குறவஞ்சி ஒரு தமிழ் பாடல் நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.

பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர் குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. குறவஞ்சி இலக்கியம் பின்னாளில் குறத்திப்பாட்டு என்றும் வழங்கலாயிற்று.

குறவஞ்சி பாடல் நாடகங்கள் ஆரம்பத்தில் வசதிபடைத்தோருக்காக ஆடப்பெற்றாலும் அவற்றின் மையபாத்திரங்கள் நாடோடிகள் ஆவார்கள். குறவஞ்சியில் பல விதங்கள் உண்டு. அவற்றுள் "குறத்தி குறி கூறுவதுங் குறவனுடன் பேசி அளவளாவுவதுமாகிய செய்திகள் தலைமைபெறப் பாடும் குறவஞ்சி ஒரு பிரபல விதமாகும். குறிஞ்சி நிலத்துச் செய்திகளைக் குறவஞ்சி வருணிக்கும். சேரிவழக்கு முதலியன இதில் இடம்பெறும்"[1].

திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய குற்றாலக்குறவஞ்சி முதல் குறவஞ்சி நூல் ஆகும். குற்றால நாதனே பாட்டுடைத் தலைவன். அவனைக் காதலிக்கும் வசந்தவல்லி கதைத் தலைவி ஆவாள் . இந்நூலை எழுதிய ஆசிரியரை பாராட்டும் வகையில் 'குறவஞ்சிமேடு' என்னும் நிலப்பகுதியை மதுரையை ஆண்ட மன்னன் சொக்கலிங்க நாயக்கர் வழங்கினார்.


குறவஞ்சி நாடகங்கள் பற்றி ஆய்வு செய்வோரில் இந்திரா பீட்டர்சன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

குறவஞ்சிகள் தொகு

ஈழத்துக் குறவஞ்சிகள் தொகு

  • திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி
  • நகுமலைக் குறவஞ்சி
  • நல்லைக் குறவஞ்சி
  • நல்லைநகர்க் குறவஞ்சி
  • வண்ணைக் குறவஞ்சி
  • வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி

குறிப்புகள் தொகு

  1. "ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் - நூலகம் திட்டம்". Archived from the original on 2006-05-10. பார்க்கப்பட்ட நாள் 2006-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறவஞ்சி&oldid=3875272" இலிருந்து மீள்விக்கப்பட்டது