இந்திரா என் செல்வம்
இந்திரா என் செல்வம் 1962 ஆம் ஆண்டு சி. பத்மநாபன் இயக்கத்தில், எஸ். சவுண்டப்பன் மற்றும் சி. சென்ன கேசவன் தயாரிப்பில், விருதை ராமசாமி திரைக்கதை, வசனத்தில், சி. என். பாண்டுரங்கன் மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி இசையில், பேபி சுமங்களா, பண்டரிபாய், எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன் மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்[1][2][3][4][5][6].
இந்திரா என் செல்வம் | |
---|---|
இயக்கம் | சி. பத்மநாபன் |
தயாரிப்பு | எஸ். சவுண்டப்பன் சி. சென்ன கேசவன் |
கதை | விருதை ராமசாமி |
திரைக்கதை | விருதை ராமசாமி |
இசை | சி. என். பாண்டுரங்கன் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி |
நடிப்பு | பண்டரிபாய் எம். ஆர். ராதா எஸ். ஏ. அசோகன் நாகேஷ் ஏ. கருணாநிதி பேபி சுமங்களா |
ஒளிப்பதிவு | வி. ஜி. நாயர் ஏ. கிருஷ்ணன் (ஒளிப்பதிவு இயக்குனர்) |
படத்தொகுப்பு | ஆர். வி. ராஜன் வி. சக்ரபாணி |
கலையகம் | விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் |
விநியோகம் | அசோகா பிக்சர்ஸ் |
வெளியீடு | 13 செப்டம்பர் 1962 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுஇந்திரா (பேபி சுமங்களா) பிறந்த உடன் அவளின் தாய் இறக்கிறாள். பிரசவம் பார்த்த செவிலித்தாயான சுசிலா (பண்டரிபாய்) இந்திராவைத் தன் குழந்தையாக வளர்க்க எண்ணுகிறாள். மருத்துவர் கருணாமூர்த்தியால் (எம். ஆர். ராதா) பாதிக்கப்படும் சுசிலா வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்குச் சேர்கிறாள். இந்திராவை அங்குள்ள பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க வைக்கிறாள். ஆதரவற்ற அனாதை போல் விடுதியில் தங்கி இருக்கும் இந்திராவிற்குத் தன் தந்தை யாரென்று தெரியாது. இதனால் விரக்தியடையும் குழந்தை இந்திரா தன் மனதிலுள்ளவற்றை ஒரு கடிதமாக எழுதி கடவுளுக்கு அனுப்புகிறாள். ஆச்சர்யப்படும் விதமாக அவளுக்கு பொம்மை ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. அதை தன் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறாள்.
கருணாமூர்த்தி, சுசிலா பணிபுரியும் இடத்தைக் கண்டறிந்து அவளுக்கு இடையூறு செய்கிறான். சுசிலா தன் காதலரான மருத்துவர் சேகர் (எஸ். ஏ. அசோகன்) உதவியால் அவனிடமிருந்து தப்பிக்கிறாள். சேகர்-சுசிலா இருவரும் திருமணம் செய்கிறார்கள். இந்திராவைத் தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.
நடிகர்கள்
தொகு- எம். ஆர். ராதா - கருணாமூர்த்தி
- எஸ். ஏ. அசோகன் - மருத்துவர் சேகர்
- ஏ. கருணாநிதி - கம்பவுண்டர் கைலாசம்
- நாகேஷ் - ராயப்பன்
- பி. சி. கிட்டன் - தபால்காரர்
- டி. கே. சம்பங்கி
- ஏ. பி. எஸ். மணி - காவல் துணை ஆய்வாளர்
- பண்டரிபாய் - செவிலியர் சுசிலா
- ஜெமினி சந்திரா - பிரபா
- புஷ்பமாலா - மாலதி
- சாரதாம்பாள்[7] - காவேரி
- சூர்யப்ரபா - வசந்தா
- பேபி சுமங்களா - இந்திரா
- சி. லட்சுமிராஜ்யம்
- மீனாகுமாரி
படக்குழு
தொகு- கலை - எம். சோம்நாத்
- புகைப்படம் - ஆர். வெங்கடாச்சாரி
- ஆய்வகம் - வி. டி. எஸ். சுந்தரம் (விஜயா ஆய்வகம்)
- ஒலிப்பதிவு - ஜி. வி. ரமணன்
- இசைப்பதிவு - வெஸ்டேர்ஸ் சவுண்ட் சிஷ்டம்
- நடன அமைப்பு - கே. மாதவன் மற்றும் கே. ஜே. சரசா (பரத நாட்டியம்)
- சண்டைப்பயிற்சி - சாரங்கன்
- சிறப்புக் கோர்வை - வி. ஜி. நாயர்
இசை
தொகுபடத்தின் இசையமைப்பாளர் சி. என். பாண்டுரங்கன் மற்றும் கச். ஆர். பத்மநாப சாஸ்திரி. பாடலாசிரியர்கள் சுரதா, தமிழழகன், வ.சு.ரா., கோவை குமரதேவன் மற்றும் வில்லிபுத்தன்[8].
வ. எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர்கள் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | இன்பம் கொண்டாடும் | பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ராணி | தமிழழகன் | 3:42 |
2 | கன்னிப் பருவம் அவள் | பி. பி. ஸ்ரீனிவாஸ், சூலமங்கலம் ராஜலட்சுமி | வில்லிபுத்தன் | 3:26 |
3 | ஆடி ஆடி என்ன கண்டாய் | ஏ. எல். ராகவன் | 4:13 | |
4 | காதலுக்கு காலேஜு எங்க இருக்கு | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | 3:15 | |
5 | தித்திக்கும் தமிழிலே | சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் ஜெயலட்சுமி | சுரதா | 3:40 |
6 | தெள்ளத் தெளிந்த தேன் | (ராதா) ஜெயலட்சுமி | வா. சு. ரா. | 2:39 |
7 | உல்லாச மங்கை இல்லாமல் | சூலமங்கலம் ராஜலட்சுமி | கோவை குமரதேவன் | 4:20 |