டமாரம்

ஒரு பறை இசைக் கருவி

டமாரம் (Damaram) என்பது ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழ்நாட்டின் பாரம்பரிய இசைக் கருவி ஆகும். இதன் பயன்பாடு தற்போது தமிழ்நாட்டில் மிகவும் அருகி மறைந்துவிடும் நிலையில் உள்ளது. தொலைவில் உள்ளவருக்கும் இந்த இசைக்கருவியன் ஓசை கேட்கும் என்பதால் இதற்கு டமாரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நந்தி வாத்தியம் என்ற பெயரும் உண்டு.[1]இது முரசுவுடன் தொடர்புடையது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முன அமைந்த நகரா முரசு மண்டபத்தில்]] நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 4.30 முதல் 5.00 வரை டமாரம் ஒலிக்கப்படும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முன அமைந்த நகரா மண்டபத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 4.30 முதல் 5.00 வரை டமாரம் ஒலிக்கப்படும்

வடிவமைப்பு தொகு

புனித தோமையார் மலைப் பகுதியில் உள்ள ஆவுடைநாயகி உடனுறை நந்தீசுவரர் கோயிலி்ல் அடிப்பாகம் சுடுமண்ணால் செய்யப்பட்ட டமாரம் உள்ளது. திருபெரும்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மராத்தலான டமாரம் உள்ளது. டமாரமானது இரண்டு தனித்தனி பறைகளைக் கொண்டது. இவை பூச்சாடி போன்று அடிப்பாகம் குறுகியதாகவும் மேல்பாகம் அகன்றதாகவும் இருக்கின்றன. ஒன்று மாட்டுத் தோலால் மூடப்பட்டும், மற்றொன்று ஆட்டுத் தோலால் மூடப்பட்டவை. இவை அரலிக் குச்சிகள் கொண்டு இசைக்கப்படுகிறது. ஒரு குச்சி நீண்டும் மற்றோன்று சற்று வளைந்தும் இருக்கும்.[2] இடது பக்கம் வாசிக்கின்ற குச்சி கிண்ணாரம் என்றும், வலது பக்கம் வாசிக்கின்ற குச்சி கும்காரம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

ஒரு காலத்தில் நாகசுரத்துக்கு பக்க வாத்தியமாக டமாரம் இசைக்கபட்டு வந்தது. தவிலில் வாசிக்கக்கூடிய எல்லா தாளங்களையும் டமாரத்திலும் வாசிக்க இயலும். அதே போல் பிற தோல் இசைக் கருவிகளில் இசைக்கக்கூடிய திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம் ஆகிய ஐந்துவிதமான தாளங்களை டமாரத்தில் வாசிக்க இயலும்.[1]

  • டமாரம் இசைக்கருவியானது புனித தோமையார் மலைப் பகுதியில் உள்ள ஆவுடைநாயகி உடனுறை நந்தீசுவரர் கோயிலி்ல் சிறப்பு நாட்களிலும், மார்கழி மாதம் முழுவதும் காலை நேரங்களில் இசைக்கப்பட்டு வருகிறது.
  • திருபெரும்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் விழாக்களின்போது இசைக்கப்படுகிறது.

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 டம் டம் டமாரம் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 203. 
  2. Nandini, Dr M. Lalitha and M. (2019-08-29). "Damaram: The sound of divinity". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டமாரம்&oldid=3280482" இலிருந்து மீள்விக்கப்பட்டது