆர். என்பது தஞ்சை என். ராமையாதாஸ் என்பதைக் குறிக்கும். கவிஞர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் கல்யாணராமன் கம்பெனிக்கு இந்தப் பெயரை வைத்தார்.

கம்பெனியின் முதல் தயாரிப்பு இந்த ராணி லலிதாங்கி.

முதலில் முக்கியப் பாத்திரத்தில் எம். ஜி. ராமச்சந்திரன் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் சொல்லப்படாத சில காரணங்களால் அவர் விலகிக் கொண்டார். அதன் பின் சிவாஜி கணேசன் நடித்தார்.

பாடல்கள்

தொகு

படத்துக்கான இசையமைப்பு ஜி. ராமநாதன். பாடல்களை இயற்றியவர் தஞ்சை என். ராமையாதாஸ்.[3] பாடியவர்: பி. பானுமதி. பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், டி. பி. ராமச்சந்திரா, வி. டி. ராஜகோபாலன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு (நி. செக்)
1 ஆண்டவனே இல்லையே டி. எம். சௌந்தரராஜன் 03:12
2 இன்பம் பேரின்பம் பி. பானுமதி 05:39
3 ஸ்ரீ சரஸ்வதி தேவி மாதா டி. பி. ராமச்சந்திரா, பி. லீலா 03:03
4 எட்டடி கோயிலிலே டி. எம். சௌந்தரராஜன் 02:47
5 புல் புல் ஜோடி S.எஸ். சி. கிருஷ்ணன் & டி. வி. ரத்தினம் 04:09
6 மதுநிலை மாறாத பி. பானுமதி
7 இது பொருத்தமான ஜிக்கி 03:04
8 காதலுக்குக் கண்ணில்லை சி. எஸ். ஜெயராமன் 03:28
9 என்னை அறியாமல் துள்ளுதடி பி. பானுமதி 03:33
10 ஆடுங்க பாடுங்க பி. லீலா, ஏ. ஜி. ரத்னமாலா 02:27
11 நட்டுவாங்கம் சீர்காழி கோவிந்தராஜன் 03:31
12 பஜனைக்கு ஏ. ஜி. ரத்னமாலா, வி. டி. ராஜகோபாலன் 03:33
13 கல் என்றாலும் கணவனா பி. லீலா 03:01

வரவேற்பு

தொகு

கதை, பானுமதி, சிவாஜி, வீரப்பா ஆகியோரின் நடிப்பு, இனிய பாடல்கள், ராஜசுலோச்சனாவின் நடனங்கள், நல்ல படப்பிடிப்பு என்பன எல்லாம் இருந்தும் ராணி லலிதாங்கி வசூலில் வெற்றி பெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rani Lalithangi". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2014-09-22.
  2. ராண்டார் கை (15 அக்டோபர் 2011). "Rani Lalithangi". தி இந்து. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/rani-lalithangi-1957/article2541498.ece. பார்த்த நாள்: 11 சனவரி 2019. 
  3. "Rani Lalithangi Songs". inbaminge. பார்க்கப்பட்ட நாள் 2014-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_லலிதாங்கி&oldid=4101420" இலிருந்து மீள்விக்கப்பட்டது