அழகர் குறவஞ்சி

தமிழ் இலக்கியத்தில் அழகர் குறவஞ்சி என்பது இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்ற குறவஞ்சி வகைகளில் ஒன்று. இலக்கியம், இசை இரண்டும் அமைந்த ஒன்று. இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிகுஞ்சர பாரதி. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் சமகாலத்தவர்.

இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது. அழகர் குறவஞ்சியில் பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர், தலைவி மோகனவல்லி. இக்குறவஞ்சி வெண்பா, விருத்தம், கீர்த்தனம், சிந்து, திபதை, அடிமடக்குத்திபதை, கும்மிக்கண்ணிகள், ஓரடி கீர்த்தனம் முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன. சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன. அத்துடன் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள் உள்ளன.


சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான வீணை, மத்தளம், தாளம், துந்தி, தம்புரு, மேளம், பேரி, முரசு, டமாரம், உடுக்கு, வேய், துடி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. நாட்டுப்பாடல் இசையான நொண்டிச் சிந்து, கும்மி, திபதை முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்_குறவஞ்சி&oldid=3363311" இலிருந்து மீள்விக்கப்பட்டது